மட்டக்களப்பு அரங்க ஆய்வுகூடம் யாழ்ப்பாணத்தில் நிகழ்த்திய மட்டக்களப்புக் கூத்துக்களின் பரிணாமம் ஓர் விவரண அரங்க ஆற்றுகையாழ்ப்பாண அரங்கச் செயற்பாட்டுக் குழுவினர்  ஆதரவில் 19.7. 2016 இடம் பெற்ற பண்பாட்டுமலர்ச்சிக் கூடத் திறப்பு விழாவன்று
மட்டக்களப்பு அரங்க ஆய்வு  கூடத்தினர் புதுவிதமான  ஒர்  அரங்க ஆற்றுகை செய்தனர்
 மட்டக்களப்புக் கூத்து அரங்கினையும் அதன் பரிமாணங்களையும் விரிவுரை முறையில் விளக்கும் அதே வேளை நாடகத் தன்மை கொண்டதாகவும்,இது அமைந்திருந்தது
அரங்க ஆய்வுகூட மாணவர்கள் பதின்மருடன் பேராசிரியர் மௌன்குருவும் இவ்வரங்க  ஆற்றுகையில் கலந்து கொண்டார்
.பிரதான உரையை அவரே நடத்தியதுடன் ஆற்றுகையினையும் வழி நடத்தினார்அவரது உரைக்கு ஏற்ப அரங்க ஆய்வுகூட மாணவர்கள்  நிகழ்வுகளை அளித்தனர்  
இதனை அவர்கள்  விவரண அரங்க ஆற்றுகையாகத் தயாரித்திருந்தனர்
ஒரு விவரணப்படம் பார்ப்பதுபோல இது அமைந்திருந்தது
.மட்டக்களப்புத் தென்மோடி வடமோடிக் கூத்துக்களின்
 மத்தள ஓசை
,சதங்கை ஒலி,
சல்லரி ஓசை
 என்ற வாத்தியங்களின் பின்னணியில்
உரையாடல்
,பேச்சு
மேடை அசைவுகள்
,நடிப்பு
 தென்மோடி,வடமோடி ஆட்டங்கள்
 பாடல்கள்
 என் பனவற்றிற்கூடாக இவ் வாற்றுகை நகர்த்தப்பட்டது.

பேராசிரியர் மௌனகுரு இந்த ஆற்றுகையை வடிவமைத்திருந்ததுடன்  பிரதான  உரையாளராகவும் அவரே கடமை புரிந்தார்
1940 களிலிருந்து இற்றைவரையான மட்டக்களப்புக் கூத்தின் பரிமாணம் உரை,நிகழ்த்துகை என்பன மூலம்  காட்சிப்படுத்தப் பட்டன
மட்டக்களப்பின் பிரபல கூத்துக்களான இராமநாடகம்,நொண்டி நாடகம்,தர்மபுத்திரன் நாடகம்  ஆகியவற்றிலிருந்து சில காட்சிகளும்
 கூத்தை அடிநாதமாகக் கொண்டு   பேராசிரியர் மௌனகுரு தயாரித்த நாடகங்களான சங்காரம்,சக்தி பிறக்குது,இராவணேசன் காண்டவதகனம் ஆகிய புதிய கூத்து வடிவ நாடகங்களிலிருந்து சில காட்சிகளும்  ஆற்றுகைகள்  செய்யப்பட்டு இடையிடையே விளக்கங்களும் கொடுபட்டன


பழமையும் புதுமையம்  இணைந்த இவ் விவரண அரங்க ஆற்றுகை மட்டக்களப்புக் கூத்தை அறியாதோர்க்கு  ஒரு அறிமுகமாகவும் அறிந்தோர்க்கு  மேலும் அது பற்றிய தேடல் எண்ணத்தைத்  தருவதாகவும்   அமைந்திருந்ததுNo comments: