என் புதிய உலகம் கமல் selvipandiyan ,

.


கமல் ....
இன்னிக்கு எல்லார் வாயிலும் அரை பட்டுக்கிட்டு இருக்கவர்!
பொது வாழ்விலும் சினிமாவிலும் இருக்கும் பிரபலங்களின் வாழ்க்கை பற்றி தெரிந்து கொள்ள எல்லா சாமானியனுக்கு ஒரு ஆவல் இருக்கும்தான்...அது எது வரைக்கும்??? இன்னும்..இன்னும்..என்று நோண்டி நோண்டி அவர்களை பொது வெளியில் கூறு போட்டு குதறும் வரைக்குமா????அவரின் மன நிலை எப்படி இருக்கும் என்று நம் யாருக்குமே தெரியாது...எல்லாமே நம் யூகம்தான்!!!அவரின் வெற்றிகளையும் சாதனைகளையும் கூட இப்படி ஆர்வமாக தெரிந்து கொள்ள முன் வருவார்களோ இல்லியோ???அவரின் அந்தரங்க நிகழ்வுகளை அறிந்து அதை பற்றி பொது வெளியில் விமர்சனம் செய்யா நமக்கு என்ன உரிமை இருக்கிறது???ஒரு தலை சிறந்த கலைஞர் ...அவரின் வாழ்வு முழுதுமே சினிமா சினிமா என்று வித விதமா முயட்சி செய்ப்பவர்...யாருக்குத்தான் அவர்களின் தனிப்பட்ட வாழ்வில் சறுக்கல் இல்லை???எப்போடா அவர் இப்படி விழுவார் என்று எதிர் பார்த்து காத்திருப்பது போல எவ்வளவு அசிங்கமான கம்மெண்ட்டுக்கள்???
பிரபலங்கள் எல்லோரின் வாழ்விலும் நம் இதுவரை பார்க்காத செய்திகளா????அப்போ எல்லாம் இப்படி கட்டுப்பாடில்லாத இணைய கருத்துதுகள் இல்லை!மக்களும் ஓரளவு அடக்கி வாசித்தார்கள், இப்போ யாரு வேணாலும் என்ன வேணாலும் போற போக்கில் கிண்டல் அடித்து விட்டு போகலாம்!அவரின் உயரத்தை பார்த்து பொறாமைப்படுகிறார்கள் என்றுதான் எனக்கு தோன்றுகிறது!
அவரின் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருத்தி!!!
அவர் தன உடல் மற்றும் மன நிலையில் தேறி வர வேண்டும்!!
உங்களிடமிருந்து நாங்கள் நிறைய எதிர் பார்க்கிறோம் கமல்!!!

No comments: