வானமுதம் சிறுகதை, கவிதைப் போட்டிகள்.

.
அவுஸ்திரேலியாவில் வானமுதம் தமிழ் ஒலிபரப்புச் சேவையின் சிறுகதை, கவிதைப் போட்டிகள். 
அவுஸ்திரேலியாவில் மெல்பேணிலிருந்து ஒலிபரப்பாகும் வானமுதம் தமிழ் ஒலிபரப்புச் சேவையின் பத்தாவது ஆண்டு நிறைவையொட்டி அனைத்துலக ரீதியான சிறுகதை, கவிதைப் போட்டிகளை நடாத்துவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உலகெங்கும் வாழும் தமிழ் பேசும், எழுதும் எவரும் இப்போட்டிகளில் பங்கு பற்றலாம். சிறுகதைகள் 3000 சொற்களுக்கு மேற்படாமலும் 750 சொற்களுக்கு உட்படாமலும் அமைதல் வேண்டும். கவிதைப்போட்டிக்கு அனுப்பப்படுபவை மரபுக்கவிதையாயின் 40 வரிகளுக்கு குறையாமலும், புதுக்கவிதையாயின் 240 சொற்களுக்கு குறையாமலும் இருத்தல் வேண்டும்.
 1. கவிதைகள் பிவரும் தலைப்புக்களில் ஒன்றைப் பற்றியதாக இருக்கவேண்டும்.


  • உலகமொழியாக உயர்ந்த தமிழ் !
  • ஊடங்கள் தமிழை உருக்குலைக்குமா ?
  • தாயகங்களில் தமிழ் நிலைக்குமா?
  • செந்தமிழ் மொழியின் சிறப்பினைப் போற்றுவோம் !
  • வீரம் நிறைந்த தமிழினமே, சோரம்போகலாமா?
 1. முடிவுத்திகதி 05.செப்டம்பர் 2016. இத்திகதிக்கு முன்னர் கிடைக்கக்கூடியதாக ஆக்கங்கள் அனுப்பிவைக்கப்படவேண்டும்.
அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி :-
Vaanamutham. Whittlesea Tamil Association
P.O.BOX - 93. Thomastown. Victoria - 3074. Australia.
மின்னஞ்சலில் :- vaanamutham@hotmail.com
இப்போட்டிகளுக்கான பரிசு விபரங்கள் பிவருமாறு :-
சிறுகதை                          கவிதை
1 ம் பரிசு AUS $ 250      1 ம் பரிசு  AUS $ 150                       

2 ம் பரிசு  AUS $ 200    2 ம் பரிசு AUS $100                                       3 3ம் பரிசு AUS $ 150      3 ம் பரிசு AUS $ 50