இலங்கைச் செய்திகள்



தமிழ் மக்கள் நம்பும் வகையில் விசாரணை அமைய வேண்டும்

துமிந்த சில்வாவுக்கு எதிராக குற்றப்பத்திரம்

யோசித்தவிடம் வாக்குமூலம் பெறப்பட்டது

தமிழ் மக்கள் நம்பும் வகையில் விசாரணை அமைய வேண்டும்

04/03/2015 இலங்கை அர­சாங்­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்ள உள்­ளக விசா­ரணை பொறி­மு­றை­யா­னது நம்­ப­க­ர­மா­கவும் சர்­வ­தேச தரத்தின் அடிப்­ப­டை­யிலும் அமை­ய­வேண்டும். அத்­துடன்
உள்­ளக செயற்­பாடு நம்­ப­க­ர­மாக உள்­ள­தாக கடந்த கால யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்கள் கரு­த­வேண்டும். இதனை அவர்கள் வலி­யு­றுத்­தினர் என்று இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்ட ஐக்­கிய நாடு­களின் அர­சியல் விவ­கா­ரங்­க­ளுக்­கான உதவி செய­லாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன் தெரி­வித்தார்.

எதிர்­வரும் செப்­டெம்பர் மாத­மா­கும்­போது உள்­ளக விசா­ர­ணையில் முன்­னேற்­றத்தைக் காட்­டு­வ­தாக அர­சாங்கம் உறு­தி­ய­ளித்­துள்­ளது. எனவே செப்­டெம்பர் மாத­தத்தில் முன்­னேற்­றத்தைக் காட்­டு­மாறு அர­சாங்­கத்­துக்கு கூறு­கின்றோம். உறுப்பு நாடுகள் இதனை பார்த்­துக்­கொண்­டி­ருக்­கின்­றன என்றும் அவர் குறிப்­பிட்டார்.


மேலும் காணி விவ­காரம் தடுத்து வைக்­கப்­பட்­டோரின் நிலை காணாமல் போதல் சம்­ப­வங்கள் மற்றும் சிவில் செயற்­பா­டு­களில் இரா­ணு­வத்தின் ஈடு­பாடு போன்ற விட­யங்­களை குறு­கிய காலத்தில் ஆரா­யு­மாறு அர­சாங்­கத்தின் தலை­வர்­களை வலி­யு­றுத்­தி­ய­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.
2009 ஆம் ஆண்டு யுத்­தத்தின் பின்னர் இன்னும் தீர்க்­கப்­ப­டாத பல விவ­கா­ரங்கள் இலங்­கையில் காணப்­ப­டு­கின்­றன. அந்த தீர்க்­கப்­ப­டாத விவ­கா­ரங்­க­ளுக்கு தீர்­வு­காண்­ப­தற்கு தற்­போது சிறந்த சந்­தர்ப்பம் கிடைத்­துள்­ளது. மேலும் இலங்­கையும் ஐ.நா.வும் இணைந்து செயற்­ப­டு­வ­தற்கும் சிறந்த சந்­தர்ப்பம் ஏற்­பட்­டுள்­ளது என்றும் அவர் கூறினார்.
இலங்­கைக்­கான விஜ­யத்தை முடி­த­துக்­கொண்ட ஐக்­கிய நாடு­களின் அர­சியல் விவ­கா­ரங்­க­ளுக்­கான உதவி செய­லாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன் நேற்று பிற்­பகல் கொழும்பில் ஐ.நா. அலு­வ­ல­க­ததில் நட­த­திய செய்­தி­யாளர் சந்­திப்­பி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.
அவர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்,
பான் கீ மூன் கோரினார்
ஐக்­கிய நாடு­களின் செய­லாளர் நாயகம் என்னை இலங்­கைக்கு விஜயம் செய்­யு­மாறு கோரினார். அதன்­படி இலங்கை வந்த நான் கடந்த நான்கு தினங்­க­ளாக மிகவும் பய­னுள்ள சந்­திப்­புக்­களை நடத்­தினேன். இலங்­கையில் இடம்­பெற்ற ஜன­நா­யக தேர்தல் மற்றும் அமை­தி­யான அதி­கார மாற்றம் என்­பன இலங்­கையை மட்­டு­மல்ல சர்­வ­தேச சமூ­கத்­தையும் கவர்ந்­தது. அந்­த­வ­கையில் எனது விஜ­யத்­துக்கு ஏற்­பா­டு­களை செய்த வர­வேற்ற இலங்கை அர­சாங்­கத்­துக்கு நன்றி கூறு­கின்றேன்.
சந்­திப்­புக்கள்
எனது இலங்கை விஜ­யத்­தின்­போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க பதில் வெளி­வி­வ­கார அமைச்சர் அஜித் பெரெரா ஜாதிக ஹெல உறு­ம­யவின் தலை­வர்கள் சிறி­லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வர்கள் தமிழ்க் கூட்­ட­மைப்பின் தலை­வர்கள் ஆகி­யோரை சந்­தித்தேன். யாழ்ப்­பா­ணத்தில் வடக்கு முதல்வர் மற்றும் ஆளு­நரை சந்­தித்து பேச்சு நட­த­தினேன். அத்­துடன் சிவில் சமூக பிர­தி­நி­தி­க­ளையும் சந்­தி­தது உரை­யா­டினேன். சிறந்த எதிர்­கால மற்றும் ஜன­நா­யக நாடு ஒன்­றுக்­காக இலங்­கையில் நான் சந்­தித்­த­வர்கள் கூறிய விட­யங்கள் என்னை கவர்ந்­தது.
ஐ.நா.வும் இலங்­கையும்
2015 ஆம் ஆண்டு ஐ.நா. உரு­வாகி 70 வரு­டங்­களை பூர்­ததி செய்­கின்­றது. அதே­போன்று இலங்­கை­யு­டன ஐ.நா. வின் உறவு எற்­ப­டுத்­தப்­பட்டு 60 வரு­டங்கள் நிறை­வ­டை­கின்­றன. ஐ.நா. வுக்கு இலங்கை பாரய பங்­க­ளிப்­புக்­களை செய்­துள்­ளது. வீர­மந்­திரி ஜயந்த தன­பால ராதிகா குமா­ர­சு­வாமி உள்­ளிட்ட பலர் ஐ.நா.வுக்கு பங்­க­ளிப்பு செய்­துள்­ளனர். தற்­போது வட மாகாண ஆளுநர் மிகவும் நெருக்­க­டி­யான காலத்தில் ஐக்­கிய நாடுகள் சபையில் இருந்தார்.
சிறந்த சந்­தர்ப்பம்
அந்­த­வ­கையில் தற்­போது இலங்­கைக்கும் ஐக்­கிய நாடு­க­ளுக்கும் இடை­யி­லான உறவை கட்­டி­யெ­ழுப்­பவும் உறவை பலப்­ப­டுத்­தவும் சிறந்த சந்­தர்ப்பம் தற்­போது கிடைத்­துள்­ள­தாக ஐ.நா. செய­லாளர் நாயகம் நம்­பு­கின்றார். இலங்கை நீண்­ட­கால யுத்தம் கார­ண­மாக பாதிக்­கப்­பட்­டி­ருந்­தது என்­ப­தனை ஐ.நா. ஏற்­றுக்­கொள்­கின்­றது.
கவ­லைகள் உள்­ளன
பல ஆணைக்­கு­ழுக்­களின் செயற்­பா­டு­களின் பின்­னரும் இன்னும் பல கவ­லை­களும் தீர்க்­கப்­ப­டாத பிரச்­சி­னை­களும் இலங்­கையில் காணப்­ப­டு­கின்­றன. ஜெனி­வாவில் வெளி­வி­வ­கார அமைச்சர் சம­ர­வீர வழங்­கி­யுள்ள வாக்­கு­று­தியின் பிர­காரம் இந்த அர­சாங்கம் நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்­புக்­கூ­றலில் அர்ப்­ப­ணிப்பை காட்டும் என்று நம்­பு­கின்றோம். 2009 ஆம் ஆண்டு பான் கீ மூன் இலங்கை வந்­த­போது செய்­து­கொள்­ளப்­பட்ட கூட்­ட­றிக்கை இங்­கு­உள்­ளது. எனவே இலங்­கையில் நிலை­யான அமைதி மற்றும் சிறந்த எதிர்­கா­லத்­துக்க நம்­ப­க­ர­மான மற்றும் உண­ரக்­கூ­டிய முன்­னேற்றம் தேவைப்­ப­டு­கின்­றது.
குறு­கிய கால திட்­டங்கள்
அந்­த­வ­கையில் காணி விவ­காரம் தடுத்து வைத்­தல்கள் காணாமல் போதல் சம்­ப­வங்கள் மற்றும் சிவில் செயற்­பா­டு­களில் இரா­ணு­வத்தின் ஈடு­பாடு போன்ற விட­யங்­களை குறு­கிய காலத்தில் ஆரா­யு­மாறு அர­சாங்­கத்தின் தலை­வர்­களை வலி­யு­றுத்­தினேன். மேலும் ஐ.நா.வும் சர்­வ­தேச சமூ­கமும் எதிர்­பார்க்­கின்ற வகையில் இலங்கை சில மாதங்­களில் பொறுப்­புக்­கூ­ற­லுக்­கான வடி­வ­மைப்பு ஒன்றை செய்யும் என்று நம்­பு­கின்றோம். இது இல­கு­வான விட­ய­மல்ல. ஆனால் இவை அத்­தி­யா­வ­சி­ய­மான செயற்­பா­டாகும். இவற்றை இலங்கை சமூ­கங்­களும் சர்­வ­தேச சமூ­கமும் எதிர்­பார்க்­கின்­றது.
நம்­பிக்­கை­யின்மை தொடர்­கின்­றது
மேலும் இலங்­கையில் இன்னும் தமிழ் மற்றும் சிங்­கள சமூ­கங்­க­ளுக்கு இடையே நம்­பிக்­கை­யின்மை காணப்­ப­டு­கின்­றது என்­பது கேள்­விக்கு அப்­பாற்­பட்ட விட­ய­மாகும். எனவே உள்­ள­டக்­கங்கள் மற்றும் கலந்­து­ரை­யா­டல்கள் ஊடாக இவற்­றுக்கு தீர்­வு­கா­ணு­மாறு கோரு­கின்றோம். அனைத்து சமூ­கங்­களும் இதில் பங்­கெ­டுக்­க­வேண்டும் என்­ப­த­னையே உள்­ள­டக்கும் என்று கூறு­கின்றோம். இலங்­கையின் கோரிக்­கைக்கு அமை­வாக பொறுப்­புக்­கூறல் மற்றும் நல்­லி­ணக்க செயற்­பா­டு­க­ளுக்கு இலங்­கைக்கு ஐக­கிய நாடுகள் சபை பொருத்­த­மான வழி­களில் உதவி செய்யும்.
இலங்கை தீர்­மா­னிக்­க­வேண்டும்
என்­றாலும் செயற்­பாட்டை எவ்­வாறு மேற்­கொள்­வது என்­ப­தனை இலங்­கையே தீர்­மா­னிக்­க­வேண்டும். இலங்கை நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்­புக்­கூறல் விட­யங்­களில் நம்­ப­க­ர­மான செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­கும்­போது இலங்­கையின் தலை­வர்கள் மற்றும் மக்­க­ளுக்­காக ஐக்­கிய நாடுகள் சபை முன்­னிற்கும்.
கேள்வி: என்ன செய்­தியை ஐக­கிய நாடுகள் சபைக்கு கொண்டு போவீர்கள்?
பதில்: இலங்­கையும் ஐ.நா.வும் இணைந்து செயற்­ப­டு­வ­தற்கும் சிறந்த சந்­தர்ப்பம் ஏற்­பட்­டுள்­ளது என்­பது எனது செய்­தி­யாகும். மேலும் நம்­பிக்­கை­யின்மை இன்னும் உள்­ளது. அந்த நிலை மாற­வேண்டும். உதவி கோரப்­பட்டால் அதற்கு நாங்கள் உதவி செய்­யலாம்.
கேள்வி: உள்­ளக செயற்­பாட்டை எவ்­வாறு நம்­பு­வீர்கள்?
பதில்: ஐ.நா. வுக்கு உறுப்பு நாடுகள் உள்­ளன. சாச­னங்கள் உள்­ளன . உறுப்பு நாடுகள் தமது உள்­ளக செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­க­வேண்டும் என்று . ஐ.நா. எதிர்­பார்க்­கின்­றது. உள்­ளக செயற்­பா­டுகள் நம்­ப­க­ர­மாக அமை­ய­வேண்டும். சர்­வ­தேச தரத்­துக்கு உட்­ப­ட­வேண்டும். அர­சாங்கம் சர்­வ­தேச தரத்­துக்கு உள்­ளக செயற்­பாட்டை முன்­னெ­டுப்­ப­தாக கூறி­யுள்­ளது. பாதிக்­கப்­பட்ட மக்கள் உள்­ளக செயற்­பாடு நம்­ப­க­ர­மா­னது என்­ப­தனை நம்­ப­வேண்டும். குறிப்­பாக தமிழ் மக்கள் இந்த செயற்­பா­டுகள் நம்­ப­ர­மாக இருக்­க­வேண்டும் என்று நம்­ப­வேண்டும். இதனை என்னை சந்­தித்த அந்த மக்கள் வலி­யு­றுத்­தினர்.
கேள்வி: செப்­டெம்­பரில் ஐ.நா. வின் அதே அறிக்கை வெளி­வ­ருமா?
பதில்: செப்­டெம்­பரில் ஐ.நா. வின் அறிக்கை முன்­னேற்­ற­க­ர­மாக வெளி­வரும். மனித உரிமை ஆணை­யாளர் அறிக்­கையை பிற்­போ­டு­மாறு கோரி­யி­ருந்தார். அடிப்­படை விட­யங்கள் அவ்­வாறே வெளி­யி­டப்­படும்.
கேள்­வி:­உள்­ளக செயற்­பாட்­டுக்கு ஐக்­கிய நாடுகள் சபை உத­வுமா?
பதில்: நிச்­ச­ய­மாக சர்­வ­தேச தரம் வாய்ந்த உள்­ளக செயற்­பாட்­டுக்கு ஐக்­கிய நாடுகள் சபை உதவும். அறிக்கை தாமதம் சில தரப்­புக்­க­ளுக்கு சிக்­கலை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கலாம். ஆனால் அது உள்­ளக செயற்­பாட்­டுக்கு கால அவ­காத்தை வழங்­கி­யுள்­ளது.
கேள்வி: புதிய அர­சாங்கம் பத­விக்கு வந்­துள்ள நிலையில் ஐக்­கிய நாடுகள் சபை விசா­ர­ணை­யா­ளர்கள் வர­வ­ழைக்­கப்­ப­டு­வார்­களா?
பதில்: இலங்கை அர­சாங்கம் ஐக்­கிய நாடு­களின் விசேட அறிக்­கை­யா­ளர்­களை அழைத்­துள்­ளது. வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர ஜெனி­வாவில் இந்த அழைப்பை விடுத்­துள்ளார்.
கேள்வி: விசா­ர­ணை­யா­ளர்கள்?
பதில்: இலங்­கைக்கும் ஐக­கிய நாடுகள் சபைக்கும் இடையில் பேச்­சுக்கள் இடம்­பெ­று­கின்­றன.
கேள்வி: உள்­ளக செயற்­பாடு நம்­ப­க­ர­மாக அமை­யா­விடின் ஐக­கிய நாடுகள் சபை என்ன செய்யும்?
பதில்: ஐ.நா. மனித உரிமை பேர­வைக்கு உறுப்பு நாடுகள் உள்­ளன. உறுப்பு நாடுகள் இல்­ங­கையின் செயற்­பா­டு­களை பார்க்கும். உள்­ளக நம்­ப­க­ர­மான விசா­ர­ணையை முன்­னெ­டுக்க இலங்கை அர­சாங்கம் கால அவ­கா­சத்தைக் கோரி­யுள்­ளது. இந்த கால அவ­கா­சத்தை இலங்கை எவ்­வாறு பயன்­ப­டுத்தும் என்று உறுப்பு நாடுகள் பார்க்கும். கண்­கா­ணிப்பு இருக்கும். செப்­டெம்பர் மாதம் முக்­கியம்.
கேள்வி: ஐ.நா. எவ்­வாறு உள்­ளக செயற்­பாட்டை மதிப்­பிடும்?
பதில்: உள்­ளக செயற்­பா­டுகள் சர்­வ­தேச தரத்­துக்கு அமை­ய­வேண்டும்.
கேள்வி: உள்­ளக செயற்­பா­டு­க­ளுக்கு எவ்­வ­ளவு காலம் அர­சாங்­கத்­தக்கும் வழங்­கப்­பட்­டுள்­ளது?

பதில்: இல்­ஙகை நீண்­ட­கால மோத­லினால் பாதிக்­கப்­பட்­டது. அனைத்து சமூ­கங்­களும் பாதிக்­கப்­பட்­டன. பல கவ­லைகள் உள்­ளன. உள்­ளக நம்­ப­க­ர­மான செயற்­பா­டு­க­ளுக்கும் காலம் எடுக்கும். அர­சாங்கம் ஆறு மாதங்­க­ளுக்கு ஐ.நா. அறிக்­கையை தாம­தப்­ப­டுத்­து­மாறு கேட்டது. எனவே இப்போதிருந்து செப்டேம்பர் வரையான காலப்பகுதியை பயன்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். அரசாங்கம் ஊக்கத்தில் உள்ளது. அர்ப்பணிப்பை தலைவர்களிடத்தில் கண்டேன்.
கேள்வி: சிவிலியன் செயற்பாடுகளில் இராணுவ ஈடுபாடு குறித்து பேசியுள்ளீர்கள்?
பதில்: நம்பிக்கையின்மை இங்கு இன்னும் காணப்படுகின்றது. எனவே நம்பிக்கையை ஏற்படுத்த குறுகிய கால செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு கோரினோம். சிவிலியன் செயற்பாடுகளில் இராணுவத்தின் ஈடுபாடு குறித்தும் பேசப்பட்டது.
இலங்கையில் சிறந்த சந்தர்ப்பத்தை நாங்கள் கண்டோம். தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபை இலங்கையுடன் இணைந்து செயற்படும். உதவி கோரப்பட்டால் ஆலோசனைகளையும் உதவிகளை ஐ.நா. வழங்கும். யுத்தம் முடிந்த பின்னர் இன்னும் பல பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்படவில்லை. அவை தொட்ர்பில் எதிர்பார்ப்புக்கள் உள்ளன. அந்த தீர்க்கப்படாத பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இலங்கையின் தலைமைத்துவத்துக்கு சிறந்த சந்தர்ப்பம் தற்போது கிடைத்துள்ளது.   நன்றி வீரகேசரி 








துமிந்த சில்வாவுக்கு எதிராக குற்றப்பத்திரம்

04/03/2015 முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த­ ரா­ஜ­ப­க்ஷவின் ஆலோ­ச­கர்­களில் ஒரு­வ­ராக இருந்த பாரதலக்ஷ்மன் பிரே­ம­ச்சந்­திர உள்­ளிட்ட நால்­வரை படு­கொலை செய்­தமை தொடர் பில் கொழும்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஆர்.துமிந்த சில்வா உள்­ளிட்ட 13 பேருக்கு எதி­ராக குற்றப் பத்­தி­ரிகை தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது. கொழும்பு மேல் நீதி­மன்றில் நேற்ரு இந்த குற்ரப் பத்­தி­ரி­கை­யினை சட்ட மா அதிபர் திணைக்­களம் தாக்கல் செய்­தது.
பாரத லக்ஷ்மன் பிரேம சந்­திர, தர்­ஷன ஜய­தி­லக, மொஹம்மட் அஸ்மி, மினிமெல் குமா­ர­சு­வாமி ஆகி­யோரை சுட்டுக் கொன்­றமை பார­த­லக்ஷ்மன் பிரே­ம­சந்­தி­ரவின் பாது­காப்பு உத்­தி­யோ­கத்தர் ராஜ­பு­ரகே காமி­னிக்கு கடுங் காயம் ஏற்­ப­டுத்­தி­யமை, சட்ட விரோத கோட்டம் கூடி­யமை, கொலை முயற்சி உள்­ளிட்ட 17 குற்ரச் சாட்­டுக்­களை சுமத்­தியே சட்ட மா அதி­பரால் இந்த குற்றப் பத்­தி­ரிகை தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.
பாரா­ளு­மன்ற உறுப்­பினர் துமிந்த சில்­வா­வுக்கு மேல­தி­க­மாக அனுர துஷார டீ மெல், சந்­தன ஜகத் குமார, சமிந்த ரவி ஜயநாத்,லன்கா ரசஞ்­சன, மாலக சமீர, விதான கமகே அமில, சரத் பண்­டார, சுரங்க பிரே­மலால், சமன் குமார அபே­சிங்க, ஜானக பண்­டார, ரோஹன மார­சிங்க மற்றும் நாகொட லிய­னா­ரச்­சிகே சமிந்த ஆகி­யோரை பிர­தி­வா­தி­க­ளாக குறிப்­பிட்டே இந்த வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.
2001 ஆம் ஆண்டு வல்­பொல, முல்­லே­ரியா என்ற இடத்தில் தெர்தல் காலத்தின் போது பாரத லக்ஷ்மன் பிரேம சந்திரவும் அவருடன் இருந்த மேலும் மூவரும் துப்பாக்கி சமரில் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 









யோசித்தவிடம் வாக்குமூலம் பெறப்பட்டது

04/03/2015 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோசித்த ராஜபக்ஷவிடம்  கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால்  வாக்குமூலம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாரஹென்பிட்டியிலுள்ள பொருளாதார மத்திய நிலையத்திலிருந்து மீட்கப்பட்ட சிறிய ரக விமானம் தொடர்பிலேயே யோசித்த ராஜபக்ஷவிடம்  வாக்குமூலம் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 




No comments: