சிட்னி Event சினிமா Burwood இல் மகா மகா தமிழ் திரைப்படம்

.


சிட்னி Event சினிமா Burwood  இல் March 7ம் திகதி 5.30 , 9.00 மணிக்கும்  8ம் திகதி 5.30 மணிக்கும்  காண்பிக்கப் பட உள்ளது மகா  மகா  தமிழ் திரைப்படம்.  நம்மவர் ஒருவரால் நெறியாள்கை செய்யப்பட்ட திரைப்படம் இதுவாகும்.
"மகா மகா" திரைப்படம் காதலும் த்ரில்லரும் கலந்த தமிழ் படம். இந்த படம் முழுக்க முழுக்க ஆஸ்திரேலியாவில் எடுக்கப்பட்ட படம். சிட்னி மற்றும் அதன் அருகே உள்ள ஒரு சின்ன டவுனில் இந்த படம் எடுக்கப்பட்டு உள்ளது.

மகா மகா படத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ள பல நடிகர் மற்றும் நடிகைகள் முதன் முறையாக நடித்து இருக்கிறார்கள்.  மேலும் நிழல்கள் ரவி, அனுபமா குமார், மற்றும் மீரா கிருஷ்ணன் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து இருக்கிறார்கள்.

இந்த திரைபடத்தில் "மதராசபட்டினம்" மற்றும் "I" திரைப்படத்திற்கு அடுத்து ஒரு ஆங்கில பெண் கதநாயாகியாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் மணிரத்தினம் இயக்கிய "பாம்பே"  திரைப்படத்திற்கு படதொகுபிற்காக (Editing) இந்தியாவில் நேஷனல் அவார்ட் பெற்ற சுரேஷ் ஆர்ஸ், பனியாற்றி உல்லார். மேலும் சங்கர் இயக்கிய "காதலன்"   திரைப்படத்திற்கு சவுண்ட் எபக்ட்ஸ்க்காக  (Sound Effects) இந்தியாவில் நேஷனல் அவார்ட் பெற்ற முருகேஷ், மகா மகா படத்தில் பனியாற்றி உல்லார்.


இசைஞானி இளையராஜா அண்ணன் மகன் பாவலர் சிவா இந்த படத்திற்கு முதன் முறையாக இசை அமைத்துள்ளார். பாடல்களை கேட்ட இளையராஜா பாடல்கள் நன்றாக இருபதாககும் மற்றும்  "மகா மகா"  என்கிற இந்த திரைபடத்தின் பெயர் நல்ல பெயர் என்றும் சொல்லிருக்கிறார்.

இந்த படத்தை சிட்னியை சேர்ந்த மதிவாணன் முதன் முறையாக நடித்து இயக்கி உல்லார். மகா மகா படத்தை பற்றி மதிவாணன் கூறுகையில். " இந்த படம்  ஒரு புதுமையான முயற்சி, இந்த படத்தை பார்பவர்களுக்கு ஒரு புதுமையான அனுபவம் கிடைக்கும். பல புதிய தகவல்கலை இந்த படத்தில் மூலம் அறியலாம்." என்று கூறினார்.

மகா மகா படத்தின் Trailerயை YouTubeயில் காணலாம். இந்த படம் விரைவில் வெளிடப்படும்.


No comments: