தமிழ் சினிமா


Ice Age: Collision Course


Ice Age: Collision Course - Cineulagam
Ice Age ஹாலிவுட் படங்களின் அனிமேஷன் சீரியஸில் மிகவும் பிரபலமான படம். உலகம் முழுவதும் இந்த சீரியஸிற்கு ரசிகர்கள் உள்ளனர், குறிப்பாக இந்தியாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இப்படத்தை பார்த்து ரசிப்பார்கள்.
எப்போதும் மாமுத் யானை, ஒரு புலி, தேவாங்கு அது மட்டுமின்றி ஐஸ் ஏஜ் என்றாலே நம் நினைவிற்கு முதலில் வருவது ஒரு nuts-ஐ தேடும் ஓர் உயிரனம் இவை தான் மிகவும் பிரபலம், இவர்கள் கூட்டணியில் 5வது பாகமாக உலகத்தை காப்பாற்ற வந்திருக்கும் படம் தான் Ice Age: Collision Course.

கதைக்களம்

Buck (Pegg), Diego (Leary), Sid (Leguizamo) and Manny (Romano) ஆகியோர் எப்போதும் போல் இந்த உலகத்தை ஏதோ தாக்க வருகிறது என்பதை கண்டுப்பிடிக்கிறார்கள், அதை தொடர்ந்து அந்த அழிவை இவர்கள் எப்படி முறியடித்தார்கள் அல்லது அதிலிருந்து எப்படி தப்பித்தார் என்பதை பிரமாண்டமாக காட்டியிருக்கும் படம் தான் இந்த Ice Age: Collision Course.

படத்தை பற்றிய அலசல்

இந்த பாகத்திலும் வழக்கம் போல் அனைத்து பிரச்சனைகளுக்கு காரணமாக வருகிறது nuts-ஐ தேடும் உயிரனம், சென்ற பாகத்தில் உலகமே பிரிய இது தான் காரணம் என்பது போல் காட்டியிருப்பார்கள்.
அதேபோல் இந்த பாகத்தில் மிகப்பெரும் அழிவுக்கு காரணமாக அமைகிறது, இருந்தாலும் அதுவும் ஒரு வகை நல்லது என்பது போல் காட்டியுள்ளனர்.
மூன்றாம் பாகத்தில் வரும் டைனோசர் இதில் மீண்டும் வரும் காட்சிகள் எல்லாம் கலக்கல், எப்போதும் போல் அதிலிருந்து இந்த கூட்டணி தப்பித்து செல்லும் காட்சி ரசிக்க வைக்கின்றது.
படத்தில் வரும் தேவாங்கு 4 பாகத்தை விட இதில் காமெடியில் கலக்கியுள்ளது, அதிலும் வழிசொல்ல வரும் உயிரிணம் செய்யும் கலாட்டா செம்ம விருந்து.
மொத்தத்தில் குடும்பத்தோடு சென்று பார்க்க செம்ம ட்ரீட் இந்த Ice Age: Collision Course.

ரேட்டிங்-2.75/5

நன்றி cineulagamNo comments: