கோத்தா முகாம் என்ற ஒன்று இல்லை ; முன்னாள் கடற்படை தளபதி

.

கோத்தா முகாம் என்ற பெயரில் எதுகுமில்லை. இது கடற்படையினருக்கு சேறுபூசுவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பொய் பிரச்சாரம் என முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட தெரிவித்துள்ளார்.   அண்மையில் தமிழ்  தேசியக் கூட்டமைப்பின்  பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ்பிரேமச்சந்திரன் கோத்தா முகாம் குறித்து நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.   இதனையடுத்து முன்னாள் கடற்படைத்தளபதியிடம் கொழும்பு ஊடகம் ஒன்று கேள்வியெழுப்பியிருந்தது. அதற்குப் பதிலளிக்கும்  போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.   அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,      கோத்தா என்ற பெயரில் கடற்படை முகாம் இருப்பதாக நான் அறிந்த வரையில் இல்லை.   இது கடற்படையினருக்கு சேறுபூசுவதற்காக எவரோ மேற்கொண்டு வரும் பொய் பிரச்சாரம்.உண்மையை வெளியிட வேண்டிய தேவை எனக்கு உள்ளது.    விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதில் கடற்படையினர் முக்கிய 

பங்காற்றினர். ஆயிரக்கணக்கான கிலோ மீற்றர் தூரம் சென்று புலிகளின் கப்பலைகளை கடற்படையினர் அழித்தனர்.   எமது சக்திக்கும் அப்பால் சென்றே நாம் இவற்றைச் செய்தோம். அவ்வாறான முக்கிய சேவையை செய்த கடற்படையினர் மீது சேறுபூசுவதை பார்த்து கொண்டிருக்க என்னால்  முடியாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.    இதேவேளை, திருகோணமலையில் கடற்படையினருடைய கோத்தா முனாம் ஒன்று இருந்ததாகவும் அதில் 700ற்கு மேற்பட்ட தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்திருந்தது.   அத்துடன் குறித்த முகாம் குறித்து விசாரணைகளை நடாத்த வேண்டும்  எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமும்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும்  அறிவித்துள்ளாகவும் கூட்டமைப்பு மேலும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  -
Nantri onlineuthayan

No comments: