அவுஸ்திரேலிய அணி வீரர்கள் நீக்கத்திற்கு கடும் எதிர்ப்புகள்

austriliya_plyசொல் பேச்சுக் கேட்கவில்லை என்பதற்காக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு அணியிலிருந்து நீக்கப்பட்ட வட்சன், கவோஜா, பற்றின்சன், ஜோன்சன் ஆகியோர் மீதான நடவடிக்கைக்கு கடும்
எதிர்வினைகள் கிளம்பியுள்ளன.
பிரபலமானவர்களின் கருத்துகள்

டேரன் லீ மேன் : நாம் என்ன கிரிக்கெட் ஆடுகிறோமா அல்லது வேறு ஏதாவதா? நாங்கள் ஒன்றும் பாடசாலை பையன்கள் அல்ல. நாம் முறையாக நடந்து கொண்டு இந்தியாவில் பொறுப்பான முடிவுகளை எடுப்போம். அவர்கள் விளையாடுவது அவசியம்.

மார்க்வோ  மிகவும் முட்டாள்தனமாக உள்ளது. ஏதோ படிவத்தை பூர்த்தி செய்யவில்லை என்பதற்காக அணியிலிருந்து  நீக்குவது படு முட்டாள்தனம். இந்த முடிவினால் அணியில் மற்ற வீரர்களும் அதிருப்தி அடைவார்கள். அணியில் பிளவை உண்டாக்கும் வேலை இது. இந்த நடவடிக்கை அணியை ஒன்றுபடுத்திவிடும் என்று நினைக்கிறார்களா ?இந்த நாடகத்தினால் எப்படி  3 ஆவது டெஸ்டில் உயிர் பெற்று விளையாட முடியும்? எனக்குத் தெரியவில்லை. இது போன்ற ஒன்றை நான் கிரிக்கெட்டில் கேள்விப்பபட்டதே இல்லை.

அலன்போர்டர்: ஒரு சாதாரண விடயத்துக்கு இவ்வளவு பெரிய தண்டனையா? இது என்ன பள்ளிச் சிறுவர்களுக்கான தொடரா? இது டெஸ்ட் தொடர். இந்த நடவடிக்கை அளவுக்கு அதிகமானது. 

டொம் மோடி : எனது அனுபவத்தில் தோல்வி பற்றி வீரர்கள் எழுதுவது என்பது வீரர்களின் பலம் அல்ல. இதை செய்யாமல் போவது ஒன்றும் அதிசயமல்ல. களத்தில் என்ன செய்கிறார்கள் என்பதிலேயே கவனமாக இருக்க வேண்டும்.

டேமியன் மார்டின்: கற்பனையான மோஸ்தர் பாணி நடவடிக்கைகளை எடுத்து செயற்படும் தவறான நபர்கள் பலர் நிர்வாகத்தில் இருக்கிறார்கள்.

மைக்கல் வோன் : என்ன நடக்கிறது அவுஸ்திரேலிய கிரிக்கெட்டில் ?அணியில் தேர்வு செய்யப்பட வேண்டுமெனில் அனைவரும் கட்டுரை ஏதாவது எழுத வேண்டுமா என்ன?

டன் ஜோன்ஸ் : இந்த நடவடிக்கைகளில் உள்ளீடுகள் ஆழமானவை. இது தோற்றத்தை விடவும் மிகவும் ஆபத்தானது. அவுஸ்திரேலியா கடும் பிரச்சினையில் உள்ளது.    நன்றி தினக்குரல்  "வட்சனுக்காக அவுஸ்திரேலிய அணியின் கதவுகள் திறந்திருக்கும்'

Watson_02
வட்சனுக்காக அணியின் கதவுகள் திறந்திருக்கும் என கிரிக்கெட் அவுஸ்திரேலியா (சி.ஏ.) பொதுச் செயலர் பாட் ஹேவர்ட் தெரிவித்தார். இதனால்  வட்சன் அணிக்குத் திரும்பும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா சென்றுள்ள அவுஸ்திரேலிய அணி முதல் இரு டெஸ்டில் தோல்வியடைந்து 02 என பின்தங்கியுள்ளது.

இதையடுத்து அணியை  முன்னேற்ற உருப்படியான ஏதாவது யோசனைகள் தரும்படி வீரர்களிடம் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் கேட்டார். குறிப்பிட்ட நாளுக்குள் இதற்குப் பதில் தெரிவிக்காத துணைக் கப்டன் வட்சன், பற்றின்சன், மிட்சல் ஜான்சன், கவாஜா ஆகியோர் அதிரடியாக  நீக்கப்பட்டனர். ஆவேசமடைந்த வட்சன் உடனடியாக நாடு திரும்பி விட்டார். விரைவில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் முடிவில் உள்ளதாகத் தெரிகிறது.  இது  குறித்து பாட் ஹோவர்ட் கூறியதாவது ;

எனக்கு வட்சனை நன்கு தெரியும். அணியின் நலனுக்காக இதற்கு முன் பல  நேரங்களில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். இவருக்கும் கிளார்க்கிற்கும் இடையே கடந்த 18 மாதங்களாக பிரச்சினை இருப்பது உண்மை தான். ஆஷஸ் தொடருக்காக இங்கிலாந்து செல்லுமுன் இதை அவர்கள் கட்டாயம் தீர்த்துக் கொள்ள வேண்டும்.

இப்போதைய நிலையில் இதற்கு மேல் இப் பிரச்சினைக்குள் செல்ல விரும்பவில்லை. வட்சனுக்கு எப்போது அணியில் இடம் தருவது என முடிவான பின் அவரிடம் இது குறித்துப் பேசுவேன். அவருக்காக மட்டுமல்ல அணிக்குத் திரும்ப விரும்பும் அனைவருக்கும் கதவுகள் திறந்தே இருக்கும்.

வட்சன் குறித்து அணியின் கப்டன் கிளார்க் கூறுகையில் ; “வட்சன் திறமை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. அவர் மீண்டும் அணியில் இடம் பெறுவார். துணை கப்டனாக இருப்பார்‘ என உ றுதியாக நம்புகிறேன் என்றார். நன்றி தினக்குரல்

No comments: