நடிகர் தனுஷ், பாடகர் திப்பு, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, பீட்டர் பால் , ஸ்ரீகாந்த் அக்கா போபோ சஷி, விவேக் மேர்வின் போன்ற பிரபலங்கள் பயின்ற புனித ஜான்ஸ் கொண்டாட்டம். - ஈழன் இளங்கோ


பாடசாலை நட்பு புனிதமானது, பலருக்கு அதை வாழ்நாளில் தொடர்வது அவ்வளவு இலகு அல்ல. ஆனால், 35 வருடங்களாக நண்பர்களுடனும், பயிற்சித்த  ஆசிரியர்களுடனும் நட்பை தொடர்வது அதிசயம் அல்லவா?
சென்னை ஆழ்வார்த்திருநகரில் அமைந்திருக்கும் புனித ஜான்ஸ் பள்ளியில் பயின்ற மாணவர்கள் இன்றுவரை அவர்களின் நட்பைத் தொடர்கிறார்கள், இது எப்படி?

நடிகர் தனுஷ், பாடகர் திப்பு, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, பீட்டர் பால் , ஸ்ரீகாந்த் அக்கா போபோ சஷி, விவேக் மேர்வின் போன்ற பிரபலங்கள் பயின்ற பாடசாலை, நினைத்தாலே இனிக்கிதல்லவா?

இந்த பாடசாலையில் ஈழத்து அகதியாக வந்து 1986 ஆம் ஆண்டு சேந்தவர் ஈழன் இளங்கோ, இன்று அவுஸ்திரேலியாவில் வசித்து வருகிறார்,  அவர் 2010 ஆம் ஆண்டு முகநூலில் பாடசாலை நண்பர்களுக்கென  ஒரு முகநூல் பக்கத்தை தொடங்கி, இன்று அது ஆயிரத்துக்கு மேற்பட்ட  உறுப்பினர்களை கொண்ட ஒரு முகநூல் பக்கமாக வளர்ச்சி அடைந்து, அதன் பத்தாவது ஆண்டு நிறைவுநாளை இந்த கொரோனா  காலத்திலும் zoom  மூலம் கொண்டாடி இருக்கிறார்கள், அதில் நூற்றுக்கணக்கான நண்பர்களும் ஆசிரியர்களும் பல நாடுகளில் இருந்து  கலந்துகொண்டு இருக்கிறார்கள்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தேனிசைத்தென்றல் தேவா அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார் , அவரின் மகன் ஸ்ரீகாந்த் தேவா அவர்கள், பழைய மாணவனாக கலந்துகொண்டது மட்டுமல்லாது, அவர் பயின்ற பாடசாலை ஆசிரியார்களுக்காக ஒரு பாடலையும் இசையமைத்து வெளியிட்டுள்ளார்.

இந்நிகழ்வில், பழைய மாணவர்கள், அவர்களின் குடும்ப அங்கத்தவர், குழந்தைகள் அனைவரும் பங்குபெற்று , பல கலை நிகழ்வுகள் நடைபெற்றன, அத்துடன், "திருமணத்திற்கு பிறகு   நட்பைத்தொடர்வது ஆண்களா பெண்களா" என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கமும் நடைபெற்றது. இதறக்கு நடுவராக, கத்தார் நாட்டில் வாழும் திருமதி. வாசுகி சத்யபாபு அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்...அதே கத்தார் நாட்டில் இருந்து, இப்பாடசாலையின் முன்னாள் மாணவி திருமதி.லட்சுமி சொக்கலிங்கம் அவர்கள் இந்த நிகழ்வை சிறப்பாக முன்நின்று  நடத்தினார். நிகழ்வுகள் மிக சிறப்பாகவும் குதுகலமாகவும் நடைபெற்றது. இக்குழு மூலம் நண்பர்களுக்கு நண்பர்கள், தேவைகள் ஏற்படும் போது ஒருவருக்கொருவர்  உதவி வருவது குறிப்பிடத்தக்கது. இணையதள சமூக வலைதளங்களுக்கு நன்றிகள் பல. No comments: