நாங்கள் யார்? எமது அடையாளம் என்ன ? - மது எமில்

.
நாங்கள் யார்? எமது அடையாளம் என்ன?
இலங்கை தமிழை பூர்வீகமாக கொண்டு, இலங்கையில் பிறந்து, தமிழை ஆங்கிலம் தவிர்ந்த மொழியாக பேசிக்கொண்டு அவுஸ்திரேலியாவில் வசிப்பவர்கள்.
2016 குடிசன மதிப்பீட்டு கணக்கெடுப்பில் இல 16 - ஆங்கிலம் தவிர்ந்த வேறு எந்த மொழியை வீட்டில் பேசுகிறீர்கள் என்ற கேள்விக்கு தமிழ் என்று குறிப்பிட வேண்டியது எமது வரலாற்று கடமையாகும்.
2011 குடிசன மதிப்பீட்டு தரவுகளின்படி வெவ்வேறு பூர்வீகங்களை கொண்ட மக்களில் மொத்தமாக 50151 மக்கள் வீட்டில் தமிழை பேசுகிறார்கள் என்ற கணக்கெடுப்பின் படி தான் அவுஸ்திரேலிய அரசு நமது தமிழ் மக்களுக்கான சலுகைகளையும் மானியங்களையும் வழங்கியது என்பது மிக தெளிவான உண்மையாகும்.
கடந்த 5 வருடங்களில் இறந்தவர்களையும் நாட்டை விட்டு பல் வேறு காரணங்களால் வெளியேறியவர்களையும் தவிர்த்து புதிதாக குடியேறியவர்களும், தமிழ் பேசும் மக்களுக்கு பிறந்த குழந்தைகளும்
2016 குடிசன மதிப்பீட்டில் சேர்த்துக்கொள்ள படுவதனால் இம்முறை கணக்கெடுப்பில் இத்தொகையை இரட்டிப்பாக்குவதற்கு நாம் எல்லோரும் எம்மாலான பங்களிப்பை வழங்க வேண்டும்.


இதற்காக;
நாமும், நமது குழந்தைகளும், நமது முதியோரும், நமது தமிழ் நண்பர்களும், அவர்களை சார்ந்தவர்களும் ஆங்கிலம் தவிர்ந்த மொழியாக வீட்டில் பேசப்படும் மொழி தமிழ் என்பது குறிப்பிட பட வேண்டிய அவசியத்தை ஊக்குவிக்க வேண்டும்.
மிகவும் முக்கியமாக நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது!!!!!!!!
எமது பூர்வீகம் இலங்கை தமிழ் என்பதாகும்.
நாம் நம்மை இலங்கை தமிழர்கள் என அடையாளம் காட்டி கொண்டால் மட்டுமே உலக அரங்கில் எமது தொகை அவுஸ்திரேலியாவில் வாழும் இலங்கை தமிழர் தொகையை நிர்ணயிக்கும்.
அப்பொழுது தான் ;
1 நாம் இங்கே ஏன் புலம்பெயர்ந்தோம் என்ற வரலாறு எழுத்துகளால் பொறிக்கப்படும்.( 2011 இன் எண்ணிக்கைக்கும் 2016 இன் எண்ணிக்கைக்கும் இடையிலான வேறு பாட்டுக்கான காரணம் சுட்டிக்காட்டப்படும்)
2 நம்மிடையே நம்முடன் வாழும் இலங்கை தமிழ் சகோதர சகோதரிகளின் அகதி விண்ணப்பங்களில் கணிசமான கவன ஈர்ப்பு செலுத்தப்படும்.
3 அவுஸ்திரேலிய பிரஜா உரிமை கொண்ட இலங்கை தமிழர்கள் அகதிகளாக வந்தவர்களை வழிநடத்தக்கூடிய தகுதியையும் அவர்களை நம் சகோதரங்களாகவும் ஏற்றுக்கொண்டமையையும் உறுதிப்படுத்த முடியும்.



குறிப்பு;
"இலங்கை" என்பது தான் நாம் பிறந்த நாடு.
Ceylon என்ற பெயர் Sri Lanka என மாற்றப்பட்டமை ஓர் துரதிர்ஷ்டமான, தமிழர்களாகிய எம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாத சொற்பதம் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
ஆனால் சமகாலத்தில் எம்மை உலக அரங்கிலோ, அவுஸ்திரேலியாவிலோ இலங்கை தமிழர்கள் என அடையாளப்படுத்த வேண்டிய தேவையை நாம் உணர வேண்டும்.
இதனை அவுஸ்திரேலிய தமிழர் பேரவையும், தமிழ் பாடசாலைகளின் கூட்டமைப்பும், தமிழ் மூத்தோர் சங்கங்களும் உணர்ந்து செயல்படுவார்கள் என எதிர்பார்க்கிறோம்.
"Other " என்ற சொற்பதம் கணக்கெடுப்பில் "Other" என்று மட்டும் தான் குறிப்பிடப்படும் என்பது தவிர்க்க முடியாத்து "Tamil nfd" என்ற பூர்வீகம் எமக்கு ஓர் அடையாளத்தை கொடுக்காது என்பதனை nfd (no further definison) குறித்து நிற்கிறது என்ற உண்மையை உணர்ந்துதானாக வேண்டும்.
இத்துடன் இணைக்கப்பட்ட 2011 குடிசன மதிப்பீட்டு புள்ளிவிபரங்கள் நாம் கடந்த காலத்தில் விட்ட தவறையும், எதிர் காலத்தில் விடப்போகும் தவறையும் புத்தி ஜீவிகளுக்கு உணர்த்தும் என்பதில் எந்த ஐயமுமில்லை.
"இலங்கை தமிழர்" என்ற சொற்பதம் எம்மை "Ceylon tamil" என்றோ அல்லது "தமிழ் ஈழ தமிழர்" என்றோ மட்டுமே மறைமுக அடைமானம் கொள்ளப்படும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
இலங்கை தமிழர்களாக நம்மை அடையாளம் காட்டி மற்றய உலக தமிழர்களோடு இணைந்து தமிழ் மொழியையும் தமிழ் இனத்தையும் வளர்த்து வாழ வைக்கும் முற்போக்கு சிந்தனையை நமதாக்கிக்கோள்வோம்!
வாழ்க தமிழ்! வளர்க தமிழ் மொழி

No automatic alt text available.
LikeShow more reactions
C

No comments: