ஓங்கிஇனம் வாழ்ந்திடவே அன்று அவர் உயிர்துறந்தார் - பரமபுத்திரன்


பதித்து அவர்  நடந்திட்ட மண்ணும் – என்றும்
வீழந்தாலும் வித்துடல்கள்  யாருக்கும் கிடைப்பதில்லை   
எப்போதும் ஈழமே  நினைப்பாக வாழந்தமையால்
காற்றிலும்   நீரிலும்   மண்ணிலும்  கலந்து
வாழ்கிறார் என்றும் ஈழத்தைச் சூழந்து
அன்பினால் இணைந்து  அயலானை நேசித்து
பண்பாடு பேணி மற்றோரை  மதித்து
கொண்டாடி மகிழ்ந்து  நன்றாக வாழந்த
நல்இனமாம் நம்ஈழத்தமிழினம் என்கிறது வரலாறு
வந்தார்கள் ஐரோப்பியர் காட்டினார்கள் பணத்தாசை
போக்கினார்கள் ஒற்றுமை நீக்கினார்கள் பண்பாடு 
ஆக்கினார்கள் ஏற்றத்தாழ்வு மாற்றினார்கள் நற்பண்பு
உருவாக்கினார்கள்  தன்னினத்தை இழிவுபடுத்தும் தாழ்குணத்தை
பின்னும் கொடுத்தார்கள் சிங்களனுக்கு 
எமையாளும் உயர்பொறுப்பை 
சிங்களரோ  எங்களை சிறுபான்மை என்றார்கள்
தங்களை சிங்கங்கள் என்றேதான் சொன்னார்கள்  
அடித்தார்கள் உதைத்தார்கள் சுட்டார்கள் எரித்தார்கள்
ஓடஓட  தமிழனை விரட்டிவிரட்டி வெட்டினார்கள் 
கேட்பதற்கு ஆளில்லை
நொந்தார்கள்  வெந்தார்கள் வேறுவழியின்றித் தவித்தார்கள்
கும்பிட்டார்கள்
கூனிக்குறுகி கைகட்டி நின்றார்கள்  
பயந்து ஒதுங்கி வாழ்ந்தார்கள்  
எழுந்தார் பெரும்தலைவர் 
வகுத்தார் புதுப்பாதை 
உதித்தார்கள் கரும்புலிகள்

எங்கு வெடிக்குமோ எவன் வெடிப்பானோ எதனைத்  தகர்ப்பானோ
என்றேங்க வைத்தார்கள்  எதிரிகளை பயந்தபடி 
சுகத்தினை நேசித்து துயருடன் வாழ்ந்தவர்கள்
சுடலைக்கு செல்கையில் தூக்கிட நான்குபேர் 
தமிழ்இனத்தினை நேசித்த கரும்புலி மறவனோ
தூக்கியே செல்வான் எதிரிக்கு பேரிடியை
தேவையில்லை இவனுக்கு தூக்கிச்செல்ல ஒருவர்கூட
இருக்கும் காலம்வரை உடனிருந்த நண்பருக்கும்
தகர்க்கப் போகின்ற எதிரிநிலை சொல்வதில்லை 
கூடஇருந் தவர்க்கும் சொல்லாமல் கொள்ளாமல்
போய்விடுவர் எங்கென்று  யாருக்கும் தெரியாமல்
கூட்டிச் சென்றவனோ மனம்வெதும்பிப் பார்த்திருப்பான்
எங்கேயோ ஒருசத்தம் பெரியதாக கேட்டவுடன்
அவனும்  அழுவான் போராளியும் மனிதன்தானே
அம்மாவுக்கும் தெரியாது அப்பாவுக்கும் தெரியாது
நண்பருக்கும் புரியாது செய்திமட்டும் உறுதியாகும் -  தேடிச்சென்ற 
இலக்கினை  சாய்த்துவிட்டு வென்றுவிட்டான் கரும்புலி
அன்னை      தமிழ்மண்ணில் அணையாத பெரும்காதல்
எண்ணக்      கனவுகளில்    எப்போதும்  தமிழ்மக்கள்
வண்ண       நினைவுகளை  சுவைப்பதில் விருப்பில்லை
உண்ண      உணவுதனை  மக்களிடம்  வேண்டியதால்
திண்ணமாய்  அவர்க்காக  உடலையும்  சிதைத்திடுவர் – ஐயோ  
வன்முறை  வேண்டாமென வாய்கிழிய பேசுவோர்கள்
மென்முறையாய்க் கூனி  தேவைகளை முடித்திடுவர் 
மற்றவர்கள் தேவைகளை சற்றேனும் பார்க்கமாட்டார்
பின்னும் நம்வீரர்களை இழித்திடவும் தயங்கமாட்டார் – கொழும்பில்
தன்முன்னே வெடிகொண்டு  சிதைந்துபோன இளவலதை
கண்ணுற்ற சந்திரிக்கா கலங்கிப்போய்  சொன்னார்கள்
விரக்தியுடன் இங்கிந்த இளையவர்கள் போராட
எங்கேயோ தமிழர்க்கு குறையுண்டு அறிந்திடுக
எம்மிடையே பலர்இன்னும்  அதைக்கூட உணரவில்லை
ஆளுக்கொரு திக்காக அடிபடவே நினைக்கிறார்கள்
உலகெல்லாம் தமிழுண்டு அவர்க்கில்லை நாடென்று
உணர்ச்சியாக பேசிக்கொண்டு உரிமைகளை கேட்பதுபோல்
தமக்காக   இடம்சேர்த்து  சிறப்பாக வாழுகின்றார்
ஆக்கிரமிப்பை அழிக்கின்ற உத்வேகம் துளியுமில்லை
அன்றுமுதல் இன்றுவரை அதுதமிழன் சாபக்கேடு
பத்துத்திங்கள் தொந்தியிலே பத்திரமாய்  வைத்திருந்து
நித்தநித்தம்   பத்தியம் சுத்தமாய் காத்திருந்து
இப்புவியில் பக்குவமாய் இறக்கிவைத்த தவக்கொழுந்து
மக்கள்துயர் போக்கிடவே மகிழ்ச்சியுடன் உயிர்துறந்தான்
கலங்குகிறாள் சுமந்தவள் கருத்தில் கொள்ளவேண்டுமதை
பழங்கதைகள் எங்களுக்கு வீரக்கதை சொல்கிறது
பாரினிலே நிலைநாட்டி வாழ்ந்தவர்கள் கரும்புலிகள் 
எப்போதும் எல்லாமே கனவாகிப் போவதில்லை
களம்புகுந்த வீரர்நிலை வீணாகிப் போகாது
கொண்டாடச் சொல்லி எமைக்கேட்டுப் போகவில்லை – அவரை
கொண்டாட விட்டால் நாம் உண்மைத் தமிழரில்லை 
ஓங்கிஇனம்  வாழ்ந்திடவே  அன்றுஅவர் உயிர்துறந்தார்
ஓங்கிஇனம்   வாழும்இனிக்  கரும்புலிகள் ஆசியுடன்No comments: