கவிதை - நட்புக் காலங்கள்

.
நட்புக் காலங்கள்............பள்ளி முடிந்த பின்னும்
வீடு திரும்பாமல்
நண்பர்களுடன்
மாலை ஆறு மணிவரை
வியர்க்க வியர்க்க
ஓடிப்பிடித்து
விளையாடிய போது
வியர்வையை
விட அதிகமானது நட்பு
கல்லூரியில் சேர்ந்தபின்
வீடுதிரும்ப
தாமதமானால்
நண்பன் வீட்டில்
நானும் ஒரு பிள்ளையாய்
தங்கிய போது பாசத்தை விட
உயர்ந்தது நப்டு
வேலை தேடி
அலையும் போது ஒன்றாய்
நேர்முகத்தேர்வுக்கு
சென்று கிடைக்காத
வேலையை திட்டிக்கொண்டே
தோழர்களுடன் சினிமா
சென்றபோது
சுமைதாங்கியானது நட்பு.
வேலை கிடைத்து ஒவ்வொருவரும்
வேறு வேறு ஊர்களுக்கு
சென்று விட்டபின்
வாரம் ஒருமுறை அனுப்பும்
இருவரி ஈ-மெயிலிலும்
நண்பர்களுக்குள் கொடுக்கும்
missed call லுமாக
மாறிப்போனது இன்றைய நட்பு

நன்றி நிலாரசிகன்

No comments: