காதலுற்றுக் கை தொழுதால் கருணை மழை பொழிந்திடுவாள் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா  .... மெல்பேண்  ... ஆஸ்திரேலியா 


     


    வீணையிலும் இருப்பாள் வீசும்
           காற் றினிலும் இருப்பாள் 
    விண் ணொலியிலும் இருப்பாள் 
           விரிந்து நிற்கும் கடல்
    அலை யினிலும் இருப்பாள் 
          கானக் குயிலிலும் இருப்பாள்
    காக்கை குருவிகளிலும் இருப்பாள்
          மோனத் தவஞ் செய்யும்
    முனிவர் இடத்தும் இருப்பாள்  !


  மாதர் குரலிலும் இருப்பாள்
      மழலை பேச்சிலும் இருப்பாள்
 காதல் மொழியிலும் இருப்பாள்
      கண்ணன் குழலிலும் இருப்பாள் 
 கோதை பாட்டிலும் இருப்பாள் 
       குழவி சிரிப்பிலும் இருப்பாள்
 நீதி குறளிலும் இருப்பாள்
      நீக்க மின்றி அவளிருப்பாள்  !


வேத நெறியிலும் இருப்பாள்
     வெண்மை நிறத்திலும் இருப்பாள்
கீதை கருத்திலும் இருப்பாள் 
      கிள்ளை குரலிலும் இருப்பாள்
நாதன் உடுக்கிலும் இருப்பாள்
     நான்முகம் நாக்கிலும் இருப்பாள் 
காதலுற்றுக்  கை தொழுதால்

       கருணை மழை பொழிந்திடுவாள்  !  




No comments: