சம்பிரதாயம் என்ன சொல்கிறது….சிறுகதை - நவீனன்

.

என் அன்புத் தந்தை காவலுர் ராசதுரை க்கு சமர்ப்பணம்
என்ன சில நாட்களாய்; வேலயில காணயில்லை? என்று கேட்டான் தவசீலன் வீதியில் தன் நண்பன் குணசிங்கத்தைக் கண்டதும்.
இல்லை சித்தப்பா சிறி லங்காவிலிருந்து வந்திருக்கிறார் அதுதான் என்றான் குணசிங்கம்.
அவர் வந்தால் என்ன? என்று கேட்டான் தவசீலன்.
இல்லை சிலகாலம் நான் வீட்டில்தான் இருக்க வேண்டும். என்;றான் குணம் பெருமூச்சுடன்.
ஏனடா? என்று கேட்டான் தவசிலன்.
சற்று பின்வாங்கியபின்னர் சொன்னான் குணம்: அவர் என்ன தேத்தண்ணீ போடமாட்டார். சமைக்கத் தெரியாது! கடைக்குப் போகமாட்டார்….நான்தான் எல்லாம் செய்து கொடுக்க வேண்டும்!
தவசீலனுக்குத் தூக்கிவாரிப்போட்டது.



அதுக்காக வேலைக்கு வராமல் விடுவதா என்று கேட்டான் தவசீலன்.
என்ன செய்கிறது? சம்பிரதாயம் என்;று ஒன்று இருக்கிறதல்லவா? என்றான் குணம் பதிலாக.
என்ன சம்பிரதாயம் என்று கேட்டான்? தவசீலன் கோபமாக.
என்ன தேத்தண்ணி போட்டு கொடுக்கிறதும் சமைத்துக் கொடுக்கிறதும் சம்பிரதாயமா? என்றான் தவசீலன் விசனத்துடன்.
என்ன செய்கிறது என்று முனகினான் குணம். சித்தப்பா ஆச்செ! அத்துடன் வயசானவரும்கூட. இனி இங்கேதான் இருக்கப்போகிறார்.
நீயும் வேலை செய்து காசு சேர்த்து அனுப்பத்தானே வேணும்! அதுவும் சம்பிரதாயம்தானே! என்று கேட்டான் தவசீலன்.
பதில் சொல்ல முடியாமல் மௌனமானான் குணம்.
கவனமடா! இப்பதான் வேலை இருக்கிறது. கிறிஸ்மஸ் முடிந்தபின்னர் வேலை இருக்காது! தெரியும்தானே? என்றான தவசீலன் விசனத்துடன்.
தவசீலன் சொல்வதும் உண்மைதான்.
அவன் புதுப்புது ஆட்களையெல்லாம் வேலையில் சேர்து;துக்கொண்டிருக்கிறான். ஊனக்கு வேலை போனாலும் போய்விடும்!
சில வேலை கிறிஸ்மஸ் காலம் மட்டும்தான்;! அதுக்குப் பின்னர் இல்லை. பின்னர் உயிர்த்தெழுந்த திருநாளுக்கு முன்னர்தான் மீண்டும் வேலை கூடும்.
அது சரி அக்காவுக்கு எப்ப கல்யாணம்? என்று கேட்டான் தவசீலன்.
சீக்கிரம். சீதனக்காசு சரியெண்டவுடன் எல்லாம் நடக்கும் என்றான் குணம்.
பார்த்தியா! நீயும் வேலை செய்யத்தானே வேண்டும் என்று கேட்டான் தவசீலன்.
தவசீலன் சொல்லும் கதை உண்மைதான். ஆனாலும் குணத்துக்குக் கழர வழியிருக்கவில்லை. சித்தப்பா வெளிநாடு வந்துவிட்டார். வேறு உறவினர்கள் ஒருவரும் இங்கே இல்லை. குணம் தான் ஒரே ஒரு உறவினன்.  
அதுபோக சித்தப்பா வெளிநாடு போனதில்லை. வெளிநாட்டு வாழ்க்கை தெரியாது! போக கையை உயர்த்தப்போகிறார்!
சரி சரி வேலைக்குத் தாமதமாகிறது. பிறகு சந்திப்போம் என்று சொல்லிவிட்டு விறு விறு என்று நடந்தான் தவசீலன்.
குணத்துக்கும் யோசனைதான்! என்ன செய்கிறது!
நாட்கள் நடந்தன. எந்த மாற்றமும் இல்லை. குணமும் வேலைக்குப் போகவில்லை.
தவசீலனும் குணசிங்கமும் பெண்டில் கில் என்கிற சிட்னி புறநகர் பகுதியிலுள்ள இறைச்சி தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்கள். இருவரும் படகில் அவுஸ்திரேலியா வந்தவர்கள். வேலை செய்ய அனுமதி இருவருக்கும் உண்டு. இருவரும் வேலை கொளுவிக்கொண்டார்கள்.
ஆனால் இப்போது குணத்தின் சித்தப்பாவும் அவுஸ்திரேலியா வந்துவிட்டார். குணத்துடன் தான் இருக்கிறார்.
வேலை முடிந்து வீடு வந்த தவசீலன் வைது தொலைத்தான். அவனுக்கு குணசிங்கத்தின் சித்தப்பாவில் ஆத்திரம்!
சனங்கள் இந்த நாட்டுக்கு வந்தால் இந்த நாட்டுக்கு ஏற்றமாதிரி இருக்கவேண்டும். சமைக்கத் தெரிய வேண்டும். தேத்தண்ணி போடத் தெரிய வேண்டும். என்றான் தவசீலன்.
வீட்டில் தவசீலனுடன் இருந்த மற்ற வாலிபர்கள் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்களில் தவசீலன்தான் சீனியர். அதாவது முதலில் அவுஸ்திரேலிpயா வந்தவன். ஆதலால் அவனுக்கு ஒரு தனி மதிப்பு இருந்தது…
ஒருவரும் அவனை எதிர்hத்துப் பேசினதில்லை.
அப்படித் தெரியாவிட்டாலும் பழகத்தானே வேண்டும். நாங்கள் எல்லோரும் மாறி மாறி சமைப்பதில்லையா?
உண்மைதான். தவசிலனுடன் இருந்த வாலிபர்கள் மாறி மாறி முறைப்படி சமைப்பார்கள். இதுதான் அந்த வீட்டு ஒழுங்கு. அதுபோக சமையலுக்குத் தேவையான மரக்கறி பலசரக்கு போன்றவற்றையும் மாறி மாறி வாங்கிக் கொள்வார்கள். செலவை புத்தகம் ஒன்றில் எழுதி வைக்கவேண்டும். பின்னர் எல்லாரும் பகிர்ந்து கொள்வார்கள்.
தவசீலன் தொடர்ந்தான்.
இவர் சித்தப்பா வந்து சும்மா குந்தியிருக்க இவன் எங்கட குணம் Nவைலையையும் விட்டுவிட்டு வீட்டில் இருந்து சமைத்துக்கொண்டிருக்கிறான் போல என்று கோபாவேசத்துடன் சொன்னான் எரிந்து விழுந்தான் தவசிலன்!
மற்ற வாலிபர்கள் ஒன்றும் பேசவில்லை.
பொறு வாறன் இவருக்கு போண்சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் இப்படியே குந்திக்கொண்டிருப்பார்.
குணம் வேலைக்கு வராமல் விட்டு இருவாரங்களின் பின்னர் மீண்டும் வேலைக்கு இளித்தபடி வந்தான்.
என்னடா? என்று கேட்டான் தவசீலன். சித்தப்பா எப்படி? சமைத்து வைத்து விட்டு வந்தியா என்று கேட்டான் தவசீலன்.
இல்லை இல்லை!
அப்ப?
அவர் இப்ப வேலைக்குப் போகிறார்! என்றான் குணம்.
அப்படியா! எப்ப தொடக்கம்? என்று கேட்டான் தவசீலன்.
போன வெள்ளிக்கிழமையிலிருந்து!என்றான் குணம்.
அப்ப சாப்பாடு எல்லாம்? என்று கேட்டான் தவசீலன்.
அதைப்பற்றப்பற்றி இனிமேல் கவலைப்படத்தேவையில்லை என்றான் குணம்.
ஏன்? என்று கேட்டான் தவசீலன்.
பெண்டில் கில் சோத்துக்கடை ஒன்றில்தான் வேலை!
தவசீலனுக்குத் தூக்கிவாரிப்போட்டது!
சமைக்கத் தெரியுமா அவருக்கு? என்று கேட்டான் ஆர்வத்துடன்.
இப்ப வெங்காயம் உரிக்கிற உருளைக்கிழங்கு சீவுகிற வேலை! பிறகு சமையல் எல்லாம் சொல்லிக் கொடுப்பாங்களாம். என்றான் குணம்.
நான் இனி சமையலைப்பற்றிக் கவலைப்படத்தேவையில்லை! நான் வீட்டுக்குப் போனதும் எனக்கும் சேர்த்து சாப்பாட்டுப் பார்சல் கொண்டுவந்திருப்பார். என்றான் குணம் இறுதியாக.
தவசீலனுக்கு இடி விழுந்தது போல இருந்தது!
அருகில் இருந்த கதிரையில் தொப்பொன்று விழுந்தான்!
(யாவும் கற்பனை) 

No comments: