பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தண்டனையை நிறைவேற்ற இடைக்காலத் தடை


30/8/2011
இந்திய முன்னாள் பிரதமர் ரவ் காந்தியின் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற சென்னை உயர் நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை விதித்ததுள்ளதாக எமது சென்னை அலுவலக செய்தியாளர் தெரிவிக்கிறார்.

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதை 8 வாரங்களுக்கு நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தூக்கு தண்டனைக்கு எதிராக பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நேற்று ஏற்றுக் கொண்டது.

இந்த மனுக்கள் மீது நீதிபதிகள் நாகப்பன், சத்யநாராயணன் ஆகியோர் இன்று விசாரணையைத் தொடங்கியது. மூவரின் சார்பில் மூத்த சட்டத்தரணிகள் ராம் ஜெத் மலானி உள்ளிட்டோர் ஆஜராகினர்.

இந்த நிலையில், மூவரின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற இடைக்காலத் தடை விதித்த நீதிபதிகள், இந்தத் தண்டனையை 8 வாரங்களுக்கு நிறுத்தி வைக்க உத்தரவிட்டனர்.

வீரகேசரி இணையம்






No comments: