யாழ் மத்திய கல்லூரியின் மதுர கானம் 2020 - செ .பாஸ்கரன்


.

யாழ் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் சிட்னிகிளையினர் சிட்னியில்  நேற்று சனிக்கிழமை 13.03.2020 மதுரகானம் 2020 நிகழ்ச்சியை ஒழுங்கு செய்திருந்தார்கள். இந்த நிகழ்ச்சியிலே இலங்கையிலிருந்து சக்தி ரிவி வெற்றியாளர் ஸ்ரீவத்சலா இலங்கையிலே புகழ்பெற்ற பாடகர் ஸ்டான்லி அதேபோல் இந்தியாவிலே ஜீ  தமிழ் ரிவி வெற்றியாளர் அஸ்லாம் அவரோடு இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்ட சுகன்யா விஜய் ரிவியில் பல நிகழ்ச்சிகளில் வெற்றிகளை தட்டி கொண்ட அமுதவாணன் நடனக் கலைஞர் பல் குரல் மன்னன் இப்படியான பல பெயர்களை பெற்றவர், இவர்களோடு  ஜீ  தமிழ் ரிவி யின் செல்வா இசைக்குழுவினர் 8 பேரடங்கிய இசைக்குழுவினர் இங்கே வருகை தந்திருந்தார்கள். நேற்றைய தினம் சனிக்கிழமை Parramatta RiversideTheater  இல்  இந்த நிகழ்வு இடம்பெற்றது.  குறிப்பிட்டதுபோல் யாழ் மத்திய கல்லூரி வழமையாக குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்ச்சியை தொடங்குவார்கள் அதேபோல் நேற்றைய தினமும் ஐந்து முப்பது மணிக்கு நிகழ்ச்சியை சரியாக ஆரம்பித்தார்கள் இந்தியாவில் இருந்து வருகை தந்திருந்த பாடகி சுகன்யாவின் முதல் பாடலோடு நிகழ்ச்சி ஆரம்பமானது அதனைத்தொடர்ந்து பாடகர்கள் தனியாகவும் இரட்டையர்களாகவும்  மாறி மாறி பாடினார்கள். இந்த நிகழ்ச்சியை திரு மகேஸ்வரன் பிரபாகரன் தொகுத்து வழங்கினார். இவர் அவுஸ்திரேலியாவில் பிரபலமான ஒரு அறிவிப்பாளர், அவருடைய அறிவிப்பில் இந்த நிகழ்வு ஆரம்பமானது.  உலகமெங்கும் இருக்கின்ற வைரஸ் பரவல் இருந்தும்  இந்த நிகழ்ச்சிக்கு மண்டபம் ஏறக்குறைய நிறைந்ததாக மக்கள்  இருந்தார்கள். அதேபோல் பாடகர்கள் வருவார்களா இல்லையா என்று பலர் பலத்த சந்தேக த்தோடு இருந்தபோதும் அவுஸ்ரேலிய தமிழ் வானொலியில் இந்த நிகழ்வு நடைபெறும் என  கானா பிரபா வெள்ளிக்கிழமை இரவு இவர்களையெல்லாம் பேட்டி கண்டு அவர்கள் வந்துவிட்டார்கள் நிகழ்ச்சி கண்டிப்பாக இடம்பெற இருக்கின்றது என்று அறிவித்திருந்தார் அதேபோல் நானும் இந்த நிகழ்ச்சி பற்றி வானொலியில் குறிப்பிட்டு இந்த நிகழ்ச்சி இடம்பெறுகின்றது ஆகவே மக்கள் வர  விரும்புகின்றவர்கள் வரலாம் என்று அறிவித்திருந்தேன். 


அதேபோல் நிகழ்ச்சி இடம்பெற்றது. யாழ் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்க நிகழ்ச்சியை பற்றி நான் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை ஏனென்றால் வழமையாகவே மிக அருமையாக அந்த நிகழ்ச்சியை நடத்துவார்கள் அதிக இடையூறுமின்றி இந்த நிகழ்ச்சியை நடத்துவார்கள், அதே போல் இம்முறையும் இடம்பெற்றது.  சில பாடல்களைப் பாடிய பின்பு பல்குரல்  மன்னன் அமுதவாணன் வந்து மக்களை சிரிக்க வைத்து சில வேடிக்கை நிகழ்ச்சிகளையும் செய்தார். நீண்டு விடடதோ  என்ற ஆதங்கம் சிலபேருக்கு இருக்கத்தான் செய்தது. அதனைத் தொடர்ந்து பாடல்கள் மீண்டும் இடம் பெற்றது. இடைவேளையின் பின்பு  பழைய பாடல்கள் புதிய பாடல்கள் என்று இவர்கள் அத்தனை பேரும் அசத்தினார்கள். மிக அற்புதமான பாடல்களை பாடிய சுகன்யா தான் இங்கே இரண்டாவது முறையாக வருவதாக குறிப்பிட்டு இருந்தார். அதேபோல் இலங்கையில் இருந்து வருகை தந்திருந்த ஸ்ரீவத்சலா இரண்டாவது முறையாக ஆஸ்திரியாவுக்கு வருகை தருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.  அமுதவாணன்  மக்களை சந்தோஷத்தில் வைத்திருந்தார். அதேபோல் இலங்கையில் இருந்து வருகை தந்திருந்த ஸ்ரான்லி அருமையான குரல் வளம் கொண்டவர், கே ஜே ஜேசுதாஸின்  குரலை அப்படியே கொண்டுவந்தார்,


இன்னும் பல பாடல்களை அவர் பாடி இருக்கலாமோ என்று தோன்றியது. அஸ்லாம் அருமையான குரலில் பாடல்களை தந்தார். இந்த குரலை  கேட்க வேண்டும் என்ற ஆவல் இருந்துகொண்டே இருந்தது, குறிப்பாக பிரதீப்குமார் உடைய ஒரு அருமையான பாடல் செங்கதிரே செங்கதிரே அந்த பாடலை அவரிடம் கேட்க வேண்டும் என்று துடித்துக் கொண்டே இருந்தேன் ஆனால் அந்த சந்தர்ப்பம் வரவில்லை.  அவருடைய குரலுக்கு அந்த பாடல் மிக அற்புதமாக இருந்திருக்கும் என்று நான் நினைக்கின்றேன்.  இத்தனை பாடல்களா அவர்கள் பாடுவார்கள்.  நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா அஸ்லாம் , உன்னிடம் மயங்குகிறேன்  பாடலை ஸ்ரான்லி இனிய குரலில் பாடினார்.  என்னம்மா கண்ணு என்ற பாடலை    அஸ்லாம் ஸ்டான்லி இருவரும் இணைந்து  பாடினார்கள். மல்லிகை என் மன்னன் மயங்கும் என்ற பாடலை சுகன்யா பாடி அங்கே இருந்தவர்களுடைய மனங்களை  எல்லாம் மயக்கி விட்டார் அதன்பின்பு பச்சைக்கிளிகள் காற்றோடு என்ற பாடலை ஸ்டான்லி பாட   இப்படியே பாடல்கள் தொடர்ந்து சென்று கொண்டிருந்தது. மாலையில் யாரோ என்ற பாடலை ஸ்ரீவத்சலா பாடிச்  சென்றபோது இனிமையான குரல் ஆக அந்த பாடல் அமைந்தது. காந்த கண்ணழகி என்ற பாடல்மை நேம் இஸ் பில்லா என்ற பாடல் பின் அடி  என்னடி ராக்கம்மா  என்றபாடலை  ஸ்டான்லி பாடுகின்ற போது மக்கள் அவருடன் சேர்ந்து பாடியதும் கைகளை தட்டி குதூகலத்தை தெரிவித்ததும் பார்க்கக்கூடியதாக இருந்தது.  

வெண்ணிலவே வெண்ணிலவே என்ற பாடலை அஸ்லாமும் சுகன்யாவும் பாடினார்கள் உண்மையிலேயே அந்த பாடல் ரசிக்கக் கூடியதாக இருந்தது, தென்றல் வந்து என்னைத்தொடும் மீண்டும் ஸ்டான்லி ஸ்டான்லி யோடு சுகன்யா பாடியிருந்தார் அதைத்தொடர்ந்து ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் இதய சுரங்கத்தில் எத்தனை ராகம்  பாடி ஸ்ரீவத்சலா மக்களுடைய மனதை கொள்ளை கொண்டு விட்டார். அதைத் தொடர்ந்து அமுதவாணனுடைய நடன நிகழ்வு இடம்பெற்றது அப்பப்பா என்ன அருமையான நடனங்களை அவர் செய்து காட்டினார். ஒருவர் தனது பாணியில்  ஒருவராக நடனம் ஆடலாம் ஆனால் ஒவ்வொருவர்  போலவும் ஆடினார் Michael Jackson தொடங்கி நாகேஷ் தொடங்கி கமலஹாசன் தொடங்கி இப்படி       இறுதியாக பிரபுதேவா வரை எல்லாவற்றையுமே எல்லா விதமாகவும் செய்து காட்டினார். உண்மையிலேயே அவருடைய திறமையை பாராட்ட வேண்டும். கண்ணான கண்ணே என்ற  புதிய பாடலை ஸ்டான்லி   பாடிச் சென்ற போது பலர் கண்ணீர் விட்டு அழுது விட்டார்கள் என்று கூறலாம்.  தொடர்ந்து  பூவே செம்பூவே என்ற பாடல்கள் எல்லாம் தொடர்ந்து சென்று கொண்டிருந்தது. எனக்கு மிகவும் பிடித்த பாடலான  கண்ண காட்டு போதும் அந்த பாடலை சுகன்யா பாடியபோது மனதை கொள்ளை கொண்டு விட்டார் நன்றி சுகன்யா.  சின்ன மணி குயிலே கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா அந்த பாடலை சுகன்யா மிக அழகாக பாடியிருந்தார் இப்படி பல பாடல்கள் பழைய புதிய பாடல்களை எல்லாம் அவர்கள் பாடி இருந்தார்கள் சில பாடல்கள்  சிலருக்குப் பிடிக்கவில்லை சில பாடல்கள் புதிய பாடல்கள் சிலருக்குப் பிடிக்கவில்லை இப்படியெல்லாம் இருந்தாலும் கூட பல பாடல்கள் எல்லோராலும் ரசிக்கக் கூடியதாக இருந்தது எனக்கு பிடித்த பாடல்களை இங்கே நான் குறிப்பிட்டிருக்கிறேன் இதைத்தவிர பல பாடல்களை பாடி இருந்தார்கள் இந்த நிகழ்வு ஒரு சனிக்கிழமை இரவு அதுவும் கூட்டங்கள் கூட கூடாது கூட்டத்தில் போயிருக்கக் கூடாது என்ற வேண்டுகோள் விடுக்கப் பட்ட நேரத்தில் இந்த நிகழ்வுக்கு போவதா விடுவதா என்று ஒரு மனத்தோடு சென்றாலும் கூட இறுதியில் அற்புதமான ஒரு நிகழ்வு வழமைபோல் யாழ்மத்தியகல்லூரி நிகழ்வு அருமையாக அமைந்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  இந்த இரவு நல்லதொரு இரவாக  இருந்தது என்பதை நான்  கூறிவைக்க விரும்புகின்றேன். பகீரதன் அவர்களோடு சிவதொண்டன் போன்றவர்களுடைய இந்த முயற்சி மிக வெற்றிகரமாக அமைந்து இருக்கும் என்று நான் நம்புகின்றேன்.


No comments: