அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தாரின் பத்தாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, சிறுவர்களுக்கான (5 - 10 வயது) வர்ணம் தீட்டும் போட்டி




அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தாரின் பத்தாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு,  சிறுவர்களுக்கான (5 - 10 வயது) வர்ணம் தீட்டும் போட்டியொன்றை  அவுஸ்திரேலிய ரீதியாக நடாத்துகின்றோம்.
உங்களைச்சார்ந்த சிறுவர்களை ஊக்கப்படுத்தி,  இவ் வர்ணம் தீட்டுதலில் ஈடுபடுத்துமாறு பணிவன்போடு கேட்டுக் கொள்கின்றோம்.

சிறந்த தேர்வுகளுக்கான பரிசில்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐம்பதிற்கும் மேற்பட்ட, வர்ணம் தீட்டிய தாள்களும் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 21ஆம் திகதி தொடக்கம் 26ஆம் திகதிவரை, சிட்னியில் அரங்கேறவுள்ள கம்பன் கழக நிகழ்வுகளில் ('கம்பன் விழா' மற்றும் 'ஞான வேள்வி' - 2016), காட்சிக்காக வைக்கப்படவிருக்கின்றது (Regum Function Centre, Wentworthville NSW).

போட்டிக்கான விபரக்கொத்தைத் தரவிறக்கிக் கொள்ள இங்கே அழுத்தவும்.
வர்ணம் தீட்டிய தாள்களை அனுப்பிய வைப்பதற்கான முடிவுத்திகதி: 01.08.2016

மேலதிக விபரங்கள் தேவைப்படின் தொடர்பு கொள்ளவதற்கு: abiramy.thiru@gmail.com

உங்கள் நண்பர்களுடனும் இவ்pவர்ணம் தீட்டும் போட்டி விபரங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு 
அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
எங்கள் சிறார்களின் கைவண்ணம் காண ஆவலுடன் காத்திருக்கின்றோம்.
நன்றி,
அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தினர் -


மடல் வடிவமைப்பு: கோபி