அவுஸ்திரேலிய மருத்துவ உதவி நிதியம் நடாத்தும் ‘ரேடியோத்தோன்”

.
அவுஸ்திரேலிய மருத்துவ உதவி நிதியம் நடாத்தும் 13ஆவது ‘ரேடியோத்தோன்” நிதி சேகரிப்பு நிகழ்வு.

இந்த  ‘ரேடியோத்தோன்” நிதி சேகரிப்பு நிகழ்வு ஏப்பிரல் மாதம் 3ம் திகதி இன்பத்தமிழ் வானொலி ஊடாகவும், மெல்போர்ன் 3CR தமிழ்க் குரல் வானொலி ஊடாகவும் காலை 9மணி தொடக்கம் மாலை 6 மணிவரை நடைபெறும்.

14 வருடமாக இயங்கி வருகின்ற அவுஸ்திரேலிய மருத்துவ உதவி நிதியம், உங்கள் நிதியுதவியுடன் 4 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் சேகரிக்கப்பட்டு, இலங்கையின் வடக்கு கிழக்கு மாநிலங்களில் மருத்துவ, பல் வைத்திய மற்றும் சுகாதாரத் தி;ட்டங்களுக்கு நிதியுதவி வழங்கியுள்ளது.




இந்த வருட ‘ரேடியோத்தோன்” நிதி சேகரிப்பு நிகழ்வு மூலம் சேகரிக்கும் நிதி, இலங்கையின் வடக்கு கிழக்குப் பிரதேசங்களிலும், குறிப்பாக வன்னி மாநிலத்திலுள்ள மருத்துவ தேவைகளுக்கு பயன்படுத்தப்படவிருக்கின்றது.
இந்த நிகழ்வில் உங்கள் பங்களிப்பை செலுத்த அழைக்கவேண்டிய தொலைபேசி இலக்கம்: 1300 990 828
உங்கள் பேருதவியை நாடிநிற்கின்றோம்.
நன்றி.

டாக்டர். பொ. கேதீஸ்வரன்               டாக்டர். மனோ மோகன்
தலைவர்        NSW தலைவர்.
அவுஸ்திரேலிய மருத்துவ உதவி நிதியம்

No comments: