வானொலி மாமாவின் குறளில் குறும்பு 57 தண்ணீரும் வியாபாரமா?


சுந்தரி:
        கேட்டியளே அப்பா இவள் எங்கடை மகள் ஞானாவின்ரை சங்கதியை…
அப்பா:        விஷயத்தைச் சொல்லாமல் கேட்டியளோ அப்பா எண்டால் நான் என்னத்தை சொல்லிறது             சுந்தரி.
சுந்தரி;:        அதுவந்தப்பா…இவள் ஞானா என்ரை சிநேகிதியின்ரை மகள் அமுதாவோடை இப்ப கதைக்        கிறதில்லையாம்.
அப்பா:        சுந்தரி! அவையள் இளம்பிள்ளையள். ஆவையள் தங்களுக்கு விரும்பினபடி செய்யட்டும்             நீh ஏன் அவையளின்ரை விஷயத்துக்கை தலையிடுகிறீர்?
சுந்தரி:        அவையள் எங்கடை குடும்பச் சிநேகிதர். அவையளின்ரை நட்பைக் கைவிடலாமே அப்பா?
அப்பா:        நட்பைக் கைவிடக் கூடாதுதான் சுந்தரி. இவள் பிள்ளை ஞானா ஏன் அந்தப் பிள்ளை            அமுதாவோடை கதைக்கிறதில்லை எண்டு விசாரிச்சநீரே?   
சுந்தரி:        அந்தப் பிள்ளையின்ரை தகப்பன் வானம்பாடி, தண்ணீர் வியாபாரம் செய்யத் துவங்கி            இருக்கிறாராம். அதுதானாம் காரணம்.                               
அப்பா:        சுந்தரி, இந்தத் தண்ணியடிக்கிறவை, தண்ணி வியாபாரம் செய்யிறவை, இப்பிடிப்                பட்டவையோடை அதிகம் தொடர்பு வைக்காமல் இருக்கிறது நல்லதுதானே.   


சுந்தரி:  
      உங்களுக்கு எப்போதும் பிழையான அந்தலையைப் பிடிக்கிறதுதான் வேலை அப்பா. நான்            சொன்னது மதுபான வியாபாரம் இல்லை. இது பச்சைத் தண்ணி வியாபாரம்.
ஞானா:        (வந்து) பச்சைத் தண்ணியிலை என்ன வியாபாரம் எண்டு கேளுங்கோ அப்பா.
அப்பா:        வா…ஞானா….வா….பச்சைத் தண்ணியிலை விளக்கெரிச்ச கதை எனக்குத் தெரியும்.            பச்சைத் தண்ணியிலை பணியாரம் சுடுகிறவையையும் எனக்குத் தெரியும். ஆனால்                பச்சைத் தண்ணி வியாபாரம் எண்டது எனக்குத் தெரியாது.
ஞானா:        என்னப்பா நீங்கள் பச்சைத் தண்ணியைப் போத்தலிலை அடைச்சு ளிசiபெ றயவநச  எண்டு            விக்கிறது உங்களுக்குத்  தெரியாதே.       
அப்பா:        எட…எட…அதையே சொல்லிறியள். அதுக்கும் நீ அத்தப் பிள்ளை அமுதாவோடை             கதைக்காமல் இருக்கிறதுக்கும் என்ன தொடாபு ஞர்னா?   
ஞானா:        அமுதாவின்ரை தகப்பன் வானம்பாடி, பச்சைத் தண்ணியிலை பணியாரம் சுடுகிறார்…..            விளங்கேல்லையே அப்பா? காசு சம்பாரிக்கிறார்.
அப்பா:        அது நல்லதுதானே ஞானா?
ஞானா:        திருக்குறளைகரைச்சுக் குடிக்கிற நீங்களே இப்பிடிக் கேக்கலாமே அப்பா?
                அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்                                
                 புல்லார் புரள விடல்
        எண்டு திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார் தானேஅப்பா?
சுந்தரி:        பாத்தியளே அப்பா. இவள் பிள்ளையின்ரை குறும்மை. தண்ணி வியாபாரம் செய்யிறது            அருளும் அன்பும் இல்லாத வியாபாரமாம். ஆனபடியாலை அவையளின்ரை நட்புத் தனக்குத்        தேவையில்லையாம்
அப்பா:        சுந்தரி;…. இவள்பிள்ளை பெரிய சிக்கலை எல்லே துவக்கியிருக்கிறாள். உந்தக் குறள் வந்து
        பொருள்செயல் வகை எண்ட 76 அதிகாரத்திலை இருக்கிற குறள். பொருள் செயல் வகை        எண்டால் செல்வத்தைச் சம்பாதிக்க வேண்டிய முறை. இதிலை வள்ளுவப் பெருந்தகை             பணத்தைச் சம்பாதிக்கிறதைப் பற்றித்தான் சொல்லியிருக்கிறார்.
ஞானர்:        அப்பா திருவள்ளுவர் பணத்தைச் சம்பாதிக்க வேண்டாம் எண்டு ஒரு இடத்திலையும் சொல்        லேல்லை. ஆனால் எப்பிடிச் சம்மாதிக்கச் சொல்லிறார், அருளோடும், அன்போடும் சம்பாதியு        ங்கோ அதுதான் சிறந்த சம்பாத்தியம். நீங்கள் நல்லவர்கள் எண்டால் மற்றச் சம்பாத்தியங்        களைக் கைவிட்டுவிடுங்கோ எண்டதுதானே இந்தக் குறளின்ரை கருத்து?
அப்பா:        ஞானா நீ சொல்லிற கருத்து ஒரு அளவுக்குச் சரிதான். இருந்தாலும்…நாமக்கல்லார்…                “அறனறிந்த நல்லவர்கள் அருளொடும், அன்பொடும் வராத பொருளாக்கத்தை                 விரும்பமாட்டார்கள்.” எண்டுதான் பொருள் சொல்லியிருக்கிறார். அது சரி இதுக்கும் தண்ணி         வியாபாரத்துக்கும் என்ன சம்பந்தம்?
சுந்தரி:        நானும் உதைத்தான் ஞானாவிட்டைக் கேட்டனான் அப்பா.
ஞானா:        அப்பா, தண்ணீர் வந்து கடவுளுடைய அருட்கொடை. எவருக்கும் இலவசமாய்                 தந்த இந்த அரும் பொருளை வியாபாரப் பண்டமாக மாற்றிப் பணம் சம்பாதிக்கலாமா?
சுந்தரி:        அப்பா இவள்பிள்ளை பாக்கிமாதிரி உப்பிடி நுட்பம் பாத்தால் உலகத்திலை உள்ள             சம்பாத்தியங்கள் பல அன்பும் அருளும் இல்லாத சம்பாத்தியங்கள்தான். மீன் இசைச்சி            வியாபாரம், கோழிப்பண்ணை வியாபாரம், ஏன் சொல்லப் போனால் நாய், புனையளுமே             வியாபாரப் பொருள்காளாப் போச்சு. அன்போடும் அருளோடும் எப்பிடிப் பணம் சம்பாதிக்கிறது        எனக்கெண்டால் எனக்கு விளங்கேல்லை.
ஞானா:        அப்பா….கடற்கரையிலை வீசிற காத்துக்கும், ஆத்திலை ஓடிற தண்ணிக்கும் மனிசர் ஏன்            அப்பா காசுகுடுத்து வாங்க வேணும் எண்டுதான் நான் கேக்கிறன். முந்தின காலத்திலை             தண்ணிக்கும் அரேன் காசு குடுத்து வாங்கினவையே. தண்ணிப் பந்தல் வைச்சுத் தண்ணி            குடுக்கிற வழக்கம் எஙகடை ஆக்களிட்டை இருந்தது தானே.
அப்பா:        ஞானா நீ சொல்லிறது சரிதான். ஆனால் இலவசமாய் கிடைக்கிற தண்ணீரையும் மனிசர்            விரும்பிய இடத்துக்குக் கொண்டுவரப் பணம் செலவாகும்தானே. ஆந்தப் பணத்தைப் போட    ;ட        ஆக்கள் அதைத் திருப்பி எடுக்க வேணும்தானே. அப்ப அது வியாபாரமாய்ப் போகுது.
சுந்தரி:        அதைத்தான் நானும் சொல்லிறன் அப்பா. இப்பபாருங்கே காத்திலை பிராணவாயு                 கலந்திருக்குது.     ஆசுப்பத்திரித் தேவைக்கு அதை சிலின்டரிலை அடைச்சுப் பாவிக்கினம். அது         சும்மா     கிடைக்குமே. தண்ணிகூடச் சுத்தமான தண்ணி வேணுமென்டால் அதுக்கும் பணம்             செலவிட Nனும்தானே. இதுகளிலை வாற லாபத்தை அன்பும் அருளம் இல்லாத சம்பாத்தியம்         எண்டு    சொல்லலாமே?
ஞானா:        அப்ப ஏனப்பா திருவள்ளுவர் உந்தக் குறளை எழுதிவைச்சிருக்கிறார்?
அப்பா:        ஞானா….நீ கேக்கிறது நல்ல ஒரு கேள்விதான். திருவள்ளுவர் ஒரு பெருளைப் பற்றிச்            சொன்னால் அதின்ரை உன்னத நிலையைத்தான் சொல்லுவார். அதைக் கடைப்பிடித்து             நடக்கிறதோ அல்லது விடுகிறதோ எண்டது எங்கடை கையிலைதான் இருக்கு. இப்ப உந்தக்        குறளின் படிக்குப் பணம்சம்பாதிக்கிதின்ரை உன்னத நிலை அருளொடும், அன்பொடும்             சம்பாதிக்கிறது. அதை முடியும் எண்டால் செய்யுங்கோ முடியாட்டில் விட்டிடுங்கோ.
சுந்தரி:        அப்பா அருளோடும் அன்போடும் சம்பாதிக்கக் கூடிய ஒரு வழி சொல்லுக்கோ பாப்பம்.
ஞானா:        அம்மா….ஒண்டல்ல ஒன்பது சொல்லலாம். சந்தை வியாபாரம் செய்யிறவையே எத்தினையோ        செய்யலாம். பொருட்களை அதிகப்படியான இலாபம் வைக்காமல் விற்கலாம். பொருட்களை        அளவு குறைக்காமல் விற்கலாம். சாமான்களைப் பதுக்கி வைச்சு நாட்டிலை தட்டுப்பாட்டை        ஏற்படுத்தி விலைகளை உயர்தாமல் வியாபாரம் செய்யலாம்;. உப்பிடி எத்தினையோ             சொல்லலாம்.
அப்பா:        ஞானா இந்தக்காலத்திலை எல்லாமே வியாபார மயம்தான். உலகப் போர்களே வியாபார நோக்கத்தினாலைதான் நடந்திருக்கு, நடக்கப் போகுது. ஆதனாலைதான் வள்ளுளவர்            அன்றே சொல்லி வைச்சார்:
                அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்                               
                புல்லார் புரள விடல்
        எண்டு. நேர்மையற்ற முறையிலை, தீயவழியிலை, மனிதநேயமில்லாத முறையிலை                உயிர்களிடத்திலை அன்பில்லாத வழியிலை சம்பாதிக்கிற பணத்தை நல்லவர்கள்                ஒருபோதும் விரும்ப மாட்டார்கள் எண்டு. நல்லவர்கள் கடைப்பிடிக்கட்டும் முடியாதவர்களை            யார்தான் என்ன செய்ய முடியும்?
                            (இசை)

   

No comments: