.
முன்னைய காலங்களில் சில கிராமதுக்கு கிராமம் வழக்கங்கள் நடை முறைகள் வேறுபட்டிருக்கும். இருக்கும் இப்படியான ஒரு கிராமத்தில் குடும்பத்திலுள்ள ஆண் பிள்ளைகள் பதினாறு வயதை அடைந்ததும் ஒரு இரவு காட்டில் தங்க வேண்டும். அங்கு பல வகை கொடிய மிருகங்கள் இருக்கும் . அவர்களது பதினைந்தாவது வயதில் வில் பயிற்சி ஈட்டி எறிதல் விலங்குகளை தாக்கி தப்பித்தல் முதலிய தற்காப்பு கலைகள் யாவும் சொல்லி கொடுக்கப்படும் . இப்படியாக ஒரு குடியானவன் மகனுக்கு பதினாறாவது பிறந்த நாள் வந்தது மறு நாள் அவன் காட்டுக்கு செல்ல வேண்டும். முதல் நாள் குடியானவன் சகல புத்திமதி கள் யுக்திகளை மீண்டும் மீண்டும் ஞாபக படுத்தினான்
மறு நாள் மாலையானதும் தந்தை காட்டுக்குள் அழைத்து சென்றார் . மகன் கண் கலங்கிய வாறே தந்தையுடன் சென்றான். அங்கே ஒரு நிழல் மரத்தின் கீழே இருக்க விட்டு தந்தை வீட்டுக்கு செல்வதாக கூறி வந்து விட் டார். மாலை இரவா னது. வா னத்தில் நட்ஷத்திரங்கள் மின்ன தொடங்கி விட்ட்ன எங்கும் ஒரே இருட்டு . மகனோ தூக்கமின்றி விழித்துக் கொண்டிருந்தான் பயத்தாலும் தனிமையாலும் ..நேரம் ஓடிக் கொண்டு இருந்தது
.ஒரு வாறு பொழுது புலரத்தொடங்கிவிட்ட்து
...தூரத்தே ஒரு வேடன் வில்லும் அம்புக ளும் கொண்டு வருவதைக் கண்டான். இவனுக்கு பயமாக இருந்தது ...அந்த உருவம் கிட் வந்த போ து அது ..அப்பாவின் நடை போன்று இருந்தது. மிக அண்மித்தும் அது அப்பாவே தான் வேடன் வேஷத்தில் வந்திருந்தார் ..இவன் காட்டித் தழுவி அழுதான்.
" நன்றாக தூங்கினாயா என்று கேடடார் . இல்லையப்பா எப்படி தூங்க முடியும் ? என்றான் . மகனே நான் இரவு முழுதும் தூங்காமல் சற்று தூர உள்ள மரத்தைக் காட்டி "அங்கு தான் நான் உனக்கு காவல் இருந்தேன். " என்கிறார். இதை நேற்றைக்கே சொல்லியிருக்கலாமே நான் நன்றாக தூங்கி இருப்பேனே என்றான் மகன்.
எல்லா அப்பாக்களும் இப்படித்தான் . குழந்தைகளை நெஞ்சிலே சுமப்பார் . கவனிக்காமல் இருப்பது போலெ தெரியும் ஆனால் அத்தனையும் கூர்ந்தது கவனித்து கொண்டே இருப்பார். அப்பாவுக்கு ஈடு இணை யாருமே இல்லை
முன்பு நாம் சைக்கிள் பழக ஆசைப்படும் போ து ...அப்பா பின்னால் பிடித்துக்கொண்டு இருப்பா ர் ..அப்பா பிடிக்கிறார் என்ற துணிவில் தைரியத்தில் நாம் ஓட முயற்சிப்போம். ஓடிக் கொண்டு இருக்கும் போ து இடை இடையே வி ட்டு விட்டு பிடிப்பார் . நாமாகவே ஓடடுவோம்.
"நான் ஓடுவேனா ? அப்பா என்றால் இது வரை நான் பிடிக்காமல் நீ தானே தனியாக ஓட டினாய் என்பார். அப்போது நமக்கு தைரியம் வந்து விடும். இன்னும் துணிவாக சற்று வேகமாக ஓட டிட தைரியம் வரும் . அப்பாக்கள் என்றும் நிழல் போல எம்மோடு தான் இருப்பா ர்கள்.
அப்பாக்கள் என்றும் அப்பாக்கள் தான்.
Nantri https://yarl.com/
No comments:
Post a Comment