உலகச் செய்திகள்


விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க முடிவு.!

இந்து ஆலயங்கள் மீது தாக்­குதல்.!

ஜெயலலிதாவின் உடல் நிலை தொடர்பில் உண்மை வெளியானது : லண்டன் நாழிதல்

இந்­தி­யாவில் உளவு பார்த்­த­தாக குற்­றச்­சாட்டு 4 தூத­ரக அதி­கா­ரி­களை திரும்பப் பெறு­கி­றது பாக்.

தாய்லாந்தில் பட்டத்து இளவரசர் புதிய மன்னராகிறார்

 குழந்­தைகள் சாகும்­போது வெளி­நா­டு­களில் சுற்­றுப்­ப­ய­ணமா? மோடிக்கு 10 வயது சிறுவன் கடிதம்

தொடரும் சோகம், படகு கவிழ்ந்து விபத்து : 239 பேர் பலி

இரு கடுங்கதி புகையிரதங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ;20 பேர் பலி ;பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அச்சம்
விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க முடிவு.!

31/10/2016 விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க ஐரோப்பிய யூனியன் முடிவு செய்துள்ளது.
விடுதலைப்புலிகள் மற்றும் பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பு ஆகிய இரண்டு அமைப்புகளையும் தடை பட்டியலில் இருந்து நீக்கவும், அவர்கள் மேல் சுமத்தப்பட்ட பயங்கரவாதிகள் என்ற முத்திரையை விலக்கிக் கொள்ளவும், முதல் தடவையாக ஐரோப்பிய யூனியன் முன் வந்துள்ளது.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஐரோப்பிய நீதிமன்றத்தின் மூலம் நீதிபதிகளில் ஒருவர் இது தொடர்பான அறிக்கை ஒன்றை ஐரோப்பிய யூனியனுக்கு சமர்பித்தார்.
இதனை அடுத்து தடை நீக்கம் தொடர்பாக இலங்கை மற்றும் இஸ்ரேலுக்கு ஏதாவது ஆட்சேபனை உள்ளதா.? என்றும் அப்படி இருப்பின் அதனை எழுத்து மூலம் அறிவிக்கும்படியும் கேட்டிருந்தது.
இந்த நிலையில் ஹமாஸ் அமைப்பை தடைப் பட்டியலில் இருந்து நீக்க, இஸ்ரேல் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதேபோல் இலங்கை அரசும் விடுதலைப் புலிகளின் மீதான தடையை நீக்க கூடாது என்று தெரிவித்து இருந்தது. இருப்பினும் இந்திய அரசு இது தொடர்பாக எந்த நெருக்கடியும் தரவில்லை.
இதனை அடுத்து இலங்கை மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளின் எதிர்ப்பு இருந்தாலும் கூட, தடைப் பட்டியலில் இருந்து இவ்விரு அமைப்புகளின் பெயர்களை நீக்க உள்ளதாக ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது.
இது தொடர்பான சுற்றிக்கை விரைவில் வெளியாகிறது. இந்த முடிவுக்கு இங்கிலாந்து கட்டுப்பட வேண்டும் என்று அங்கு வாழும் தமிழர்கள் அழுத்தம் கொடுத்தால் இங்கிலாந்தும் விடுதலைப்புலிகள் மீதான தடையை விலக்கும் வாய்ப்பு உள்ளது.    நன்றி வீரகேசரி இந்து ஆலயங்கள் மீது தாக்­குதல்.!

01/11/2016 பங்­க­ளா­தேஷில் குறைந்­தது 15 இந்து ஆல­யங்­களும் சொத்­து­களும்  சின­ம­டைந்த கும்பல் ஒன்றால்  ஞாயிற்­றுக்­கி­ழமை பின்­னி­ரவு தாக்கிச் சூறை­யா­டப்­பட்­டுள்­ள­தாக  பிராந்­திய பொலிஸார்  தெரி­வித்­தனர்.
 உள்ளூர் மீனவர் ஒருவர் தனது பேஸ்புக் இணை­யத்­தளப் பக்­கத்தில் இஸ்­லாத்தின் புனித ஸ்தல­மொன்றின் உள்ளே இந்து தெய்வம் இருப்­பது போன்று போலி­யான புகைப்­ப­ட­மொன்றை கணினி மென்­பொ­ருளைப் பயன்­ப­டுத்தி உரு­வாக்கி வெளியிட்­டி­ருந்­தமை பிராந்­தி­யத்தில் மத ரீதி­யான பதற்­ற­நி­லையை தோற்­று­வித்­துள்­ள­தாக கூறப் ­ப­டு­கி­றது
அந்த மீனவர் கைது­செய்­யப்­பட்டு தூக்­கி­லி­டப்­பட வேண்டும் என வலி­யு­றுத்தி ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்ட சுமார் 150  பேரைக் கொண்ட குழு­வி­னரால் மேற்­படி 15 ஆல­யங்­களும் 200 க்கு  மேற்­பட்ட வீடு­களும் தாக்கி சூறை­யா­டப்­பட்­ட­துடன் 8  கடை­க­ளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் குறைந்தது 150  பேர் காயமடைந்துள்ளனர்.    நன்றி வீரகேசரி 

ஜெயலலிதாவின் உடல் நிலை தொடர்பில் உண்மை வெளியானது : லண்டன் நாழிதல்

01/11/2016 தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை பாதிக்கப்பட்டதற்கு, யாரோ சிலர் பில்லி சூனியம் வைத்ததுதான் காரணம் என லண்டனை சேர்ந்த ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22ம் திகதி முதல் சென்னை அப்பல்லோ வைத்தியசாலையில் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு தற்போதும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டதற்கு பில்லி சூனியம்தான் காரணம் என லண்டனை சேர்ந்த ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 
தமிழகத்தை சேர்ந்த ஒரு பிரபல ஜோதிடர் ஒருவர் தங்கள் பத்திரிக்கைக்கு அந்த செய்தியை கூறியதாக அந்த நாளிதழ் குறிப்பிட்டுள்ளது. 
திமுகவினர் சிலர் பல இலட்சங்களை செலவு செய்து, அவருக்கு எதிராக செய்வினை மற்றும் பில்லி சூனியம் ஆகியவற்றின் மூலம், அவரது உடல் நிலையில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம்.  திமுக கட்சியில் மட்டுமல்ல. அவரது சொந்த கட்சியிலேயே கூட யாரவது இப்படி செய்திருக்கலாம் என்று அந்த ஜோதிடர் கூறியதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், சமீபத்தில் கருணாநிதி உடல் நிலை பாதிக்கப்பட்டதற்கும் பில்லி-சூனியம்தான் காரணம் என அந்த ஜோதிடர் கூறியுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது     நன்றி வீரகேசரி 

இந்­தி­யாவில் உளவு பார்த்­த­தாக குற்­றச்­சாட்டு 4 தூத­ரக அதி­கா­ரி­களை திரும்பப் பெறு­கி­றது பாக்.

02/11/2016 இந்­திய இரா­ணு­வத்தை உளவு பார்த்­த­தாக குற்­றச்­சாட்டு எழுந்­த­தை­ய­டுத்து டெல்­லியில் உள்ள தூத­ர­கத்தில் இருந்து மேலும் 4 அதி­கா­ரி­களை பாகிஸ்தான் திரும்பப்பெறவுள்­ளது.
டெல்­லியில் உள்ள பாகிஸ்தான் தூத­ர­கத்தில் பணி­பு­ரிந்த மெக்மூத் அக்தர் என்ற ஊழியர் ஐ.எஸ்.ஐ. நிறு­வ­னத்­துக்கு உளவு பார்த்­த­தாக குற்றம் சாட்­டப்­பட்டார். அதைத் தொடர்ந்து அவர் இந்­தி­யாவில் இருந்து வெளி­யேற்­றப்­பட்டார்.
அவ­ரது வாக்­கு­மூலம் செய்தி ஊட­கங்­க­ளுக்கு சமீ­பத்தில் வெளி­யி­டப்­பட்­டது. அதைத் தொடர்ந்து டெல்­லியில் உள்ள பாகிஸ்தான் தூத­ர­கத்தில் இருந்து மேலும் 4 அதி­கா­ரிகள் திரும்ப பெறவுள்­ளனர்.
அதற்­கான தீவிர விசா­ர­ணையில் பாகிஸ் தான் வெளி­யு­றவுத் துறை அமைச்­சகம் உள்­ளது. தூத­ரக முதன்மை செய­லா­ளர்கள் காதீம்­ஹுசேன், முடாசிர் சீமா, ஷாகித் இக்பால் மற்றும் சயீத் பரூக் ஹபீப் ஆகி­யோரின் பெயர்கள் திரும்ப பெற உள்ள அதி­கா­ரிகள் பட்­டி­யலில் இடம்பெற்­றுள்­ளது. உளவு பார்த்­த­தாக இந்­தி­யாவில் இருந்து வெளி­யேற்­றப்­பட்ட அக்தர் பாகிஸ்தான் தூத­ர­கத்தில் ‘விஸா’ பிரிவில் பணி புரிந்தார். டெல்­லியில் கைதுசெய்­யப்­பட்ட இவர் 3 மணி நேர விசா­ர­ணைக்கு பின் தூத­ரக சட்­டத்தின் கீழ் விலக்கு அளிக்­கப்­பட்டு விடு­விக்­கப்­பட்டார்.
உளவு பார்க்க இவ­ருக்கு உதவி புரிந்த சுபாஷ் ஜாங்கீர், மௌ­லானா ரம்ஷான் ஆகியோர் டெல்லி மிரு­க­காட்­சி­சா­லையில் கைது செய்­யப்­பட்­டனர். 4-ஆவது நப­ரான ஷோகிப் ஜோத்பூரை சேர்ந்தவர். பாஸ்போர்ட் மற்றும் விசா ஏஜெண்டான இவர் ராஜஸ்தான் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.   நன்றி வீரகேசரி 


தாய்லாந்தில் பட்டத்து இளவரசர் புதிய மன்னராகிறார்

02/11/2016 தாய்லாந்தில் மன்னராக இருந்த பூமிபால் அதுலயதேஷ் (88) இவர் 70 ஆண்டுகள் மன்னராக இருந்தார். அதன் மூலம் உலகின் நீண்ட நாள் மன்னர் ஆக பதவி வகித்தவர் என்ற பெருமை பெற்றுள்ளார். இந்த நிலையில் இவர் கடந்த மாதம்  13 ஆம் திகதி மரணமடைந்துள்ளார்.
அதை தொடர்ந்து தாய்லாந்தின் புதிய மன்னர் யார் என்ற கேள்வி எழுந்தது. பலவித யூகங்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் பட்டத்து இளவரசர் மகா வஜிர லாங்கோர்ன் புதிய மன்னராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் மரணமடைந்த மன்னர் பூமிபால் அதுலயதேசின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருக்கு 64  வயது ஆகிறது. இவர் வருகின்ற டிசம்பர் 1 ஆம் திகதி புதிய மன்னர் ஆக பதவி ஏற்கவுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் இப்போதே தொடங்கி விட்டதா அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நன்றி வீரகேசரி குழந்­தைகள் சாகும்­போது வெளி­நா­டு­களில் சுற்­றுப்­ப­ய­ணமா? மோடிக்கு 10 வயது சிறுவன் கடிதம்

03/11/2016 ஒடிசா மாநி­லத்தில் மூளைக் காய்ச்­ச­லினால் 73 பேர் பலி­யா­கி­யுள்ள நிலையில் நீங்கள் வெளி­நா­டு­களில் சுற்­றுப்­ப­யணம் செய்­வது நியா­யமா? என்ற கேள்­வி­யுடன் பிர­தமர் மோடிக்கு பத்­து­வ­யது சிறுவன் எழு­தி­யுள்ள கடிதம் பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.
ஒடிசா மாநி­லத்தில் பழங்­கு­டி­யின மக்கள் அதி­க­மாக வாழும் மல்­காங்­கிரி மாவட்­டத்­திற்­குட்­பட்ட 500இற்கும் அதி­க­மான கிரா­மங்­களில் ஜப்பான் மூளை­ய­ழற்சி நோய் படு­வே­க­மாக பரவி வரு­கி­றது.
பெரும்­பாலும் குழந்­தை­களை அதி­க­மாக தாக்கும் இந்த நோயினால் இது­வரை 73 பேர் பலி­யா­ன­தாக தெரி­ய­வந்­துள்­ளது.
இந்­நி­லையில், மல்­காங்­கிரி மாவட்டம், சிகாப்­பள்ளி கிராம பஞ்­சா­யத்­துக்கு உட்­பட்ட போல்­கன்டா பள்­ளியில் நான்காம் வகுப்பில் படித்­து­வரும் உமேஷ் மாதி என்ற பத்­து­வ­யது சிறுவன் பிர­தமர் நரேந்­திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழு­தி­யுள்ளான்.
அந்த கடி­தத்தில் அவன் கூறி­யுள்­ள­தா­வது:-
ஐயா, ஜப்பான் ஜுரத்­துக்கு என்­னு­டைய நண்­பர்கள் பலர் பலி­யாகி விட்­டனர். உலகை சுற்­றி­வரும் நீங்கள் எங்கள் ஊருக்­கு­வந்து, இங்கு குழந்­தைகள் எப்­படி சாகி­றார்கள்? என்று பார்த்து எங்கள் உயிரை காப்­பாற்ற வேண்டும்.
உலகின் பல­நா­டு­க­ளுக்கு சுற்­றுப்­ப­யணம் செய்யும் நீங்கள் எங்கள் கிரா­மத்தில் வசிக்கும் மக்­களின் பரி­தாப நிலையை பார்ப்­ப­தற்­காக இங்கு வரக்­கூ­டாதா? என்று தனது கடி­தத்தில் அவன் எழு­தி­யுள்ளான்.   நன்றி வீரகேசரி 
தொடரும் சோகம், படகு கவிழ்ந்து விபத்து : 239 பேர் பலி

04/11/2016 லிபிய அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 239 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
லிபியாவில இருந்து ஐரோப்பாவிற்கு தஞ்சம் அடைய சென்ற அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 239க்கும் மேற்பட்ட லிபிய அகதிகள் உயிரிழந்துள்ளனதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இச்சம்பவம் உலக நாடுளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அளவுக்கு அதிகமாக அகதிகளை ஏற்றிச் சென்றதே விபத்துக்கு காரணம் என்று முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.   நன்றி வீரகேசரி 


இரு கடுங்கதி புகையிரதங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ;20 பேர் பலி ;பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அச்சம்

04/11/2016 பாகிஸ்தானில், இரு கடுகதி புகையிரதங்கள் மோதியதில், 20 பேர் பலியாகியதோடு  50 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தானில், கராச்சியிலிருந்து நேற்று காலை லாகூருக்கு பரீத்  கடுகதி புகையிரதமும்,முல்தானிலிருந்து கராச்சி நோக்கி, ஜகாரியா கடுகதி புகையிரதமும் பயணித்துக் கொண்டிருந்தன.
கராச்சியை அடுத்த, லாண்டி புதையிரத நிலையத்தினை நெருங்கிய போது தவறான சமிஞ்சையினால் ஒரே கடவையில் வந்த இரண்டு புகையிரதங்களும்  நேருக்கு நேர் மோதுண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில், ஜகாரியா புகையிரத்தில் மூன்று பெட்டிகளும், பரீத் புகையிரதத்தின் இரு பெட்டிகளும் தடம் புரண்டு, பெரும் சேதம் அடைந்தன.
சம்பவயிடத்திற்கு தகவல் அறிந்து விரைந்த மீட்பு குழுவினரும், பொலிஸாரும்  காயம் அடைந்த 50 இற்கும் அதிகமானோரை மீட்டு, கராச்சி வைத்தியசாலையில் சேர்த்தனர். 
குறித்த  விபத்தில், 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.   நன்றி வீரகேசரி 


No comments: