அடிலெய்டில் தமிழர் ”ஆட்டம்”

.


அடிலெய்டில் தமிழர் ஆட்டம்
கலைகள் சிதறினகால்கள் ஆடின
கண்கள் நிலைத்தன கரங்கள் ஒலித்தன
 அரங்கம் விதிர்ந்ததுஅடிலெய்ட் அதிர்ந்தது
அனைவரும் கூடினர் அமைச்சர் ஆடினர்.
மார்ச் 27 ஆம் தேதி அடிலெய்ட் தமிழ் சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஆட்டம் கலை நிகழ்ச்சி அடிலெய்டில் சிறப்பாக நடந்தது.விழாவுக்கு சார்ல்ஸ் ஸ்டூவர்ட் நகர மேயர் தலைமை வகித்தார். பல்லின கலாச்சார அமைச்சர் ஸோ பெட்டிசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக சிட்னி வழக்கறிஞர்  கலாநிதி  சந்திரிகா சுப்ரமண்யன்  சிறப்புரை ஆற்றினார். விழாவினை ஏற்பாடு செய்திருந்த அடிலெய்ட் தமிழ் சங்கத் தலைவர் லாரன்ஸ் அண்ணாதுரை அறிமுக உரை ஆற்றினார்.
இந்த நிகழ்வில் தமிழ் நாட்டின் இருபத்து மூன்று பாரம்பரிய  கலைஞர்கள் வெவ்வேறு  கலை வடிவங்களி மேடையில் நடத்திக் காட்டினர். நமது கலைகளான மயிலாட்டம்நையாண்டி மேளம்பொய்க்கால் குதிரைஒயிலாட்டம்தப்பாட்டம்பின்னல் கோலாட்டம்கைச் சிலம்பு,காளியாட்டம்காளை ஆட்டம்கிராமியப் பாடல்கள் ஆகியவை இடம் பெற்றன.தமிழக  இயல் ,இசை நாடக மன்ற தலைவர் பிரபல இசை அமைப்பாளர் தேவா தலைமையில் இக் குழு வந்திருந்தது. சிட்னியில் ஒரு நிகழ்வும்பின் அடிலெய்டிலும் இறுதியாக மெல்பேர்னிலும் கலை நிகழ்ச்சிகளை இவர்கள் முனவர் சோமசுந்தர்ம் ஒருங்கிணைப்பில் நடத்தினார்கள்.


கண்ணுக்கும்காதுக்கும் விருந்தளித்த இன் நிகழ்ச்சியில் பறை ஒலி கேட்டதும் அரங்கமே ஆடியது நிகழ்ச்சியின் வெற்றிக்கு சான்றானது. குறிப்பாக பல்லின மக்கள் அதிலும் நகர் மேயரும்,அமைச்சரும் ,சட்ட சபை உறுப்பினரும் பறையை கேட்டு வாங்கி அடித்து ஆடினர். இளைய தலைமுறையினரையும்  இணைத்து இவ் விழா சிறப்பாக நடந்தது .


No comments: