பொன்விழா ஆண்டில் இந்த படங்கள் 7 - எதிரொலி - சுந்தரதாஸ்

.



நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிக்க இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் டைரக்ட் செய்து உருவான படம் எதிரொலி . பாலச்சந்தரின் டைரக்ஷனில் சிவாஜி நடித்த ஒரே படமும் இதுதான். சிவாஜியின் நடிப்பில் பாகப்பிரிவினை பாலும்-பழமும் ஆகிய வெற்றிப்படங்களை தயாரித்த என் வேலுமணி எம்ஜிஆரை வைத்து சில படங்களை தயாரித்து விட்டு மீண்டும் சிவாஜியிடம் திரும்பினார். புது இயக்குனராக அறிமுகமாகி பிரபலமடைந்து கொண்டிருந்த பாலச்சந்தரின் இயக்கத்தில் சிவாஜி நடிக்க ஒரு படத்தை தயாரித்தால் வெற்றி காணலாம் என்ற எண்ணத்தில் எதிரொலி படத்தை தயாரித்தார்.

சிவாஜியும் பாலசந்தரும் இணைகிறார்கள் என்றவுடன் திரையுலகில் எதிர்பார்ப்பு எகிறியது. வித்தியாசமான படத்தை இருவரும் தரப் போகிறார்கள் என்று உற்சாகம் ரசிகர்களையும் பற்றிக்கொண்டது. அதற்கு ஏற்றாற்போல் படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக கேஆர்விஜயா, இவர்களுடன் இலட்சிய நடிகர் எஸ்எஸ் ராஜேந்திரன் சுந்தரராஜன், நாகேஷ், வி கே ஆர், விஜயலலிதா ஆகியோரும் நடித்திருந்தார்கள் . இவர்களுடன் காதல் ஜோடிகளாக சிவகுமாரும் லட்சுமியும் தோன்றினார்கள்



படத்தின் நாயகன் ஒரு கிரிமினல் வழக்குரைஞர் எந்த வழக்கையும் தனது திறமையால் வெற்றிகாண கூடியவன், சந்தர்ப்ப சூழலால் அவனே ஒரு குற்றத்தை செய்யும் சூழ்நிலைக்கு ஆளாகிறான். ஒரு டாக்சி டிரைவர் கதாநாயகனின் பலவீனத்தை அறிந்து அவனை மிரட்டி பணம் பறிக்கிறான். திறமையான வக்கீல் தன்னுடைய பிரச்சினையில் இருந்து மீள்வதற்கு வழி தெரியாமல் தவிக்கிறான் . பாலச்சந்தரின் இந்தக் கதைக்கு சிவாஜியின் கதாபாத்திரம் ஒரு பலவீனமான பாத்திரமாக சித்தரிக்கப்பட்டிருந்தது.

இந்த படம் தொடர்பாக பாலச்சந்தர் இப்படி நினைவுகூர்ந்தார் எப்போதும் எந்த படத்தில் நடித்தாலும் அதில் தன் கேரக்டர் என்ன கதை என்ன என்பதை முழுமையாக தெரிந்து கொண்டு நடிக்கக் கூடியவர் சிவாஜி. என் மீதுள்ள நம்பிக்கையில் என் போக்கிலேயே விட்டு விட்டார். படத்தில் சிவாஜி நடிக்கத் தொடங்கிய போது நான் அவரிடம் காட்சியை விளக்கி நடிக்கச் சொல்வேன் ஆனால் அவரோ நீ மற்றவர்களுக்கு எப்படி நடிக்கச் சொல்லி கொடுகிராயோ அதே போல் எனக்கும் நடித்து காட்டு என்பார், நான் அதை ஏற்கவில்லை நான் போய் உங்களுக்கு நடிப்புச் சொல்லி கொடுப்பதா என்று மறுத்து விட்டேன் என்று கூறினார் பாலச்சந்தர்.


சிவாஜி தனது மிகை நடிப்பை வெளிப்படுத்தாது நடித்திருந்தார் சுந்தரராஜனுக்கு இதில் வில்லன் வேடம் அதட்டல் மிரட்டல் இல்லாத பாசாங்குத்தனம் செய்யும் பாத்திரம் நன்றாக நடித்திருந்தார் இவர்களுக்கு ஈடாக கேஆர்விஜயா நடித்திருந்தார் சிவாஜி அறிமுகமாகும் கோர்ட் சீன் காட்சியில் வசனம் பேசாமலேயே காட்சியை தன் கண்களாலேயே விசாரித்து வழக்கை வென்று விடுவார் இந்த காட்சியில் பாலச்சந்தரின் இயக்குனர் முத்திரை பளிச்சிட்டது லட்சுமிஇடம் சிவக்குமார் காதலிக்கிறாரா என்று லட்சுமியிடம் கேட்கும் சிவாஜி இது ஒரு தலை காதல தருதலைக் காதலா என்று கூறும் போது பாலச்சந்திரன் வசனம் பளிச்சிட்டது. ஆனால் திரைக்கதையில் பாலச்சந்தரும் கோட்டை விட்டு விட்டார் என்றே சொல்ல வேண்டும் படம் முழுவதும் சிவாஜி சுந்தரராஜன் ஆல் விரட்டப்படுவது ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை இதனால் திறமையான நடிகர்கள் நடித்தும் படம் ரசிகர்களை முழுமையாக கவர தவறிவிட்டது .


பாலச்சந்தர் இயக்கத்திலேயே மணி தயாரித்த படத்துக்கு கேவி மகாதேவன் முதலும் கடைசியுமாக இசை அமைத்திருந்தார் ஆனால் பாடல்களும் வெற்றி பெறவில்லை படத்தில் சிவாஜிக்கு பாடலே இல்லை என்பது குறிப்பிடக்கூடியது பாலச்சந்தரின் படங்களில் தொடர்ந்து நடித்து கொண்டிருந்த கவர்ச்சிநடிகை விஜயலலிதாவுக்கு இந்த படத்தில் குணச்சித்திர வேடம் ஒன்றை வழங்கிஇருந்தார் பாலசந்தர். படம் நூறு நாள் ஓடியிருக்க வேண்டும் ஆனால் 50 நாட்கள் தான் போயிற்று என்கிறார் பாலச்சந்தர் யானைக்கும் அடி சறுக்கும் என்பார்கள் இங்கே இரண்டு யானைகளுக்கும் சிவாஜி பாலச்சந்தர் ஆதி சறுக்கி வி ட்டது

No comments: