.
இந்த வாரம் இரண்டு நல்ல திரைப்படங்களை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது , ஒன்று சவுத் கொரியா திரைப்படமான Parasite இன்னும் ஒரு திரைப்படம் எமது மண்ணிலே தயாரிக்கப்பட்டு சென்ற வாரம் சிட்னியில் திரையிடப்பட்ட சினம்கொள் முதலில் Parasite பற்றி பார்ப்போம். Parasite திரைப்படம் தென்கொரிய திரைப்படம் ஆகும், இந்த திரைப்படத்தை Bong Joon அவர்கள் இயக்கி இருந்தார்கள் ஸ்கிரீன்பிளே அதாவது எழுத்து இயக்கம் இரண்டிலும் அவர் பங்கு பெற்று இருந்தார். இந்த திரைப்படமானது Cannes திரைப்பட விழாவில் பங்குகொண்டு வெற்றி பெற்றது. அதனைத்தொடர்ந்து ஆஸ்கர் விருதுகள் நான்கு பெற்றிருக்கின்றது. சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், ஒரிஜினல் ஸ்கிரீன்பிளே, பெஸ்ட் இன்டர்நேஷனல் பிலிம் இப்படி 4 விருதுகளை இந்த திரைப்படம் தட்டிக் கொண்டு சென்றிருக்கின்றது.
ஒருஏழைக் குடும்பம் பணக்கார குடும்பம் ஒன்றை திட்டமிட்டு ஏமாற்றுவது என்ற ஒரு கதைதான். முதலில் Cannes இல் திரையிடப்பட்டது அதைத் தொடர்ந்து உலக அளவிலேயே இதனுடைய புகழ் பரவியது சர்வதேச திரைப்பட அகடமி விருதுகள் நான்கைத் தட்டி சென்றிருக்கின்றது. முதல் தடவையாக இன்டர்நேஷனல் திரைப்படம் ஒன்று இந்த விருதுகளை பெற்று இருக்கின்றது. இந்த திரைக்கதையும் இசையும் மிக அருமையாக இருக்கின்றது. Event சினிமாவிலே இந்த திரைப்படம் காண்பிக்கப்பட்ட போது அதை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. தென் கொரிய திரைப்படத்திற்கு இந்த விருது கிடைச்சிருக்கு என்றவுடன் உலகம் முழுவதும் அது பேசப்படுகின்றது. அதிகூடிய வசூலையும் இப்பொழுது அள்ளிக்கொண்டு இருக்கின்றது இத்திரைப்படம் . பணக்கார வீட்டுப் பிள்ளையை படிப்பிப்பதற்காக செல்லுகின்ற ஒரு இளைஞன் தங்களுடைய வறுமையைப் போக்குவதற்காக அந்த பணக்கார குடும்பத்தை எப்படி எல்லாம் ஏமாற்றுகிறான் அதனால் என்னென்ன பிரச்சினைகள் எல்லாம் வருகின்றது இறுதியாக அந்த ஏழைகள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதுதான் இதன் கதை.
ஆனால் ஒவ்வொரு நகர்வும் மிக அற்புதமாக நடத்தப்படுகின்றது அடுத்து என்ன என்ற ஆவலை எல்லோருக்குமே கூட்டிச் செல்லுகின்றது. இப்படியான விருதுகளை நம்மவர்களும் பெற வேண்டும் இந்த திரைப்படங்கள் போன்ற திரைப்படங்களை தமிழில் செய்யவேண்டும் என்ற ஆவல் இருந்து கொண்டிருக்கின்ற போது இன்னுமொரு திரைப்படத்தை சென்ற வாரமே பார்க்கக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது.
அதுதான் சினம்கொள் யாழ்ப்பாணத்து மண்ணிலே இருந்து எமது மண் வாசனையோடும் பேச்சு வழக்கோடும், மண்ணினுடைய கலாச்சார விழுமியங்களோடு அத்தனை பிரச்சினைகளையும் பேசுகின்ற ஒரு திரைப்படமாக இந்த திரைப்படம் அமைந்திருக்கிறது. இயக்குனர் ரஞ்சித் யோசெப் ஈழத்து மண்ணிலேயே இந்த திரைப்படத்தை எடுத்து இருக்கின்றார் எழுத்தாளர் தீபச்செல்வன் இந்த திரைப்படத்தின் கதையையும் பாடல்களையும் எழுதி இருக்கிறார்,ஒளிப்பதிவாளர் மாணிக்கம் பழனிகுமார் இந்த மனிதன் எப்படி எல்லாம் எம் மண்ணை எம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகின்றார் பாரதியின் பாடலில் வருகின்றது போல் அழகிய அந்த தென்னஞ் சோலைகளும் அந்த தென்னஞ்சோலைகளின் கீழே அமைந்திருக்கின்ற குடிசையும் நாம் வாழ்ந்த அந்த மண்ணை அந்த நி னைவுகளை மீண்டும் ஒரு முறை கிளறி செல்கின்றது .
போராட்டத்தில் பங்கு கொண்டு மக்களுக்காகவே மரணித்தவர்கள் மக்களுக்காகவே தங்களை அர்ப்பணித்தவர்கள் இப்போது எப்படி எல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது எல்லோருக்குமே தெரியும் புலம்பெயர்ந்தவர்கள் இந்தப் பெயரைச் சொல்லி சேகரித்த பணம் எல்லாம் சொந்தமாக மாறிக் கொண்டு வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.போராளிகள் சிறையிலிருந்து வெளியே வருகின்ற போது காரணம்தெரியாமலே இறக்கின்றார்கள். போராளிகளை இப்போது யாருமே கவனிப்பு இல்லாமல் புறம் தள்ளி விடுகிறார்கள் இதையெல்லாம் உயிரோடும் உணர்வோடும் இந்த விடயங்களை எல்லாம் வெளிக்கொண்டு வந்து இருக்கின்றது சினம்கொள்.இவற்றையெல்லாம் அற்புதமாக தன் நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி இருக்கின்றார் அரவிந்தன் என்று அழைக்கப்படுகின்ற அந்த கதாநாயகனாக திரைப்படத்திலே உலாவிவருகின்ற அமுதன் என்ற இந்த மனிதன்.ஒரு போராளியாகவே நாம் பார்த்த பிற போராளிகளில் ஒருவனாக என் கண்ணில் தெரிகின்றார். அவனு டைய சுகங்களும் துக்கங்களும் அவன் ஒருவனுக்கு மட்டுமல்ல அவனைப் போன்ற ஆயிரம் போராளிகளுக்கு விடப்படுகின்ற ஒன்றாக இருக்கின்றது அந்த வாழ்க்கையை கலையோடு சினிமா தன்மையோடும் கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் ரஞ்சித் .
ஒவ்வொரு நிலத்தையும் ஒவ்வொரு மண்ணின் ஒவ்வொரு அசைவுகளையும் தன் ஒளிப்பதிவினால் மிகச் சிறப்பாக செய்திருக்கிறார் பழனிகுமார் இவர்கள் அத்தனை பேருக்கும் சிரம் தாழ்ந்த பாராட்டுதல்களை தெரிவிக்க வேண்டும். அ துமட்டுமல்ல தீபச்செல்வன் உடைய கவிதைகள் அதற்கு உயிர் கொடுத்த இசையமைப்பாளர் ரகுநந்தன் அவர்கள் இவ்வளவு அற்புதமான இசை மனதை உருக்கி செல்லுகின்ற இசை,பாடல்கள் அத்தனையும் நம் மனதில் புகுந்து எதையோ செய்கின்றது.நாம இழந்தது எல்லாம் அந்த இசை மூலம் கூறிச் சென்று விடுகின்றார் அந்த இசையமைப்பாளர்.இப்படி ஒரு திரைப்படம் எமது மண்ணிலே பிறந்து கனடாவிலே வசித்த ஒரு தமிழரால் இப்படி கொண்டு வர முடியும் என்றால் அது தமிழ்சினிமாவுக்கு நிச்சயமாக ஒரு பெரிய விடயமாக இருக்கப் போகின்றது தமிழனின் சினிமா உலகமெங்கும் பேசப்படுகின்ற அளவுக்கு இந்த திரைப்படத்தை கொண்டு வந்திருக்கின்றார் என்று குறிப்பிடலாம்.இறுதியில் கொண்டுவரப்பட்ட ஒரு சில காட்சிகளை தவிர்த்திருந்தால் நிச்சயமாக அது இயக்குனர் ரஞ்சித்துக்கு கூட இப்போது புரிந்திருக்கும் அல்லது பல பேர் இதை குறிப்பிட்டு இருப்பார்கள் அந்த காட்சியை நீக்கி இருந்தால் இந்த திரைப்படத்திற்கு நிகர் இருக்க முடியாது.
லெனின் சிவம் இயக்கிய சில திரைப்படங்கள் உலகெங்கும் பேசப்பட்ட திரைப்படமாக இருந்தது உலக சினிமா ரசிகர்களால் பேசப்பட்ட திரைப்படமாக இரு ந்துகொண்டிருந்தது இன்றுமுதல் நிச்சயமாக சினம்கொள் திரைப்படம் அவர்களால் பேசப்படுகின்ற படமாக இருக்கும். சினிமா ஒன்று எப்படி இருக்க வேண்டும் எப்படி தமது பயங்களை தமது துயரங்களை நமது கோபங்களை எல்லாம் பேச வேண்டுமென்று மிக அழகாக பேசி இருக்கின்றார் இந்த திரைப்படத்தின் மூலம் இது எத்தனை பேர் பார்த்தார்கள்என்று தெரியவில்லை திரையரங்கில் நிறைய இடம் இருந்தது இந்திய திரைப்படங்களுக்கு எமது மக்கள் நிறைந்து கொண்டிருப்பார்கள் இவர்களெல்லாம் இப்படியான திரைப்படங்களை நழுவவிட்டு விடுகின்றார்கள் என்ற கவலை எனக்குள் எழுகின்றது சினம்கொள் போன்ற திரைப்படங்கள்எமது மக்களால் உருவாக்கப்பட வேண்டும் இதுதான் தமிழன் சினிமா என்று பேச வேண்டும் சினிமாவில் நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்று பெருமைப்பட வேண்டும் என்று நிச்சயமாக நாங்கள் கூறலாம்.
சினம்கொள் இன்னொரு மைல்கல்
No comments:
Post a Comment