தமிழ் சினிமா


கொடி



தனுஷ் கண்டிப்பாக ஒரு ஹிட் கொடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார். சிவகார்த்திகேயனுடன் இணைந்து இரண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த துரை செந்தில் தனுஷுடன் இணைந்து கொடுத்திருக்கும் படம் தான் கொடி.
தனுஷ் முதன் முறையாக டபூள் ஆக்‌ஷன், முதன் முறையாக த்ரிஷாவுடன் கூட்டணி, சந்தோஷ் நாராயணனின் இசை என ப்ரஷ் கூட்டணியுடன் வெளிவந்திருக்கும் கொடி உயர பறந்ததா என்பதை பார்ப்போம்.

கதைக்களம்

கருணாஸிற்கு அரசியலில் பெரிய லெவலில் சாதிக்க வேண்டும் என்று விருப்பம், ஆனால் அதை அவரால் நிகழ்த்த முடியவில்லை, அந்த சமயத்தில் கருணாஸிற்கு இரட்டை குழந்தைகள் பிறக்கின்றது.
இதில் ஒருவர் அரசியல்வாதியாக வர, மற்றொருவர் ஆசிரியராகிறார். இதில் எதிர்க்கட்சியாக இருந்தாலும் த்ரிஷாவை ஒரு தனுஷ் காதலிக்கின்றார், ஆசிரியர் தனுஷிற்கு அனுபமா.
அனுபமா, கோழி முட்டையில் டீத்தூளில் நனைத்து நாட்டுக் கோழி முட்டை என விற்கிறார், இதை பார்த்த தனுஷ் ஏன் இப்படி செய்கிறாய்? என கேட்கிறார்.
அதற்கு அவர் தன் ஊரில் உள்ள விசவாயு தொழிற்சாலையை மூட வேண்டும், அதற்கு நிறைய பணம் வேண்டும் என்கிறார்.
இதுக்குறித்து அரசியல்வாதி தனுஷிடம் மற்றொரு தனுஷ் கூற, இதை தொடர்ந்து, த்ரிஷாவுடன் மோதல், தம்பி உயிருக்கு ஆபத்து வர, பிறகு என்ன ஆனது என்பதை படு சுவாரசியமாக கூறியுள்ளனர்.

படத்தை பற்றிய அலசல்

படத்தின் தலைப்பிற்கு ஏற்றார் போல் முழுக்க முழுக்க அரசியல் பின்னணியை வைத்து எடுக்கப்பட்டது தான் இந்த கொடி. அதிலும் குறிப்பாக தற்போது நடக்கும் அரசியலில் தான் வளர அதில் அவர்கள் செய்யும் விஷயங்களை வெட்ட வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
கொடியாக வரும் தனுஷ் நல்ல அரசியல்வாதியாகவே வருகிறார், குறிப்பாக இரண்டாம் பாதியில் தன்னுடைய அண்ணனாகவே மாறும் தம்பி செய்யும் அரசியலும் ரசிக்க வைக்கின்றது.
மேலும், த்ரிஷா முதன் முறையாக நெகட்டிவ் கதாபாத்திரம், நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒரு நல்ல நடிப்பை கொடுத்துள்ளார்.
அதிலும் தன்னுடைய அரசியல் லாபத்திற்காக த்ரிஷா செய்யும் வேலைகள் அனைவரையும் கண் உயர்த்தி பார்க்க வைக்கின்றது, ஒரு ரியல் லேடி அரசியல்வாதியாகவே மாறிவிட்டார்.
படத்தின் இரண்டாம் பாதியில் மாஸ் சீன்கள் தெறிக்கின்றது, அதிலும் தனுஷ் ட்ரான்ஸ்பெர்மேஷன் சீன் ஒன்று, விசில் சத்தம் அடங்க நேரமாகின்றது. அனுபமா செகண்ட் ஹீரோயின் அவ்வளவே பெரிதும் கவரவில்லை.
சந்தோஷன் நாராயணனின் இசையில் என் சுழலி, கொடி பறக்கது ஏற்கனவே ஹிட் ஆகிவிட்டது, விஷ்வலில் கதையுடன் பாடல்கள் வருவது வெளியே நகரவிடாமல் சீட்டிலேயே ரசிகர்களை கட்டிப்போடுகின்றது.
துரை செந்தில் எதிர்நீச்சல், காக்கிசட்டை என தொடர் ஹிட் படங்களை கொடுத்தவர், பாலு மகேந்திரா பட்டறையில் இருந்து வந்தாலும், தனக்கென்று ஒரு பாதை அமைத்து இதிலும் வெற்றி பெற்றுவிட்டார்.
அதெல்லாம் இருக்கட்டும் தனுஷ்-த்ரிஷா காதல் ஏதோ தமிழக அரசியல்வாதிகளை குறிப்பது போலவே உள்ளதே!!!.

க்ளாப்ஸ்

படத்தின் திரைக்கதை வேகமாக நகர்கிறது.
தனுஷின் வழக்கமான யதார்த்தமான நடிப்பு, த்ரிஷாவின் எதிர்ப்பார்க்காத நெகட்டிவ் கதாபாத்திரம்.
அரசியல் படத்தையே கமர்ஷியலாக பொழுதுப்போக்காக காட்டிய விதம்.

பல்ப்ஸ்

சந்திரசேகர், விஜயகுமார், சரண்யா போன்ற திரையுலக ஜாம்பவான்களை இன்னும் கொஞ்சம் பயன்படுத்தியிருக்கலாம்.
இரண்டாம் பாதி ஆரம்பித்த சில காட்சிகள் மெதுவாக நகர்வது. சந்தோஷ் நாராயணன் பின்னணியில் கொஞ்சம் கவனம் தேவை.
மொத்தத்தில் கொடி பறக்குது.
Production:
நன்றி cineulagam




















No comments: