ரஷ்ய உலங்குவானூர்தி சுட்டுவீழ்த்தப்பட்டது
இணையத்தில் வெளியான டொனால்ட் டிரம்பின் மனைவியின் நிர்வாணப்படங்கள்
தரையிறங்கிய விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு
22 பயணிகளுடன் 2 பஸ்கள் மாயம்..!
மத்திய லண்டனில் தாக்குதல் ; மக்கள் அச்சத்தில்
தன்னுயிரை நீத்து 300 பேரின் உயிரைக் காப்பாற்றிய தீயணைப்பு வீரர்
ரஷ்ய உலங்குவானூர்தி சுட்டுவீழ்த்தப்பட்டது
01/08/2016 ரஷ்ய விமானப்படைக்கு சொந்தமான எம்.ஐ.-8 என்ற உலங்குவானூர்தியொன்று சிரிய கிளர்ச்சியாளர்களால் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த உலங்குவானூர்தியில் 5 பேர் பயணித்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
நன்றி வீரகேசரி
இணையத்தில் வெளியான டொனால்ட் டிரம்பின் மனைவியின் நிர்வாணப்படங்கள்
02/08/2016 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளரான டொனால்ட் டிரம்பின் மனைவி மெலினியாவின் நிர்வாணப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் (வயது 70) சமீபத்தில் நியமிக்கப்பட்டார்.
சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து விமர்சனங்களை தேடிக்கொள்வதிலும் நிகரில்லாதவராக விளங்கி வரும் குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்புக்கு ஆதரவாக அவரது மனைவி மெலினியா டிரம்ப் தற்போது பிரசார களத்தில் குதித்துள்ளார்.
யுகோஸ்லோவேக்கியா நாட்டில் 1970 ஆம் ஆண்டு நடுத்தர குடும்பத்தில் பிறந்த மெலினியா(46) மொடலிங் துறைக்குள் நுழைந்து உள்நாட்டில் பிரபலமானார்.
பின்னர், மிலன் மற்றும் பாரிஸ் நகரங்களில் மொடல் அழகியாக வலம் வந்த அவர் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் 1996 ஆம் ஆண்டு குடியேறினார். 1988 ஆம் ஆண்டு மன்ஹாட்டன் நகரில் நடந்த ஒருபார்ட்டியில் டொனால்ட் டிரம்பை சந்தித்த மெலினியா, அவரை காதலித்து, மூன்றாவது மனைவியானார்.
இந்நிலையில், அவர் மொடலிங் தொழிலில் கொடிகட்டி பறந்தபோது 1990 ஆம் ஆண்டு பகுதியில் நிர்வாணமாக எடுத்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. முழு நிர்வாண கோலத்தில் அவரது பல்வேறு புகைப்படங்களையும், இன்னொரு பெண்ணுடன் கட்டியணைத்தபடி கட்டிலில் படுத்திருக்கும் வேறு சில புகைப்படங்களையும் அமெரிக்காவின் பிரபல நாளிதழான ‘தி நியூயோர்க் போஸ்ட்டில்’ வெளியிட்டுள்ளது.
தற்போது வெளியீடப்பட்டுள்ள புகைப்படங்கள் நின்றுபோன பழைய பத்திரிகைக்காக அவர் போஸ் கொடுத்தவை மேலும், இந்தப் புகைப்படங்கள் தனக்கு மெலினியா அறிமுகம் ஆவதற்கு முன்னர் எடுக்கப்பட்டவை என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
முன்னர் வெகு வெற்றிகரமான மொடலிங்கில் திகழ்ந்த மெலினியா, இதுபோல் ஏராளமான பத்திரிகைகளின் அட்டைப்படங்களுக்கு ‘போஸ்’ கொடுத்திருந்தது எனக்கு முன்னரே தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி வீரகேசரி
தரையிறங்கிய விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு
03/08/2016 திருவனந்தபுரத்தில் இருந்து டுபாய் நோக்கிச் சென்ற 777 போயிங் ரக எமிரேட்ஸ் விமானம் விபத்திற்குள்ளானது. இன்று பகல் 12.45 மணிக்கு டுபாயில் விமானம் தரையிறங்கிய போது விமானத்தில் திடீரென தீப்பிடித்தது.
தீ விபத்தையடுத்து பயணிகள் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டனர். இந்த தீ விபத்தில் எந்த உயிர் சேதமோ, யாருக்கும் காயமோ ஏற்படவில்லை. தீயை அணைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
எவ்வாறு தீப்பிடித்தது, விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விமானத்தில் 282 பேர் பயணம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
22 பயணிகளுடன் 2 பஸ்கள் மாயம்..!
03/08/2016 மராட்டியத்தில் ஆற்றில் வெள்ளம் காரணமாக பிரித்தானிய ஆட்சிகால பாலம் இடிந்து விழுந்ததில் 22 பேருடன் 2 பஸ்கள் அடித்துச் செல்லப்பட்டது. காணாமல் போனவர்களில் இருவர் சடலாமாக மீட்கப்பட்டுள்ளனர்.
மராட்டியம் முழுவதும் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்நிலைகள் நிரம்பி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
சாவித்ரி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதியில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதன் காரணமாக ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.
மும்பை-கோவா நெடுஞ்சாலையில் சாவித்ரி ஆற்றில் 70 ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலேயர்கள் ஆட்சியில் கட்டப்பட்ட பாலம் அதிகாலை இடிந்து விழுந்துள்ளது.
பாலம் இடிந்து விழுந்த பகுதியில் சென்றுக் கொண்டிருந்த மாநில போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான 2 பஸ்கள் 22 பயணிகளுடன் அடித்து செல்லப்பட்டது.
சம்பவம் நடைபெற்ற பகுதியில் தேசிய மேலாண்மை பேரிடர் படையினர் மற்றும் மாநில மீட்பு குழுவினர் அடங்கிய மீட்பு குழு தேடுதல் மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது. நன்றி வீரகேசரி
மத்திய லண்டனில் தாக்குதல் ; மக்கள் அச்சத்தில்
04/08/2016 மத்திய லண்டனில் ரஸ்ஸல் சதுக்கத்திற்கு அருகில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் பலியானதுடன் ஐவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கையில் கத்தியுடன் வந்த நபர் பொது மக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியீட்டுள்ளன.
குறித்த தாக்குதலில் ஈடுப்பட்ட 19 வயதுடைய சந்தேக நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இத் தாக்குதல் தீவிரவாதிகளின் நடவடிக்கையாக இருக்கலாமென தெரிவிக்கப்படுகின்றது.
நன்றி வீரகேசரி
தன்னுயிரை நீத்து 300 பேரின் உயிரைக் காப்பாற்றிய தீயணைப்பு வீரர்
திருவனந்தபுரத்தில் இருந்து டுபாய் நோக்கிச் சென்ற 777 போயிங் ரக எமிரேட்ஸ் விமானம் டுபாய் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது தீப்பிடித்ததில் அதில் சிக்கிய 300 பேரை மீட்க உதவிய தீயணைப்பு வீரர் ஜசிம் இஸா முஹமட் ஹாசன் வீரமரணம் அடைந்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் இருந்து டுபாய் சென்ற எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானம் டுபாய் விமான நிலையத்தில் தரை இறங்கியபோது தரையில் மோதியதில் விமானம் தீப்பிடித்து எரிந்தது.
இச்சம்பவம் நேற்று இடம்பெற்றது.
குறித்த விபத்தில் பயணிகள் உட்பட மொத்தம் 300 பேர் உயிர் தப்பினார்கள். ஆனால் எமிரேட்ஸ் விமானம் தீ பிடித்து எரிந்தபோது பயணிகளை மீட்க போராடிய தீயணைப்பு வீரர் வீரமரணம் அடைந்துள்ளார்.
பயணிகளை மீட்கும் போது படுகாயம் அடைந்த அவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. காயமடைந்த பிற தீயணைப்பு வீரர்களுக்கு வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
பயணிகளை காப்பாற்ற அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வீரமரணம் அடைந்த தீயணைப்பு வீரர் ஜசிம் இஸா முஹமட் ஹாசனிற்கு டுபாய் விமான நிலையத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment