நீர்வை பொன்னையனின் சிறுகதைகள் ஆங்கிலத்தில் Devils and Demons

.
முற்போக்கு எழுத்தாளரான திரு நீர்வை பொன்னையன் ஈழத்து இலக்கியப் பரப்பில் மிக முக்கிய எழுத்தாளர் ஆவார். 1960 முதல் கடந்த 55 வருடங்களாக தடம் பிரளாது எழுதி வருபவர் ஆவார்.

இவரது முதல் தொகுப்பான மேடும் பள்ளமும் 1961 ல் வெளியானது. இதைத் தொடர்ந்து மொத்தம் எட்டு சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன.

உலகத்து நாட்டார் கதைகள் பலவற்றைத்  தமிழ் வடிவத்தில் தந்தார். இது நூலக வந்தபோது பெரு வரவேற்பைப் பெற்றது.





"உலகத்து முற்போக்கு இலக்கிய முன்னோடிகள்', 'நாம் ஏன் எழுதுகிறோம்' என்பவை இவரது கடடுரை நூல்களாகும். 

நினைவலைகள்' என்ற நூல் இவரது சுயசரிதை போன்றது. இலங்கையின் இடதுசாரி அரசியலின் எழுச்சியும் வீழ்ச்சியும் இவரது நினைவலைகள் நூல் ஊடாக வெளிச்சத்திற்கு வருகிறது.

இவரது தேர்தெடுத்த சிறுகதைகள் சிங்களத்தில் மொழி பெயர்ப்பாகவும் வெளிவந்ததுள்ளது. 

இப்பொழுது ஆங்கில மொழிபெயர்ப்பில் Devils and Demons என்ற நூல் வெளியாகிறது. 

திரு எஸ்.இராஜசிங்கம் மற்றும் ஏ.ஜே.கனகரட்ணா ஆகியோர் இவற்றை மொழி பெயர்த்துள்ளார்கள்.

நூல் வெளியீடு மார்ச் 29, 2015 ல் மாலை 4.30 மணிக்கு நடைபெற இருக்கிறது. 

58, தர்மாராம வீதியில் உள்ள பெண்கள் ஆய்வு மற்றும் கல்வி நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் செல்வி திருச்சந்திரன் தலைமையில் நடைபெற இருக்கிறது.


கலாநிதி டி.பி.நிஹால்சிங்க நூலை வெளியிட்டு வைப்பார்

கலாநிதி சுனில் விஜேயசிறிவர்த்தன நூல் ஆய்வுரையை நிகழ்த்துவார்.

இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றத்தின ஆதரவில் நடைபெறும் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளுயும் படி அனைவரையும் அன்புடன் அழைக்கிறார்கள்.

நன்றி:suvaithacinema.blogspot

No comments: