இலங்கையின் கடன் கோரிக்கையை IFM நிராகரிப்பு

  குளோபல்தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு

இலங்கையின் கடன் கோரிக்கையை IFM நிராகரிப்பு
 இலங்கையின் கடன் கோரிக்கையை சர்வதேச நாணய நிதியம் நிராகரித்துள்ளது. இலங்கைக்கு புதிதாக கடனுதவிகளை வழங்க முடியாது என அறிவித்துள்ளது. இலங்கையின் புதிய அரசாங்கம் 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனுதவியாக பெற்றுக்கொள்ள உத்தேசித்திருந்தது.

கடந்த அரசாங்கத்தின் கடன் கொடுப்பனவுகளை ஈடு செய்யும் நோக்கில் இவ்வாறு புதிய அரசாங்கம் கடன் பெற்றுக்கொள்ள முயற்சித்துள்ளது. மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் சீனாவிடம் பாரியளவில் கடன் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் இந்தக் கடன் தொகையில் ஒரு தொகுதியை மீள செலுத்துவதற்கு குறைந்த வட்டியில் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்றுக்கொள்ள முயற்சித்துள்ளது.

இலங்கையின் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க கடந்த மாதம் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியிடம் கடன் பெற்றுக்கொள்ள முயற்சித்திருந்தார். இலங்கையில் உடனடி பொருளாதார நெருக்கடிகள் எதுவும் கிடையாது எனவும் இதனால் கடன் வழங்குவது சாத்தியமில்லை எனவும் சர்வதேச சர்வதே நாணய நிதியம் அறிவித்தள்ளது.

2009ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இலங்கையின் அந்நிய செலவாணி தொகை சாதகமான நிலைமையில் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளது. தென் ஆசியாவில் துரித கதியில் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் வரிசையில் இலங்கை முன்னணி வகிப்பதாகத் தெரிவித்துள்ளது.

No comments: