மவுண்ட்றூயிட் தமிழ் கல்வி நிலைய ஆசிரியர் பயிற்சிப்பட்டறை – 2020 - பரமபுத்திரன்

.


மவுண்ட்றூயிட் தமிழ் கல்வி நிலையத்தின் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை 15.03.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை Colyton Public School இல் நடைபெற்றது. மவுண்ட்றூயிட் கல்வி நிலைய அதிபர் உப அதிபர்,  ஆசிரியர்கள், நிர்வாகத்தினர் பங்குபற்றிய இப்பயிற்சிப் பட்டறையில் சிறப்பு விருந்தினராக தமிழ் ஆசிரியர் திரு.ரகுராம் நவரட்ணம் அவர்களும் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார். கடந்த ஆண்டு (2019) நிர்வாகத் தலைவராக செயற்பட்ட திரு.சிவரத்தினம் சுதாகரன் அவர்கள் நிர்வாகத்துடன் இணைந்து ஆசிரியர்களின் விருப்புடன் ‘ஆசிரியர் பயிற்சிப் பட்டறை 2019’ நிகழ்வினை முதல் முறையாக ஆரம்பித்திருந்தார். தற்போதைய (2020) பள்ளியின் நிர்வாக தலைவர் திரு. தேவராசா கில்பேட் அவர்கள், நிர்வாகத்தை ஒன்றுகூட்டி  ஆசிரியர் பயிற்சிப்பட்டறையை மீண்டும் இரண்டாவது தடவையாக ஒழுங்குசெய்திருந்தார். நிர்வாகத்தினரின் வேண்டுகைக்கு ஏற்ப கல்விநிலைய அதிபர் திரு.பாலசுப்பிரமணியம் முரளீதரன் அவர்கள் ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கி பட்டறைக்கான நிகழ்ச்சி நிரலை தயாரித்திருந்தார்.குறித்த நேரத்திற்கு அதிபர், உபஅதிபர், ஆசிரியர்கள், நிர்வாக தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் பயிற்சிப் பட்டறைக்கு சமுகமளித்திருந்தினர். அதிபர் அவர்களால் பயிற்சிப்பட்டறை நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது. அகவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில் முதலில் பள்ளியின் நிர்வாக தலைவர் அவர்களால் வாழ்த்துரை வழங்கப்பட்டது. அவரது வாழ்த்துரையில் ஆசிரியர்கள் எங்கள் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கும், பாடசாலையின் உயர்வுக்கும் உறுதுணையாக இருக்கின்றார்கள். எனவே எங்கள் பள்ளியின் ஆசிரியர்களும் உயர்வடைய வேண்டும். தங்களிடையே இருக்கும் ஆற்றல்களை ஒருவருக்கு ஒருவர் பகிரவேண்டும், அதன் மூலம் ஆசிரியர்களிடையே நல்ல பிணைப்பு உருவாகவேண்டும். இப்பிணைப்பு எமது பள்ளியின் பிள்ளைகளை அடுத்த தரத்திற்கு அழைத்துச் செல்லவேண்டும். அதேவேளை நிர்வாகம், அதிபர், உபஅதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இடையே நல்ல உறவு வளரவேண்டும் இதற்கு பயிற்சிப்பட்டறை வழி அமைக்க வேண்டும். அத்துடன் மாணவர்களை மேலும் ஊக்குவிக்க இன்றைய நாள் உதவவேண்டும் என்று கூறி தனது வாழ்த்துரையினை நிறைவுசெய்தார். தொடர்ந்து அதிபர் அவர்கள் பயிற்சிப்பட்டறை நிகழ்வினை நெறிப்படுத்தினார்.அதிபர் அவர்கள் தனது ஆரம்ப உரையில் எமது கல்வி நிலையத்தில் முன்பள்ளி வகுப்பு முதல் பத்தாம் ஆண்டுவரை பன்னிரண்டு வகுப்புகள் நடைபெறுகின்றன. இந்த வகுப்புகளுக்கு கற்பிப்பதற்காக பதினேழு ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இன்றைய பயிற்சிப்பட்டறையில் பதினொரு ஆசிரியர்கள் தங்கள் பயிற்சியை வழங்கஉள்ளார்கள். அத்துடன் எமது பாடசாலையில் உயர்வகுப்புகள் தொடர்பான வழிகாட்டல் வழங்குவதற்காக சிறப்பு விருந்தினர் அவர்கள் பயிற்சி வழங்கவுள்ளார் என்று குறிப்பிட்டார். தொடர்ந்து பட்டறை நிகழ்வினை ஆரம்பித்து முதலாவது பயிற்சியை வழங்க ஆண்டு இரண்டு வகுப்பு ஆசிரியர் பாமரதி மகேஸ்வரமூர்த்தி அவர்களை அழைத்தார். பயிற்சிப்பட்டறை என்ற நோக்கில் நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டு இருந்த போதும்ää முற்றுமுழுதாக பயிற்சிப்பட்டறையாக அமையாது10 ஆசிரியர்களின்; கருத்துக்களுடனே பெருமளவில் நிகழ்வு நகர்ந்தது. காரணம் எல்லா ஆசிரியர்களும் தங்கள் அனுபவங்களை பகிரவேண்டும் என்பதற்காக ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் ஏழு நிமிட நேரம் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது.
ஆண்டு இரண்டு வகுப்பு ஆசிரியர் அவர்கள் கற்பித்தல் முறைகள் எனும் தலைப்பில் விளக்கமளித்தார். மாணவர்களின் வகுப்பறை செயற்பாடுகளை ஆடல், பாடல்,,உரையாடல் மூலம் நிகழ்த்துவதாக கூறியதுடன், மாணவர்கள் தங்களை பெயர், வகுப்பு என்பவற்றை கூறி அறிமுகம் செய்தல், ஒருவருடன் ஒருவர் உரையாடி விபரங்களை தெரிந்து வகுப்பில் சொல்லுதல், விண்ணப்பபடிவங்களில் தங்கள் அம்மா, அப்பா பெயர்களை தமிழில் எழுதுதல் படங்கள் வரைய ஊக்குவித்தல் என்பன மூலம் கற்பிப்பதாக கூறி விடைபெற்றார். அதனைத் தொடர்ந்து முன்பள்ளி ஆசிரியர்கள் தயாளினி முரளீதரன், சரஸ்வதி விஜயசங்கர் ஆகியோர் உள்நுழைந்தனர்.முன்பள்ளி ஆசிரியர்கள் தாங்கள் வகுப்பறையில் பயன்படுத்தும் சகல உபகரணங்களையும் கொண்டு வந்திருந்தனர். மாணவர்களுக்கு எழுத்து அறிமுகம் செய்தல், கதைகள் சொல்லுதல், படம்பார்த்து கதை சொல்லுதல், எழுத்து எழுத பயிற்றுவித்தல், சொற்களை ஆக்கி தாமாக வாசித்தல், பாடல்களுக்கு அபிநயம் செய்தல், நாடகம் நடித்தல் போன்ற உத்திகளை பயன்படுத்தி கற்பித்தல் நிகழ்த்துவதை செயலில் காட்டி சென்றனர். அடுத்து வகுப்பறை முகாமைத்துவம் என்ற தலைப்புடன் பாலர் வகுப்பு ஆசிரியர் நிருபா ஜனார்த்தனன் தனது பயிற்சியினை ஆரம்பித்தார்.வகுப்பறையில் வேறுபட்ட மாணவர்கள் இருப்பார்கள். அவர்களை நன்கு அறிந்தாலே வகுப்பறையை முகாமை செய்யமுடியும். அதேபோன்று பாலர் வகுப்பு மாணவர்களின் கற்கை முறைகளும் தெரிந்திருக்க வேண்டும் என எட்டு வகையான கற்றல் முறைகளை அறிமுகப்படுத்தினர். மேலும் மாணவர்களின் குறுகியகால ஞாபகம், நீண்டகால ஞாபகம் என்பவற்றை கூறி மொழிகற்பிக்கும் போது குறுகியகால ஞாபகத்தை நீண்டகால ஞாபகமாக்க அவர்களுக்கு மீளமீள ஞாபகப்படுத்த வேண்டும் என்பது மட்டுமல்ல பாராட்டுகள் பரிசுகள் வழங்குவது கற்பித்தலில் நற்பலனைத் தரும்10 அதுமட்;டுமல்ல  மாணவர்கள் மீது நேசமுள்ளவர்களாக ஆசிரியர்களாகிய நாம் எப்போதும் இருக்கவேண்டி உள்ளதால் அவர்களை பாராட்டுகள் மூலம் வழி நடத்துவது இலகு எனக் கூறினார். தொடர்ந்து பாலர்களுக்கான கற்பித்தல் முறைகள் என்னும் தலைப்புடன் ஆண்டு ஒன்று ஆசிரியர் கஜந்தி சதீஸ்கரன் வருகை தந்தார்.பாலர்களுக்கான கற்பித்தல்முறைகள் என்னும் தலைப்பில்; மாணவர்களை உற்சாகமூட்டி கற்க வைத்தல் தொடர்பாக கூறினர். அதில் வினாவிடை கேட்டல், பாடுதல், ஆடுதல், வரைதல் போன்ற செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் வழங்கி கற்பிப்பது நன்று என்று கூறி மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்குவதும் கற்க தூண்டும் எனக் கூறினார். தொடர்ந்து ஆண்டு மூன்று ஆசிரியர் அனிதா சிவசங்கர் பயிற்சி வழங்கினார்.மொழி கற்பிக்கும் பிரதான தொழில்நுட்பமாக வாய்மொழித் தொடர்பாடல் இருக்கும் எனவே வாய்மொழி தொடர்பாடலுக்கு முக்கியத்துவம் வழங்கி படங்களை பார்த்து விவரித்தல், வாசிப்பினை விருத்தி செய்தல் என்பவற்றை செய்வதாக கூறி அவற்றை செய்து காட்டினார். அது மட்டுமல்லாமல், சொற்களை தாமாக எழுதுதல், எழுதியவற்றை வாசித்தல், இந்த அடிப்படையில் மாணவர்களை வழிப்படுத்தி எழுதும் ஆற்றலை ஊக்குவித்தல் என்பவற்றை எவ்வாறு செய்கிறார் எனவும் விளக்கினார். அடுத்து ஆண்டு நான்கு ஆசிரியர்  எமிலியானுஸ் எல்விஸ் அவர்கள் புதிதளித்தல் என்னும் தலைப்புடன் நுழைந்தார்.புதிதளித்தலுக்காக ஏனைய ஆசிரியர்களையும் அழைத்து செயற்பாட்டில் இறங்கினார். காற்று அடிக்கும் போது மரங்கள் அசைதல் மற்றும் செயற்பாடுகளை செய்து இவற்றை விளக்குங்கள் என்று கூறும்போது மாணவர்கள் உற்சாகமாக அவற்றை விளக்கமுனைவர். இதன் மூலம் உரையாடுவர். பின்பு அதனை எழுதும் படி கேட்டால் எழுதுவர் எனவும் குறிப்பிட்டார். தொடர்ந்து ஆண்டு ஐந்து ஆசிரியர் சாந்தி ஜெயதேவன் அவர்கள் வாசிப்புத் திறன்விருத்தி தொடர்பாக விளக்கினார்.
வாசிப்பு மொழிக்கற்றலில் முக்கியபாகம் எனக் கூறிய ஆசிரியர், வாசிப்பதன் மூலம் மாணவர்களின் கிரகித்தலை மேம்படுத்தும் உத்திகளையும் எடுத்துக் காட்டினார். மேலும் மாணவர்கள் உரத்து வாசிக்கப் பழகினால் அது பேசுவதற்கும் உதவும் அதேவேளை கிரகிக்கவும் பழகுவர். அதன் மூலம் எழுதப்பழகுவர். அத்துடன் வாசிக்கும் செய்திகளை ஞாபகப்படுத்திக் கூறப்பழகுவர் என்றும் விளக்கினார். தொடர்ந்து ஆண்டு ஆறு வகுப்பு ஆசிரியர் குலவீரசிங்கம் இராஜேஸ்வரி பயிற்சி வழங்கினார்.மணவர்களை இறுதிப் பரீட்சைக்கு (ர்ளுஊ) தயார்படுத்தும் நோக்கில் அவரது பயிற்சி அமைந்திருந்தது. பரீட்சை வினாத்தாள் அடிப்படையில் மாணவர்களின் ஆய்வுத்திறனை தரம் ஆறிலிருந்து ஊக்குவித்தல் நன்று எனக்கூறி அதுமட்டுமல்ல மாணவர்களின் எழுதும் ஆற்றலை விருத்தி செய்யவேண்டும் எனவும் எடுத்துக்கூறினார். தொடர்ந்து ஆண்டு ஏழு வகுப்பு ஆசிரியர் பரமேசுவரன் இரங்கநாதன் உள்நுழைந்தார்.

கற்பித்தல் முறைகளை மாற்றி, இன்றைய எண்முறை மாணவர்கள் (னுபைவையட யேவiஎநள) கற்க விரும்பும் முறையில் கற்பித்தல் முறைகளை செயல்படுத்த வேண்டும்இ ஆசிரியர்கள்தான் மொழியை கற்கும் ஆர்வத்தினை மாணவர்களுக்கு ஊட்டவேண்டும்இ ஆய்வு செய்து கற்கும் நிலைக்கு மாணவர்களை தூண்டவேண்டும் எனவும் கூறினார். தொடர்ந்து ஆண்டு எட்டு வகுப்பு  ஆசிரியர் செல்வராஜி இரங்கநாதன் பயிற்சி வழங்கினார்.தமிழ்மொழியில் சொற்புணர்ச்சி எனும் தலைப்பில் இயல்புப்புணர்ச்சி, விகாரப்புணர்ச்சி, விகாரப்புணர்ச்சி என்பதில் தோன்றல், கெடுதல், விகாரம் என்பவற்றை மாணவர்களுக்கு எவ்வாறு விளக்கலாம் என உதாரணங்களுடன் செய்து காட்டினார். அடுத்து ஆண்டு பத்து வகுப்பு ஆசிரியர் சாமித்தம்பி கனகசிங்கம் அவர்கள் தமிழ்மொழி உச்சரிப்பு தொடர்பாக விளக்கமளித்தார்.


தமிழில் உச்சரிப்பு கவனம் செலுத்தப்பட வேண்டிய ஒன்று. ஆனாலும் இடத்திற்கிடம் இது மாறுபடும் நிலையும் உண்டு எனத்தெரிவித்தார். அதேபோல் தற்போதைய நிலையில் சொற்களஞ்சிய அடிப்படையில் தமிழ் எது வடமொழி எது என கண்டுபிடிப்பது கடினம் என்றும் விளக்கி  முடிந்தளவு தவிர்க்கலாம் முற்றாக தவிர்ப்பது சிரமமாக உள்ளது என்றார். அடுத்து சிறப்பு விருந்தினர் அவர்கள் ர்ளுஊ மாணவர்களின் வினாத்தாள் அமைப்பையும் அதற்குரிய புள்ளிகளின் விபரங்களையும் கூறினார்.

பிரதானமாக மாணவர்கள் தங்கள் ஆய்வுத்திறனை வெளிக்காட்ட வேண்டும். அதாவது மாணவர்கள் தங்களால் தெரிவு செய்யப்பட்ட தலைப்பு தொடர்பாக தெளிவாக ஆய்வு செய்து, ஆங்கில சொற்கலப்பின்றி முற்றாக தமிழில் கூறவேண்டும். அத்துடன் கிரகித்தலில் சிறப்புத் தேர்ச்சி பெறவேண்டும். தமிழில் சொல்லப்படும் செய்தியை கிரகித்து அதனை ஆங்கிலத்தில் அல்லதுää ஆங்கிலத்தில் சொல்லப்படும் செய்தியை உள்வாங்கி தமிழில் எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும். இது அவர்கள் உயர்வான புள்ளிகள் பெற வழிவகுக்கும் என விளக்கினார் பயிற்சி பட்டறையை தொடர்ந்து ஆசிரியர்களின் குழுநிலைச் செயற்பாடுகளும் என திட்டமிடப்பட்ட போதும் நேரப் பற்றாக்குறை காரணமாக பிற்பகல் 1.30 மணியுடன் பயிற்சிப்பட்டறை நிறைவு செய்யப்பட்டு அனைவருக்கும் மதியபோசனம் வழங்கப்பட்டது.ஒவ்வொரு ஆசிரியர்களும் தங்கள் மாணவர்களுக்கு கற்பிக்கின்றோம் எனக் கற்பிக்காதுää மாணவர்களின் தேவை அடுத்த வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி என்ற வகையில் கற்பிப்பதை தங்கள் பயிற்சிப்பட்டறையில் தெளிவாக்கினர். அதேபோன்று ஒவ்வொரு ஆசிரியர்களும் தங்கள் வகுப்புக்கு வரும் மாணவர்கள் எப்படி இருத்தல் வேண்டும் எனவும் கூறினர். நல்ல ஆரோக்கியமான சூழலை அமைத்து பயிற்சிப்பட்டறை வெற்றிகரமாக நிகழ தலைவரும் நிர்வாகமும் உதவியதுடன்ää உபஅதிபர் கொலின்தேவராசா சதீஸ்கரன் அவர்கள் பயிற்சிப்பட்டறைக்கான உபகரண ஒழுங்கமைப்புகளை செய்திருந்தார். அதிபர் அவர்கள் நிகழ்வினை திறம்பட ஒழுங்கமைத்து ஆசிரியர்களின் வாண்மை விருத்திக்;கு உதவினார் என்று சொல்ல முடியும்.
No comments: