நமிபியா ஜனாதிபதிக்கு உலகின் பெறுமதிமிக்க தனிநபர் விருது
உக்ரேனில் மோதல்களில் 6,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்
ஈராக்கில் ஐ.எஸ். போராளிகளால் நால்வருக்கு துப்பாக்கியால் சுட்டு மரணதண்டனை நிறைவேற்றம்
சிசிலிக்கு அப்பால் மூழ்கிய குடியேற்றகளின் படகு : 10 பேர் உயிரிழப்பு
அமெரிக்க நியூயோர்க் நகரில் விமானம் ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்று விபத்து
நமிபியா ஜனாதிபதிக்கு உலகின் பெறுமதிமிக்க தனிநபர் விருது
02/03/2015 பதவியை விட்டு வெளியேறி செல்லும் நமிபியா ஜனாதிபதி ஹிபிகெபுன்ஜி பொஹம்பாவுக்கு உலகின் மிகப் பெரிய பெறுமதிமிக்க தனிநபர் விருதான ஆபிரிக்க தலைமைத்துவத்துக்கான மொ இப்ராஹிம் விருது வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வருடமும் சிறப்பாக ஆட்சி செய்யும் தலைவர் ஒருவரை தெரிவு செய்து 5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 5 வருட காலத்தில் நான்காவதாக வழங்கப்பட்ட இதற்கு முந்திய விருது எவராலும் உரிமை கோரப்படாத நிலைக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.
2004 ஆம் ஆண்டும் தொடர்ந்து 2009 ஆம் ஆண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பொஹம்பாவின் பதவியை புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஹேஜ் ஜெயிகொப் பொறுப்பேற்கவுள்ளார். நன்றி வீரகேசரி
உக்ரேனில் மோதல்களில் 6,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்
03/03/2015 ஐயும் தாண்டியுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் தலைவர்கள் திங்கட்கிழமை தெரிவித்துள்ளனர்.
மேற்படி மோதல்களால் உக்ரேனிலுள்ள பொதுமக்களது உயிருக்கும் உட்கட்டமைப்புக்கும் பாரிய அழிவு ஏற்பட்டுள்ளதாகவும் இதனை மனிதாபிமானத்துக்கு எதிரான ஒரு குற்றமாக கருத முடியும் எனவும் மேற்படி தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கிழக்கு உக்ரேனில் ஒரு வருடத்திலும் குறைந்த காலப் பகுதியில் இடம்பெற்ற மோதல்களிலேயே மேற்படி மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஸெய்த் அல் ஹுஸைன் தெரிவித்தார்.
கடந்த பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி செய்துகொள்ளப்பட்டுள்ள யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு அனைத்துத் தரப்பினரும் மதிப்பளிக்க வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார். நன்றி வீரகேசரி
ஈராக்கில் ஐ.எஸ். போராளிகளால் நால்வருக்கு துப்பாக்கியால் சுட்டு மரணதண்டனை நிறைவேற்றம்
04/03/2015 ஈராக்கிய திக்றித் பிராந்தியத்தில் ஐ.எஸ். போராளிகளால் நால்வருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படுவதை வெளிப்படுத்தும் புதிய வீடியோ காட்சியொன்று அந்த தீவிரவாத குழுவினரால் திங்கட்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் செவ்வாய்க்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டமைக்காகவே மேற்படி நால்வருக்கும் தீவிரவாதிகளால் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.திக்றித் நகரைக் கைப்பற்ற அந்நாட்டு அரசாங்கம் 30,000 படையினரை உள்ளடக்கி இராணுவ நடவடிக்கையொன்றை ஆரம் பித்த தினத்திலேயே இந்த வீடியோ காட்சி வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி கொல்லப்பட்ட நால்வரும் திக்றித் பிராந்தியத்திற்கு வடக்கேயுள்ள நகரொன்றைச் சேர்ந்தவர்கள் என அந்த வீடியோ காட்சியில் விபரிக்கப்பட்டுள்ளது.அந்த வீடியோ காட்சியில் மரணதண்டனை நிறைவேற்றத்துக்கு முன்னர் 'சஷ்வத் அல்--அலாம் அமைப்பிலிருந்து நீக்கம்' என்ற பதாகையொன்று காண்பிக்கப்பட்டது.தொடர்ந்து முகமூடியணிந்த தீவிரவாதிகளால் அந்த நால்வரும் தலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். நன்றி வீரகேசரி
சிசிலிக்கு அப்பால் மூழ்கிய குடியேற்றகளின் படகு : 10 பேர் உயிரிழப்பு
05/03/2015 குடியேற்றவாசிகளை ஏற்றிவந்த படகொன்று சிசிலிக்கு அப்பால் மூழ்கியதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேற்படி படகில் பயணித்த 211 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
சிசிலி நீரிணைக்கு அப்பால் கடந்த 24 மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட 7 மீட்பு நடவடிக்கையின் போது 941 குடியேற்றவாசிகள் மீட்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 30 க்கு மேற்பட்ட சிறுவர்களும் குறைந்தது ஒரு பெண்ணும் உள்ளடங்குகின்றனர்.
வட ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் அண்மைக் காலமாக இடம்பெற்றுவரும் மோதல்களால் இடம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளைச் சென்றடையும் முயற்சியில் நூற்றுக்கணக்கான குடியேற்றவாசிகள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
அமெரிக்க நியூயோர்க் நகரில் விமானம் ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்று விபத்து
07/03/2015 அமெரிக்கா நியூயோர்க் நகரிலுள்ள லாகார்டியா விமான நிலையத்தில் பயணிகள் விமானமொன்று ஓடுபாதையை விட்டு விலகிச் சென்று வேலியில் மோதி வியாழக்கிழமை விபத்துக்குள்ளானதில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் வீசி வரும் பனிப்புயல் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.மேற்படி விபத்தையடுத்து விமானத்திலிருந்த 127 பயணிகளும் 5 விமான ஊழியர்களும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். அவர்களில் 24 பேருக்கு சிறியளவான காயங்கள் ஏற்பட்டிருந்தாகவும் எவரும் பாரதூரமான காயங் களுக்கு உள்ளாகவில்லை எனவும் கூறப்படுகிறது.
காயமடைந்தவர்களில் இருவர் மட்டும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.அட்லான்டாவிலிருந்து நியூயோர்க்கிற்கு பயணத்தை மேற்கொண்ட 'டெல்ற்றா 1086' விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தால் விமானத்தின் முன் பகுதியும் இறக்கையொன்றும் சேதமடைந்துள்ளன. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment