உலகச் செய்திகள்


'சிங்கப்பூரின் தந்தை" லீ க்வான் யூ மரணம்

பிரான்சில் 142 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து

விமான விபத்து: கருப்பு பெட்டி மீட்பு, தீவிரவாத தாக்குதல் இல்லையாம், 6000 அடி உயரத்தில் மீட்பு பணிகள்

நைஜீரிய நகரிலிருந்து போகோ ஹராம் போராளிகளால் 500 சிறுவர்கள் கடத்தல்

கொக்பிட்டில் இருந்து வெளியேவந்த விமானி, மீண்டும் உள்ளே செல்ல முடியவில்லை, கொக்பிட் உள்ளே பூட்டப்பட்டிருந்தது :வெளியாகின அதிர்ச்சி தகவல்கள்



'சிங்கப்பூரின் தந்தை" லீ க்வான் யூ மரணம்

சிங்கப்பூரின் தந்தை என்று போற்றப்படும் லீ க்வான் யூ, தனது 91 வயதில் இன்று அதிகாலை சிங்கப்பூர் பொது வைத்தியசாலையில் காலமானார். 
நவீன சிங்கப்பூரை உருவாக்கி,  பொருளாதார ரீதியாக வளர்ச்சி பெற்ற நாடாக வளர்ச்சி பெற செய்த சிங்கப்பூரின் முதல் பிரதமரான லீ க்வான் யூ, நிமோனியாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்தார். 




லீ க்வான் யூ, 31 ஆண்டுகள் பிரதமராக இருந்து சிங்கப்பூரை வளர்ச்சியாக்கி காட்டியவர். அவரது மறைவு, ஒரு வார துக்க தினமாக அனுசரிக்கப்பட உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 
அவரது மறைவுக்கு ஐ.நா., பொதுச்செயலாளர் பான் கீ-மூன், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா உள்ளிட்ட பல உலகத் தலைவர்கள் தமது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

அரசியல் வரலாறு 
லீ க்வான் யூ, செப்டம்பர் 16ஆம் திகதி 1923 இல் சிங்கப்பூரில் வசதியான சீனக் குடும்பத்தில் பிறந்தார்.  
இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர் ,1950 இல், கேம்ப்ரிட்ஜ் பிட்ஸ் வில்லியம் கல்லூரில் சட்டம் பயின்றார் . 1954 இல் மக்கள் செயல் கட்சியின் பிரிவில் ஜெனரல் ஆனார். 
1955 இல் சிங்கப்பூரின் புதிய அரசியல் சட்டம் அமலாக்கத்துக்கு காரணமாக இருந்தார். அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை , நியமன உறுப்பினரையும் சேர்த்து 32 ஆக உயர இவரே காரணமாக இருந்தார்.




மலேசியாவிலிருந்து திடீரென பிரிந்தபோது , கண்ணீரோடு ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு , தனது தொலை நோக்குச் சிந்தனையால் நவீன சிங்கப்பூரை உருவாக்கினார்.
1959 முதல் தொடர்ந்து 1990 வரை, உலகின் நீண்ட காலப் பிரதமர் என்ற வரலாற்றைப் பெற்றார்.

12 நவம்பர் 1954 இல் மக்கள் செயல் கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து இன்று வரை அக் கட்சியே ஆட்சி புரிந்து வருகிறது.
1992 வரை அக் கட்சியின் செயலாளர் ஜெனரலாக இருந்தார்.

1959ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் திகதி லீ. முதல் பிரதமர் ஆனார். 1963 இல் மலேசிய கூட்டமைப்பில் இணைய பாடுபட்டார். 
1965 ஆகஸ்ட் 7 இல் மலேசியாவிலிருந்து பிரிய ஒப்பந்தம் ஏற்படக் காரணமாக இருந்தார். அதன் பிறகு சுயாட்சி பெற்ற சுதந்திரக் குடியரசு எனப் பிரகடனப் படுத்தினார். 
வெளிநாட்டு மூலதனத்தைப் பெருக்க முற்பட்டார். 1968, 1972, 1976, 1980 ஆகிய தேர்தலில் இவரது மக்கள் செயல் கட்சி மகத்தான வெற்றி பெற்றது. இன்று வரை இக் கட்சியே ஆட்சியில் உள்ளது. 

இவருக்கு இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மூத்த மகன் லீ சியான் லூங் தான் இன்றைய பிரதமர். இவரது ஆட்சிக் காலத்தில் 18 வயது நிரம்பிய ஆண்கள் அனைவருக்கும் இராணுவப் பயிற்சி கட்டாயமாக்கப் பட்டது. 
இதனால் , இன்று சிறந்த இராணுவப் படை, பொலிஸ் படை, குடிமைத் தற்காப்புப் படையோடு சிங்கப்பூர் திகழ்கிறது. தனி நபர் வருமானத்திலும் முதல் நாடாக விளங்குகிறது .   நன்றி வீரகேசரி 








பிரான்சில் 142 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து

24/03/2015 பிரான்சில் 142 பயணிகளுடன் சென்ற எயார்பஸ் ஏ320 விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஸ்பெய்னின் பார்சலோனாவிலிருந்து, ஜேர்மனியின் டசல்டோர்ப் நோக்கிப் பயணித்த  ஜேர்மனியின் 'ஜேர்மன் விங்ஸ்" விமானச் சேவைக்கு சொந்தமான விமானமொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்துக்குள்ளான விமானத்தில் 142 பயணிகள், 4 விமானப் பணிப்பெண்கள் மற்றும் 2 விமானிகள் பயணித்தமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 







விமான விபத்து: கருப்பு பெட்டி மீட்பு, தீவிரவாத தாக்குதல் இல்லையாம், 6000 அடி உயரத்தில் மீட்பு பணிகள்

25/03/2015 பிரான்ஸ் எல்ப்ஸ் மலை தொடரில் வீழ்ந்து விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதோடு விமான விபத்துக்கு தீவிரவாத தாக்குதல் போன்று தெரியவில்லை என அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.
எல்ப்ஸ் மலை பகுதியின், 6000 அடி உயரத்தில் பொலிசார் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


ஐரோப்பிய கண்டத்தின் மிகப்பெரிய விமான நிறுவனம், லுப்தான்சா. இதன் துணை நிறுவனமான ‘ஜெர்மனி விங்ஸ்’, குறைந்த கட்டணங்களை கொண்ட விமான சேவையை இயக்கி வருகிறது. 
இந்த நிறுவனத்தின் ஏர் பஸ் ஏ-320 ரக விமானம் ஒன்று, ஸ்பெயின் நாட்டில் உள்ள பார்சிலோனா விமான நிலையத்தில் இருந்து ஜெர்மனியின் டசல்டோர்ப் நகருக்கு உள்ளூர் நேரப்படி நேற்று காலை 10.01 மணிக்கு புறப்பட்டுச் சென்றது.



 குறித்த விமானம், காலை 11.49 மணிக்கு டசல்டோர்ப் நகரைச் சென்றடைந்திருக்க வேண்டும். ஆனால் காலை 11 மணிக்கே அந்த விமானம் ரேடார் திரையில் இருந்து மறைந்தது. இதனால் பதற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில், அந்த விமானம் பிரான்ஸ் நாட்டில் எல்ப்ஸ் மலையின் தென்பகுதியில் பார்சிலோனட் நகருக்கு அருகில்  விழுந்து நொறுங்கியது. குறித்த விமானத்தில் பயணம் செய்த அனைவரும் பலியாகி விட்டனர். 

விபத்துக்குள்ளான விமானம் 24 ஆண்டுகளாக இயங்கி வந்த விமானம் என்பது குறிப்பிடத்தக்கது. விமானத்தின் சிதைவுகளை பார்சிலோனட் அருகே பிரான்ஸ் ஹெலிகொப்டர்கள் கண்டறிந்தன. இதற்கிடையே விபத்து நடந்த பகுதிக்கு தரை வழியே வாகனங்கள் செல்ல முடியாது என்ற நிலையில் ஹெலிகொப்டர்கள் மூலம் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று உள்ளனர். 

மீட்பு பணியை தொடங்கி நடைபெற்று வருகிறன்ற. விமானம் விபத்துக்குள் சிக்கியதற்கான காரணத்தை கண்டுபிடிக்க உதவும், கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டு ள்ளது. 
மலையின் 6000 அடி உயரத்தில் விமானம் விழுந்து நொறுங்கியதால் பயணிகள் யாரும் உயிர்பிழைக்கவில்லை.



 ஹெலிகொப்டர் மூலம் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறன்றன. பிரான்ஸ் விசாரணை குழுவும் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. 

விபத்து நடைபெறுவதற்கு முன்பாக காலை 10.47 மணிக்கு, குறித்த விமானம் 5 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபோது, விமானத்தில் இருந்து ஆபத்து சமிக்ஞைகள் வந்ததாகவும் தெரிய வந்துள்ளது. இதற்கிடையே விமானம் விழுந்துள்ளது.
எனவே விமானத்தின் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது போன்று தகவல் தெரியவில்லை என்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.










நன்றி வீரகேசரி 



நைஜீரிய நகரிலிருந்து போகோ ஹராம் போராளிகளால் 500 சிறுவர்கள் கடத்தல்

26/03/2015 நைஜீ­ரி­யாவில் போரா­ளி­க­ளி­ட­மி­ருந்து மீளக் கைப்­பற்­றப்­பட்ட நக­ரொன்­றி­லி­ருந்து 11 வயது மற்றும் அதற்கு கீழ்ப்­பட்ட வய­து­டைய சுமார் 500 சிறு­வர்கள் கடத்­தப்­பட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.

போகோ ஹராம் போரா­ளி­க­ளி­ட­மி­ருந்து இந்த மாத ஆரம்­பத்தில் படை­யி­னரால் கைப்­பற்­றப்­பட்ட டமாஸக் நக­ரி­லி­ருந்தே மேற்­படி சிறு­வர்கள் கடத்திச் செல்­லப்­பட்­டுள்­ளனர்.
போரா­ளிகள் அந்த நகரை விட்டு வெளி­யேறிச் செல்லும் போது தம்­முடன் சிறு­வர்­க­ளையும் அழைத்துச் சென்­றுள்­ளனர்.
நன்றி வீரகேசரி 









கொக்பிட்டில் இருந்து வெளியேவந்த விமானி, மீண்டும் உள்ளே செல்ல முடியவில்லை, கொக்பிட் உள்ளே பூட்டப்பட்டிருந்தது :வெளியாகின அதிர்ச்சி தகவல்கள்

26/03/2015 150 பேரை பலி வாங்கிய பிரான்ஸ் விமானத்தின், கொக்பிட் என அழைக்கப்படும் விமானிகள் அறை உள்ளே பூட்டப்பட்டு உள்ளே பூட்டப்பட்டு இருந்தது என்று கருப்பு பெட்டி தகவல்கள் தெரிவித்துள்ளன என்று நியூயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டு உள்ளது.

“கொக்பிட்டில் இருந்து வெளியேவந்த விமானியால் மீண்டும் உள்ளே செல்ல முடியவில்லை எனவும் கதவை தட்டியபோது உள்ளே இருந்து எந்தஒரு பதிலும் வரவில்லை எனவும் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கின்றன. இதனால் இவ்விபத்து தற்கொலையா அல்லது தீவிரவாதிகளின் செயற்பாடா என சந்கேம் எழுந்துள்ளது.
‘லுப்தான்சா’ விமான நிறுவனத்தின் துணை நிறுவனமான ‘ஜெர்மனி விங்ஸ்’ நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று நேற்று முன்தினம் ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் இருந்து ஜெர்மனியின் டசல்டொர்ப் நகருக்கு சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானது.
ஏர்பஸ் ஏ-320 ரகத்தை சேர்ந்த இந்த விமானத்தில் ஸ்பெயின், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த பயணிகள், ஊழியர்கள் என 150 பேர் இருந்தனர். 
இந்த விமானம் பிரான்ஸ் நாட்டின் பார்சிலோனட் நகருக்கு அருகே எல்ப்ஸ் மலையில் விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில், விமானத்தில் பயணம் செய்த அனைவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விமானத்தின் உடைந்த பாகங்களும், பயணிகளின் உடல்களும் சுமார் ஒரு ஹெக்டேயர் சுற்றளவில் சிதறி கிடக்கின்றன. அவற்றை மீட்கும் பணிகளில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 
இதற்காக ஹெலிகொப்டர்களும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளன. ஆனால் விமானத்தின் சிதைவுகள் மற்றும் பயணிகளின் உடல்கள் மலைப்பாங்கான பகுதிகளில் விழுந்து கிடப்பதால், மீட்பு பணிகளில் சிறிது தாமதம் ஏற்பட்டு உள்ளது. 
இந்நிலையில் சம்பவ இடத்தில் இருந்து (கடல் மட்டத்தில் இருந்து 2 ஆயிரம் மீட்டருக்கு மேலே) விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டது. 
இதற்கிடையே விமான விபத்து நடந்த பகுதியில் வானிலை மிகவும் தெளிவாக இருந்ததாகவும், விமானம் விழுந்து நொறுங்கிய பகுதி மேகமூட்டம் எதுவுமின்றி தெளிவாக இருந்ததாகவும் பிரான்ஸ் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்தது.  
பிரான்ஸ் விமானத்தின், கொக்பிட் என அழைக்கப்படும் விமானிகள் அறை உள்ளே பூட்டப்பட்டு இருந்தது என்று கருப்பு பெட்டி தகவல்கள் தெரிவித்து உள்ளது என்றுநியூயோர்க்  டைம்ஸ் செய்தி வெளியிட்டு உள்ளது. 
இரண்டு விமானிகளில் ஒருவர் கொக்பிட்டில் இருந்து வெளியே சென்றுவிட்டு, மீண்டும் திரும்பிய போது விமானிகள் அறை உள்ளே பூட்டப்பட்டு இருந்தது என்று கருப்பு பெட்டி தகவல்கள் தெரிவித்துள்ளது என்று நியூயோர்க்  டைம்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டு உள்ளது. 
“கொக்பிட்டில் இருந்து வெளியேவந்த விமானியால் மீண்டும் உள்ளே செல்ல முடியவில்லை, கதவை தட்டியபோது உள்ளே இருந்து எந்தஒரு பதிலும் இல்லை,” என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
இதுதொடர்பாக இராணுவ அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர். மீண்டும் வெளியே இருந்த விமானி கதவை பலமாக தட்டியுள்ளார், எனினும் பதில் வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 
இந்நிலையில் விமானம் விபத்துக்குள்ளாகியமை தொடர்பாக பதில் இல்லாத பல்வேறு கேள்விகள் எழுந்து உள்ளன. விமானி தற்கொலை  அல்லது தீவிரவாத தாக்குதல் கோணத்திலும் சந்தேகம் எழுந்து உள்ளது. 
தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. “விமானத்தில் ஒரு விமானி வெளியே சென்றதற்கான, காரணம் எங்களுக்கு தெரியவரவில்லை,”  என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   நன்றி வீரகேசரி 

















No comments: