உலகச் செய்திகள்


மீண்டும் கலவர பூமியாக மாறிய எகிப்து!

டெல்லி மாணவி வல்லுறவு வழக்கு: முக்கிய குற்றவாளி ராம் சிங் சிறையில் தற்கொலை!

ஐ.நா. தீர்மானத்திற்கு வடகொரியா கடும் எதிர்ப்பு!

புதிய பாப்பரசர் தெரிவானார்!
மீண்டும் கலவர பூமியாக மாறிய எகிப்து!

எகிப்தில் நேற்று இடம்பெற்ற கலவரத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளர். மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
அந்நாட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பொன்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இக்கலவரம் ஏற்பட்டுள்ளது.
http://www.virakesari.lk/image_article/article-2290600-188869A8000005DC-481_634x379.jpg
இது தொடர்பில் மேலும் தெரியவருவது,
எகிப்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற கால்பந்து போட்டித்தொடரொன்றின் போது கலவரம் ஏற்பட்டது.
போர்ட் செட் நகரில் நடந்த ஆட்டத்தில் எகிப்தின் முன்னணி அணிகளில் ஒன்றான அல் அலி கிளப் அணியை, உள்ளூரைச் சேர்ந்த அல் மஸ்ரி அணி வீழ்த்தியது.



http://www.virakesari.lk/image_article/article-2290600-18883E2F000005DC-403_634x404.jpg
இந்த வெற்றிக் கொண்டாட்டத்தின்போது இரு தரப்பு இரசிகர்களுக்குமிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
எகிப்து கால்பந்து வரலாற்றில் நடந்த மிக மோசமான இந்த வன்முறை தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர்.
 வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடந்த மாதம் 21 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக போர்ட் செட் நகரில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
http://www.virakesari.lk/image_article/article-2290600-18883E0E000005DC-118_634x414.jpg
பொலிஸ் தடியடி மற்றும் துப்பாக்கி சூட்டில் பலர் உயிரிழந்தனர். பின்னர் அங்கு இராணுவம் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், 21 பேரின் மரண தண்டனைக்கு எதிரான மனுவை விசாரித்த எகிப்து நீதிமன்றம், மரண தண்டனையை நேற்று உறுதி செய்து அதிரடி தீர்ப்பு வழங்கியது.
5 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. நகரின் முன்னாள் பாதுகாப்புத்துறை தலைவர் எஸ்ஸாம் சன்மார்க், காவல்துறை உயர் அதிகாரி உள்ளிட்ட 10 உயர் பேருக்கு தலா 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.
http://www.virakesari.lk/image_article/article-2290600-18884AA6000005DC-395_634x387.jpg
இதுதவிர 6 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 2 பேருக்கு 5 ஆண்டு சிறையும், ஒருவருக்கு 12 மாத சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார். 28 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த தீர்ப்பையடுத்து அங்கு மீண்டும் கலவரம் ஏற்பட்டுள்ளது. இக்கலவரத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளதுடன் 15 பேர் காயமடைந்துமுள்ளனர்.
http://www.virakesari.lk/image_article/article-2290600-18883DEB000005DC-494_634x408.jpg
இதனைத்தொடர்ந்து அங்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

நன்றி வீரகேசரி
 




டெல்லி மாணவி வல்லுறவு வழக்கு: முக்கிய குற்றவாளி ராம் சிங் சிறையில் தற்கொலை!


11/03/2013 டெல்லியில் ஓடும் பஸ்ஸில் 23 வயது மாணவி வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான ராம் சிங் திகார் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் 16ம் திகதி டெல்லியில் ஓடும் பஸ்லில்  23 வயது மருத்துவக கல்லூரி மாணவி 6 பேர் கொண்ட கும்பலால் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டு தெருவோரம் வீசப்பட்டார்.
இதில் படுகாயமடைந்த அவர் டெல்லி மற்றும் சிங்கப்பூர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் கடந்த டிசம்பர் 29ம் திகதி அவர் உயிர் இழந்தார். இந்த வழக்கில் 6 பேரை பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அதில் பஸ் சாரதியான ராம் சிங் என்பவரே முக்கிய குற்றவாளியாக கண்டறியப்பட்டார். இந்த வழக்கில் அவரது தம்பி முகேஷும் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டதில் ஒருவர் தவிர மீதமுள்ள 5 பேரும் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவர்கள் பிற கைதிகள் தவிர தங்களுக்குள்ளும் பேசிக் கொள்வதை நிறுத்திவிட்டனர். இதையடுத்து அவர்கள் எங்கே தற்கொலை செய்து கொள்வார்களோ என்ற சந்தேகத்தின்பேரில் அவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சிறை எண் 3ல் அடைக்கப்பட்டிருந்த ராம் சிங் இன்று காலை 5 மணிக்கு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் தீன் தயாள் உபத்யாய மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் அவர் தற்கொலை செய்துகொள்ளவில்லையெனவும் சக கைதிகளால் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவரது தந்தை தெரிவித்துள்ளார்.
" எனது மகன் தற்கொலை செய்யவில்லையெனவும் கடந்த 6 நாட்களுக்கு முன்பு நான் அவரை சந்தித்து பேசினேன்.அப்போது அவர் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறியதுடன் சக கைதிகள் தன்னிடம் வலுக்கட்டாயமாக உறவு வைத்ததாகவும் தெரிவித்தார். பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்தில் அவரது கையில் பலத்த அடிபட்டது. அதனால் அவரால் தனது துணியை தூக்கு கயிறாக மாற்றியிருக்க முடியாது. ஒரு கையை வைத்து தூக்கு போட்டிருக்க முடியாது" என்றார்.
இச்சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.    நன்றி வீரகேசரி 







ஐ.நா. தீர்மானத்திற்கு வடகொரியா கடும் எதிர்ப்பு!


08/03/2013  அமெரிக்கா மற்றும் சீனாவால் முன்வைக்கப்பட்ட  வடகொரியா மீதுள்ள பொருளாதார தடைகளை தீவிரப்படுத்தும் தீர்மானம் நேற்று நடந்த ஐ. நா. பாதுகாப்பு குழு கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டமைக்கு அந்நாடு கடும் கண்டனத்தினை வெளியிட்டுள்ளது.
இது ஐ.நா. பாதுகாப்பு குழுவால் வடகொரியா மீது விதிக்கப்படும்  4ஆவது பொருளாதாரத் தடையாகும்.
வடகொரியா 2006-ம் ஆண்டு தொடங்கி இதுவரை 3 அணு ஆயுத சோதனைகளை நடத்தியுள்ளது. மூன்றாவது முறையாக பிப்ரவரி மாதம் அணுகுண்டு சோதனையை நடத்தியது.
பாதுகாப்பு குழுவின் தீர்மானங்களை மீறி வடகொரியா நீண்ட தூரம் சென்று தாக்கக் கூடிய ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டதற்கு,  உலக நாடுகள் கடும்  கண்டனம் தெரிவிப்பதை உணர்த்தவே இந்த கடுமையான பொருளாதார தடைகளை ஐ.நா. விதித்துள்ளது.
 இதன்படி வடகொரியா இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்யும் சந்தேகத்துக்கு இடமான சரக்குகளை உலக நாடுகள் கண்காணிக்க வேண்டும். வடகொரியாவின் தூதரக அதிகாரிகள், சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடாமல் தடுக்க கண்காணிக்கப்படுவார்கள்.
http://www.virakesari.lk/image_article/img_606X341_0703-north-korea-Un-vote-sanctions.jpg
விலை உயர்ந்த நகைகள், பந்தயக் கார்கள், ஆடம்பரக் கார்கள், பயண மற்றும் பந்தயப் படகுகள் ஆகியவற்றை மற்ற நாடுகள் கொரியாவுக்கு ஏற்றுமதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.
வடகொரியாவின் அணு மற்றும் ஏவுகணை திட்டங்களை  செயல்படுத்த உதவும் பொருளாதார கொடுக்கல் வாங்கல்களை மற்ற நாடுகள்  நிறுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
 வடகொரியா நிறுவனங்களுக்கு வேலை செய்யும் முகவர்களை பயணம் செய்வதை தடை விதிக்க மற்ற நாடுகளிடம் கோரியுள்ளது. வடகொரியாவின் விமானங்கள்  சட்டத்திற்கு புறம்பான சரக்குகளை ஏற்றிச் செல்வதாக சந்தேகப்பட்டால், தங்கள் வான் எல்லையில் பறக்கவும், தரை இறக்கவும் தடை விதிக்க மற்ற நாடுகளுக்கு அறிவுறுத்துதல் போன்ற தடைகள் இத்தீர்மானத்தில் உள்ளது.
 வடகொரியாவின் முக்கிய ஆயுத முகவர் மற்றும் ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள நிறுவனம் மற்றும் ஏவுகணை, அணு சோதனைகளை நடத்த தேவையான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் அமைப்பு ஆகிய இரண்டு நிறுவனங்களையும், அதில் முக்கிய பொறுப்பில் உள்ள 3 நபர்களையும் இந்த தடை தீர்மானத்தில் சேர்க்கவுள்ளனர்.
 ஆனால் இதனை சீனா எவ்வாறு நடைமுறைபடுத்தப் போகிறது என்பதைப் பொறுத்தே இந்த புதிய தடைகளின் வெற்றி உள்ளது. ஏனென்றால் வடகொரியா  இணைந்து செயல்படும் பல நிறுவனங்களும் வங்கிகளும் சீனாவில் உள்ளவை.
 ஆனால் இந்த தீர்மானம் அமைதியான,இராஜதந்திர மற்றும் அரசியல் தீர்வு காண்பதற்கு பாதுகாப்பு குழு முயற்சிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி உள்ளது. இதற்காக 6 முனை பேச்சுகளை தொடங்கவும் வலியுறுத்தி உள்ளது
.
நன்றி வீரகேசரி 



புதிய பாப்பரசர் தெரிவானார்!


14/03/2013 ஆர்ஜன்டீனாவைச் சேர்ந்த கார்தினால் ஜோர்ஜ் மெரியோ பேர்கோக்லியோ புதிய பாப்பரசராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
புதிய பாப்பரசரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நன்றி வீரகேசரி


No comments: