இலங்கைச் செய்திகள்


தமிழர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்கப்படும் : யாழில் ஜனாதிபதி

 உள்ளக விசாரணையில் நம்பிக்கை இல்லை: சர்வதேச விசாரணை வேண்டும்: மட்டு.வில் ஆர்ப்பாட்டம்      

பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு முரளிதரன் எம்.பி.க்கு அழைப்பு

ஜனாதிபதி சீனா விஜயம்

'தருவதாக கூறிய ஜனநாயகம் எங்கே?": யாழில் ஆர்ப்பாட்டம்

இரட்டை பிரஜா உரிமை வழங்கும் திட்டம் மீண்டும் நேற்று முதல் ஆரம்பம்

கோத்தபாயவின் வங்கி கணக்குகளை சோதனை செய்ய உத்தரவு

பஷிலை இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை


தமிழர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்கப்படும் : யாழில் ஜனாதிபதி

23/03/2015 தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.




வடக்கு மாகாணத்தில் அதியுயர் பாதுகாப்பு வலயமாக இராணுவம் வைத்திருந்த, சுமார் ஆயிரம் ஏக்கர் காணியை அவற்றின் உரிமையாளர்களுக்கு வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 425 ஏக்கர் காணிகளை கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில்  இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர்  மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை வழங்க தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். இலங்கையில் வாழும் மக்கள் அச்சமும், சந்தேகமும் இன்றி வாழக் கூடிய சூழ்நிலை ஏற்படுத்தப்படும்.
வடக்கில் காணி பிரச்சினை என்பது நீண்டகாலமாக இருந்து வரும் பிரச்சினையாகும். எனவே காணிகளை  மீள வழங்கும் போது சில சிக்கல் நிலைமைகளும், பிரச்சினைகளும்  இருக்கக் கூடும். எவ்வாறாயினும் இந்த நடவடிக்கைகளை ஆரம்பித்து, சிக்கலான நிலைமைகளை அடையாளம் கண்டு, குறைபாடுகளை நிவர்த்தி செய்து, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு ஜனாதிபதி  காணி உரிமையாளர்களுக்கு காணி உறுதிப்பத்திரங்களை கையளித்தார். 
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், காணி அமைச்சர் டி.எஸ். குணவர்தன, பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வடமாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன், வட மாகாண ஆளுநர் பலியக்கார உட்பட பலர் இந் நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 







உள்ளக விசாரணையில் நம்பிக்கை இல்லை: சர்வதேச விசாரணை வேண்டும்: மட்டு.வில் ஆர்ப்பாட்டம்     

 23/03/2015 காணாமல் போனவர்கள் தொடர்பாக உள்ளக விசாரணைகளை முறையாக முன்னெடுக்கவில்லை. எனவே இவ்விடயம் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரி காணாமல் போனோரின் உறவினர்கள் இன்று காலை முதல் மட்டக்களப்பு நகரில் உண்ணாவிரதத்தில்  ஈடுபட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மணிக்கூட்டுக்கோபுரத்தின் முன்னால் அதிகமான பெண்கள் காணாமல் போனோரின் உறவினர்களின் புபை;படங்களுடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
உண்ணாவிரதம் இடம்பெற்ற பகுதிக்கு நேரடியாக விஜயம் செய்த மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸிடம் ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகத்திற்கு அனுப்புவதற்கான மகஜரை மாவட்ட லயன்ஸ் கழக தலைவர் கே.செல்வேந்திரன் கையளித்தார்.
மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.கிரிதரன் காந்தி சேவா சங்க செயலாளர் எஸ்.கதிர் பாரதிதாசன் உட்பட பிரமுகர்கள் பலரும் சமுகமளித்திருந்தனர்.
உள்ளக விசாரணையில் தங்களுக்கு நம்பிக்கையில்லை. சர்வதேச விசாரணையை ஆரம்பிக்க வேண்டும் என்பதற்காகவே ஐக்கிய நாடுகள் சபைக்கு மகஜர் அனுப்புவதாக செல்வேந்திரன் தெரிவித்தார்.  நன்றி வீரகேசரி










பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு முரளிதரன் எம்.பி.க்கு அழைப்பு

23/03/2015 வாழைச்­சேனை பகு­தியில் நபர் ஒரு­வரை தாக்­கி­யமை தொடர்பில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கருணா அம்மான் எனப்­படும் விநா­ய­க­மூர்த்தி முர­ளி­த­ரனை இன்று வாழைச் சேனை பொலிஸ் நிலை­யத்தில் ஆஜ­ரா­கு­மாறு பொலிஸார் அழைப்பு விடுத்­துள்­ளனர்.

இன்று காலை 10.00 மணிக்கு இவ்­வாறு பொலிஸ் நிலையம் வரு­மாறு கொழும்பில் உள்ள அவ­ரது வீட்­டுக்கு பொலிஸார் தகவல் அனுப்­பி­யுள்­ள­தா­கவும் அவர் குறித்த நேரத்தில் பொலிஸ் நிலை­யத்­துக்கு வருகை தர தவறும் பட்­சத்தில் நீதி­மன்றில் அவ­ருக்கு எதி­ராக அறிக்கை தாக்­கல்­செய்­யப்­பட்டு அடுத்த கட்ட நடவ­டிக்கை எடுக்­கப்­படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.
வயலில் வேலை செய்­து­கொண்­டி­ருந்த ஒருவர் மீது பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விநா­ய­க­மூர்த்தி முர­ளி­தரன் தாக்­குதல் நடத்­தி­யுள்­ள­தாக வாழைச் சேனை பொலி­ஸா­ருக்கு முறைப்­பாடு கிடைத்­துள்­ளது.
அது தொடர்பில் சாட்­சி­யா­ளர்­க­ளி­னதும் முறைப்­பாட்­டா­ள­ரி­னதும் வாக்கு மூலங்­களை பொலிஸார் பெற்­றுள்­ள­தா­கவும் இதனை அடுத்தே கரு­ணா­வுக்­கான அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.
வாழைச்சேனை பகு­தியை சேர்ந்த எஸ்.வன­ராஜா என்­பவர் தான் வயலில் வேலை செய்­து­கொன்­டி­ருந்த போது தாக்­கப்­பட்­ட­தாக பொலிஸில் முறை­யிட்­டி­ருந்தார். அத்­துடன்இ தன்னை துப்­பாக்கி முனையில் அவர் அச்­சு­றுத்­தி­ய­தா­கவும் அம்­மு­றைப்­பாட்டில் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.
இந் நிலையில் இது தொடர்பில் பொலிஸ் பேச்­சாளர் ருவன் குண­சே­கர மேலும் தகவல் தரு­கையில்,
குறித்த முறைப்­பாடு தொடர்பில் உடன் நடவ­டிக்கை எடுக்­கப்­பட்­டது. முறைப்­பாட்­டா­ளரின் முறைப்­பாட்டு தக­வல்­க­ளுக்கு அமை­வாக கிரான் பகு­தியில் உள்ள விநா­ய­க­மூர்த்தி முர­ளி­தரன் எம்.பி.யின் சகோ­தரி ஒரு­வரின் வீட்­டி­லி­ருந்து வந்தே அவர் தாக்­கி­ய­தாக கூறப்­ப­டு­கின்­றது.
விவ­சாய நிலம் தொடர்­பாக ஏற்­பட்ட பிரச்­சினை கார­ண­மா­கவே இந்த தாக்­குதல் இடம்­பெற்­றுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது. இந் நிலையில் நேற்று பொலிஸார் உட­ன­டி­யா­கவே கருணா அம்­மானின் சகோ­த­ரியின் குறித்த கிரான் பகு­தியில் உள்ள வீட்­டுக்கு சென்று விசா­ரணை நடத்­தினர். எனினும் அங்கு ஒரு­வரும் இல்லை எனவும் கருணா உள்­ளிட்­ட­வர்கள் கொழும்பு வீட்டில் உள்­ள­தா­கவும் தகவல் தெரி­விக்­கப்­பட்­டது.
இதனை தொடர்ந்து முறைப்­பாட்­டா­ள­ரி­னதும் நேரில் கண்ட சாட்­சி­யங்­க­ளி­னதும் வாக்கு மூலங்­களை பொலிஸார் பதிவுச் செய்­து­கொண்ட பின்னர் கொழும்பில் உள்ள எம்.பி.யின் வீட்­டுக்கு பொலிஸார் தகவல் ஒன்றை அனுப்­பி­யுள்­ளனர். அதில் இன்று காலை 10.00 மணிக்கு வாழைச் சேனை பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் அவ்வாறு பொலிஸ் நிலையம் வராமல் தவிர்ப்பாரானால் அவருக்கு எதிராக மன்றில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்.   நன்றி வீரகேசரி








ஜனாதிபதி சீனா விஜயம்


25/03/2015 நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீனாவுக்குச் சென்றுள்ளார். 
மைத்திரிபால சிறிசேன சீன ஜனாதிபதி ஜிங் பிங்கின் அழைப்பின் பேரிலேயே அங்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி





'தருவதாக கூறிய ஜனநாயகம் எங்கே?": யாழில் ஆர்ப்பாட்டம்

25/03/2015  2011 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 10ஆம் திகதி கைது செய்யப்பட்டு காணாமற்போன லலித் மற்றும் குகன் ஆகியோரை விடுதலை செய்ய வலியுறுத்தி இன்று புதன்கிழமை யாழ். நகரில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது.


இந்தப் போராட்டத்தை முன்னிலை சோஷலிஸக் கட்சி ஏற்பாடு செய்திருந்தது. 

பல்வேறு கோஷங்களை எழுப்பிய ஆர்ப்பாட்டக்காரர்கள் துண்டுப் பிரசுரங்களையும் விநியோகித்தனர்.
காணாமற்போன லிலித் மற்றும் குகன் ஆகியோர் தொடர்பான வழங்கு விசாரணை இன்று யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் இவ் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது   நன்றி வீரகேசரி




இரட்டை பிரஜா உரிமை வழங்கும் திட்டம் மீண்டும் நேற்று முதல் ஆரம்பம்
24/03/2015 கடந்த சில ஆண்­டு­க­ளாக வழங்­கப்­ப­டாது நிறுத்திவைக்­கப்­பட்­டி­ருந்த இரட்டை பிரஜா உரிமை வழங்கும் நடவ­டிக்­கைகள் நேற்று முதல் மீண்டும் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.
1948 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க பிரஜா உரிமை சட்­டத்தில் 1987 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க திருத்­த­துக்கு அமை­வாக புதி­தாக வடி­வ­மைக்­கப்­பட்ட செயற்­றிட்­டத்­துக்கு அமை­வாக இந்த இரட்டை பிரஜா உரி­மை மீண்டும் நடை முறைப்­ப­டுத்­து­வ­தாக விட­யத்­துக்கு பொறுப்­பான பொது ஒழுங்­குகள் மற்றும் கிறிஸ்­தவ விவ­கார அமைச்சர் ஜோன் அம­ர­துங்க தெரி­வித்தார்.
2011 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 28 ஆம் திகதி இந்த இரட்டை பிரஜா உரிமை வழங்கும் நடை முறை உத்­தி­யோக பூர்­வ­மாக நிருத்­தப்­பட்­டாலும் சட்ட விரோ­த­மான முறையில் சில­ருக்கு அதன் பின்னர் இரட்டை பிரஜா உரிமை வழங்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் இந் நிலையில் புதி­தாக இந்த இரட்டை பிரஜா உரிமை நடை முறை குரித்து இலகு திட்டம் ஒன்றை வகுத்து கடந்த 12 ஆம் திகதி அமைச்­ச­ர­வையில் சமர்­பித்து திருத்­தங்கள் செய்து நிறை­வேற்­றி­யுள்­ள­தா­கவும் அதன்­ப­டியே நேற்று 23 ஆம் திகதி முதல் இந்த இரட்டை பிரஜா உரிமை வழங்கும் நடை முறை அமுலுக்கு வரு­வ­தா­கவும் அவர் மேலும் குறிப்­பிட்டார்.
இது தொடர்பில் கொழும்பில் இடம்­பெற்ற விஷேட செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே அவர் இதனைத் தெரி­வித்தார். இந்த சந்­திப்பின் போது போது ஒழுங்­குகள் அமைச்சின் செய­லாளர் டீ.பி.தென்­னகோன், மேல­திக செய­லாளர் சூலா­நந்த பெரேரா, குடி­வ­ரவு குடி­ய­கல்வு கட்­டுப்­பாட்­டாளர் ரண­சிங்க உள்­ளிட்­டோரும் கலந்­து­கொண்­டி­ருந்­தனர்.
இதன் போது அமைச்சர் ஜோன் அம­ர­துங்க மேலும் குறிப்­பிட்­ட­தா­வது,
தற்­போது நடை முறைப்­ப­டுத்­தப்­படும் இந்த இரட்டை பிரஜா உரிமை வழங்­கு­வது தொடர்­பி­லான செயற்­றிட்­டத்தை முன்­னெ­டுக்க குடு­வ­ரவு குடி­ய­கல்வு கட்­டுப்­பாட்­டா­ளரின் நேரடி மேற்­பார்­வையில் விஷேட பிரி­வொன்று குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­க­ளத்தில் அமைக்­கப்­பட்­டுள்­ளது. ஐக்­கிய இராச்­சியம், கனடா, ஐக்­கிய அமெ­ரிக்கா, அவுஸ்­தி­ரே­லியா, நியூ­சி­லாந்து,இத்­தாலி,சுவீடன்,சுவி­சர்­லாந்து,பிரான்ஸ் ஆகிய ஒன்­பது நாடுகள் தொடர்­பி­லேயே இந்த இரட்டை பிரஜா உரிமை வழங்கும் செயற்­றிட்டம் தற்­போது முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது. ஏனெனில் இந் நாடு­களே இரட்டை பிரஜா உரி­மையை தற்­போதும் அங்­கீ­க­ரித்­துள்­ளன. மத்­திய கிழக்கு உள்­ளிட்ட நாடுகள் அந்த முறை­மையை அங்­கீ­க­ரிக்­க­வில்லை.
எமது நாட்டில் இருந்து வேறு நாடு­க­ளுக்கு செல்ல முயற்­சிப்­ப­வர்­களும், மேற்­கு­றிப்­பிட்ட ஒன்­பது நாடு­களில் உள்ள இலங்­கை­யர்கள் மீண்டும் இலங்கை பிரஜா உரி­மையைப் பெற்­றுக்­கொள்­ளவும் இந் நடை­முறை பயன்­படும்.
புதிய நடை முறை ஊடாக மிக விரை­வா­கவே குடி­யு­ரிமை வழங்கும் செயற்­றிட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­படும்.இது தொடர்­பி­லான தக­மைகள் மற்றும் விண்­ணப்பம் உள்­ளிட்ட அனைத்து விப­ரங்­க­ளையும் www.immigration.gov.lk
(link is external)
 என்ற இணை­யத்­தளம் ஊடா­க­வோ­கொ­ழும்பு 10 இல் உள்ள குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­க­ளத்­துக்கு வருகை தரு­இ­வ­தூ­டா­கவோ பெற்­றுய்க்­கொள்ள முடியும்.

இரட்டை பிரஜா உரிமை தொடர்பில் கடந்த அரசு கையாண்ட நடை முறை­களை நாம் மாற்­றி­யுள்ளோம். அது தொடர்பில் அர­வி­டப்­படும் கட்­ட­ண­மான 5 இலட்சம் ரூபாவை நாம் 2 இலட்­சத்து 50 ஆயிரம் ரூபா­வாக குறைத்­துள்ளோம். இத­னை­விட சிறு பிள்­ளைகள் தொடர்பில் 50 ஆயிரம் ரூபா மட்­டுமே இரட்டை பிரஜா உரிமை தொடர்பில் அர­வி­டப்­படும்.
கடந்த அரசின் காலத்தில் இரட்டை பிரஜா உரி­மைக்கு விண்­னப்­பித்து பணமும் செலுத்தி அது கிடைக்­காத சுமார் 350 இற்கும் 400 இற்கும் இடைப்­பட்ட விண்­ணப்­ப­தா­ரிகள் உள்­ளனர். இவர்கள் தொடர்பில் நாம் விஷேட அவ­தானம் செலுத்தி இன்னும் ஒரு மாத காலத்­துக்குள் அவர்­க­ளுக்கு இரட்டை பிரஜா உரி­மை­யினை வழங்க நடவ்­டிக்கை எடுத்­துள்ளோம்.

அத்­துடன் கடந்த நான்கு ஆண்­டு­க­ளாக இந்த நடை முறை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் பலருக்கு சட்ட விரோதமாக இரட்டை பிரஜா உரிமை வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நாம் அவதானம் செலுத்தியுள்ளோம். அவ்வானவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு நடவ்டிக்கை எடுக்கப்படும். சில நேரம் அவர்களது இரட்டை பிரஜா உரிமை இரத்து செய்யப்படவும் வாய்ப்புள்ளது. என்றார்.    நன்றி வீரகேசரி





கோத்தபாயவின் வங்கி கணக்குகளை சோதனை செய்ய உத்தரவு
26/03/2015 முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் வங்கிக் கணக்குகளை சோதனை  செய்ய காலி நீதிமன்றம் குற்றத் தடுப்பு பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளது.
எவன்கார்ட் வழக்கு தொடர்பிலேயே காலி நீதிமன்றம் பொலிஸாருக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி







பஷிலை இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை

26/03/2015 திவி நெகும ( வாழ்வின் எழுச்சி) திட்டம் ஊடாக மிக சூட்­சு­ம­மான முறையில் மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள பாரிய நிதி மோச­டிகள் தொடர்பில் முன்னாள் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்சர் பஷில் ராஜ­ப­க்ஷவை விசா­ரணை செய்ய நிதி குற்றப் புல­னாய்வுப் பிரிவு தீர்­மா­னித்­துள்­ளதாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.
திவிநெகும திட்­டத்தின் முன்னாள் பணிப்­பாளர் ஆர்.ஆர்.கே.ரண­வக்­க­விடம் மேற்­கொள்­ளப்­பட்ட விஷேட விசா­ர­ணை­களத் தொடர்ந்தே பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி வைத்­தி­ய­லங்­கா­ரவின் தலை­மை­யி­லான நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரிவு இந்த தீர்­மா­னத்­துக்கு வந்­துள்­ளது.
திவி நெகும திணை­க­ளத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட நிதி மோச­டிகள் தொடர்பில் முன்னாள் பணிப்­பாளர் ஆர்.ஆர்.கே.ரண­வக்க தான் அப்­போ­தைய விட­யத்­துக்கு பொறுப்­பான அமைச்சர் பஷில் ராஜ­ப­க்ஷவின் உத்­த­ர­வுக்கு அமை­யவே அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் முன்­னெ­டுத்­த­தாக நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு வாக்கு மூலம் அளித்­துள்­ள­ார். அதன் படியே பஷில் ராஜ­ப­க்ஷவை விசா­ரணை செய்து வாக்கு மூலம் ஒன்றை பதிவு செய்ய வேண்­டிய தேவை பொலி­ஸா­ருக்கு ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.
பஷில் ராஜ­பக்ஷ வெளி நாடொன்றில் உள்ள நிலையில் அவரை நாட்­டுக்கு அழைத்து வர நடவ்­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­து. இது தொடர்பில் கடு­வலை நீதிவான் நீதி­மன்­றுக்கு அறிக்கை தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ள­து.சட்ட மா அதிபர் மற்றும் நீதி­மன்றின் ஆலோ­ச­னைக்கு அமைய அடுத்த கட்ட நடவ்­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­படும்.உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குணசே­கர மேலும் குறிப்­பிட்டார்.
பொலிஸ் தல­மை­ய­கத்தில் நேற்று இடம்­பெற்ற விஷேட செய்­தி­யாளர் சந்­திப்பில் கல்ந்­து­கொண்டு உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குன­சே­கர இது தொடர்பில் மேலும் குறிப்­பிட்­ட­தா­வது,
அண்­மையில் ஸ்தாபிக்­கப்­பட்ட நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரிவு பல்­வேறு நிதி மோச­டிகள் தொடர்பில் விசாரணைகளை முன்­னெ­டுத்­துள்­ளது. சுமார் 35 நிதி மோச­டிகள் தொடர்பில் தற்­போ­தைக்கு விசா­ர­ணைகள் முடுக்­கி­வி­டப்­பட்­டுள்­ளன.
அதில் பிர­தா­ன­மான ஒரு விசா­ரணை பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்சின் கீழ் அப்­போது இருந்த திவி நெகும திணைக்­க­ளத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட நிதி மோச­டி­ குற்றச்சாட்டு தொடர்பானதாகும்.
திவி நெகும திணைக்­க­ளத்தில் ஊக்­கு­விப்பு தொடர்­பி­லான நிதியில் 70 மில்­லியன் ரூபா நிதி மோசடி செய்­யப்­பட்­டுள்­ளது. இத­னை­விட திவி­னெ­கும வீட­மைப்பு உதவி திட்­டத்­திலும் நிதி மோசடி செய்­யப்­பட்­டுள்­ளது. அத்­துடன் 'லிதோ' அச்­சுப்­ப­திப்பு தொடர்­பிலும் பாரிய நிதி மோச­டி­யொன்று இடம்­பெற்­றுள்­ளது. இவற்றை விட கடந்த ஜனா­தி­பதி தேர்­த­லுக்­காக அல்­லது பிர­சா­ரங்­க­ளுக்­காக அத்­தி­ணைக்­க­ளத்­தி­லி­ருந்து பல இலட்ச ரூபா நிதி செலவு செய்­யப்­பட்­டுள்­ளது. அத்­துடன் தேசிய சம்­மேளனம் ஒன்று திவி நெகும நிதியில் இயங்கியுள்ளது.
இந்த ஒவ்­வொரு விடயம் தொடர்­பி­லு­மான விசா­ர­ணைக்கும் பஷில் ராஜ­பக்ஷ எமக்கு அவ­சி­ய­மா­னவர். எனவே தான் நாம் இது தொடர்பில் கடு­வலை நீதிவான் நீதி­மன்றில் அறிக்கை சமர்­பித்­துள்ளோம்.
இது தொடர்பில் சட்ட மா அதி­பரின் ஆலோ­ச­னை­யையும் கோரி­யுள்ளோம். நீதி மன்றின் ஒத்­து­ழைப்­புடன் பஷில் ராஜ­ப­க்ஷவை நாட்­டுக்குள் அழைத்து வந்து இந்த விவ­கா­ரங்கள் தொடர்பில் விசா­ரிக்க நாம் எதிர்ப்­பார்க்­கின்றோம்.
இந்த நிதி மோசடி தொடர்பில் இது­வரை நாம் சுமார் 16 பேரிடம் விசா­ரணை செய்து வாக்கு மூலம் பதிவு செய்­துள்ளோம். திவி­னெ­கும ஊக்­கு­விப்பு தொகையில் 70 மில்­லி­ய­னுக்கும் மேல் மோசடி தொடர்பில் 8 பேரி­டமும் வீட­மைப்பு தொடர்பில் முன்­னெ­டுக்­கப்­பட்ட மோசடி தொடர்பில் 7 பேரி­டமும் இவ்­வாறு வாக்கு மூலம் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. அவர்கள் அனை­வரும் திவி நெகும திணைக்­க­ளத்தில் ஒவ்­வொரு கோவை­களை பேணி வந்­த­வர்கள்.
அவர்­களின் வாக்கு மூலத்­துக்கு அமைய திவி நெகும அப்­போ­தைய பணிப்­பாளர் ஆர்.ஆர்.கே.ரண­வ­கவை நாம் விசா­ரித்தோம்.அவர் நிதிக் குற்ற புல­னாய்வுப் பிரி­வுக்கு அளித்த வாக்கு மூலத்தில் தான் முன்­னெ­டுத்த அனைத்து செயற்­பா­டுகளுக்கும் உத்­த­ரவு பிறப்­பித்­தவர் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜ­பக்ஷ என்­பதை தெளி­வாக கூறி­யுள்ளார்.
பஷில் ராஜ­ப­க்ஷவின் உத்­த­ரலை அப்­ப­ணிப்­பாளர் நடை முறைப்­ப­டுத்­தி­யுள்­ள­தா­கவே தெரி­கி­றது. ஏனெனில் அமைச்சர் பணிப்­பா­ள­ருக்கு உத்­த­ரவு பிறப்­பிக்க பணிப்­பாளர் தன் கீழான அதி­கா­ரி­களை வைத்து அதனை முன்­னெ­டுத்­துள்­ளா­தா­கவே சந்­தே­கிக்­கின்றோம்.

திவி நெகும நிதியில் மோசடி செய்­யப்­பட்ட வித­துக்கு ஒரு உதா­ர­ணத்தை நான் சுட்­டிக்­காட்­டு­கின்றேன். இந்த நிதியின் கீழ் தேசிய சம்மேளனமொன்று நடத்தி வரப்பட்டுள்ளது. ஒரு முறை அந்த சம்மேளன கூட்டம் ஒன்றுக்கு அம்பாறையில் இருந்து மூவர் அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களை அழைத்துவர 3 இலட்சத்துக்கும் மேல் செலவு செய்யப்பட்டுள்ளது. இந்தளவு மோசடிகள் இடம்பெற்றுள்ளன.
யார் என்ன சொன்னாலும் இந்த விசாரணைகள் தொடரும். விசாரணையின் பின்னர் மோசடிக்காரர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர். என்றார்.  நன்றி வீரகேசரி

No comments: