இசை விழா - நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்

சென்னையிலே மார்கழி மாதத்தில் ஆரம்பமாகும் இசை விழா. அவ் வேளையில் வெளியாகும் வார மாத சஞ்சிகை யாவுமே இசை மயமாகவே இருக்கும். நிகழ்ச்சி விமர்சனம் செய்தி ஏன் நகைச்சுவைத் துணுக்குகள் கூட இசைவிழா தொடர்பாகவே இருக்கும். எமது  Sydney  யிலும் June 10 11 12ம் திகதிகளில் இசை விழா நடைபெற உள்ளது. அதையொட்டி நாமும் சிறிது இசை சம்பந்தமாக சில விடயங்களை வெளியிடலாமே என எண்ணிப்பார்த்ததன் விளைவே இந்தக் கட்டுரையை வரையக் காரணம்.


இசைக் கலைஞர்களை வழர்ப்பது சென்னைச் சங்கீத சபாக்கள். சபாக்களிலே பிரபலமான பின்பே வெளி இடங்களில் கச்சேரி ஒழுங்காகும். வெளி ஊhர்கள் வெளி மானிலங்கள் என கலைஞரைத் தேடிக் கச்சேரி அழைப்புக்கள் வரும். இசைக் கலைஞனுக்கு நன்றாக தொழில் நடக்கிறது என்றால் தொடர்ந்து பிரயாணங்களே .சில பிரபல கலைஞர்கள் சேர்ந்தாற்போல் பல நாட்கள் பிரயாணம் செய்வார்கள். இவர்களுக்கென   உண்டு. கட்டணத்திலும் சலுகை உண்டு என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் எவ்வளவு பிரயாணமென்று. றெயில் வண்டியில் மேல்தட்டுப் படுக்கை கீழ்த்தட்டுப் படுக்கை இதை ஆங்கிலத்தில்    எனப்படும். புpரபல சங்கீத வித்துவானாக இருந்து மறைந்த மகாராஜபுரம் சந்தானம்  ரிக்கெற் ஒதுக்கீடு செய்து விட்டு வருபவரிடம் தமாசாக அப்பரா சுந்தரரா என கேட்பாராம்.

சபாக்கள் அதிகமாக சன்மானம் வழங்காது. இசை;க்கலைஞர்களுக்கு சன்மானம் எல்லாம் பிற கச்சேரிகள் மூலம்தான். அதிலும் கல்யாணக் கச்சேரிகளில் அதிக சன்மானம் கிடைக்கும். 26 27 வருடங்களுக்கு முன்பு ஆ.ளு. சுப்புலக்ஷ்மி கல்யாணத்திற்கு பாடவந்தாரானால் அவருக்கு 25 ஆயிரம் ருபா வழங்கப்படும். இவை யாவும் கௌரவ சின்னம். சில சமயங்களில் அழைப்பிதழ்களிலேயே வரவேற்பின் போது யார் பாடுகின்றார் என்று அச்சிடுவதும் உண்டு. இன்றைய பிரபலங்கள் கல்யாணக் கச்சேரிக்கு 45000 50000 ஆயிரம் ருபாய்கள் வரை வாங்குகின்றார்களாம். மிகப் பெரிய தொழில் அதிபர் வீட்டுக் கல்யாணமாக இருந்தால் சன்மானம் தவிர தங்க ஆபரணங்கள் தங்கத்திலே சந்தனக் கும்பா என்றெல்லாம் கொடுக்கப் படும்.
சசட்டிமார் தொழில் அதிபர்கள் மட்டுமல்லாது கலைஞர்களையும் போஷித்து வந்தார்கள். இதுவே சிலப்பதிகாரத்தில் மாதவிக்கு அழிக்கப்பட்ட மாலை நகரத்திலே விலை பேசப்பட்ட கதை. வியாபார மூலம் நகரத்தைக் கட்டி எழுப்பியவர்கள் செட்டிமார் அதனால் இன்றும் அவர்கள் நகரத்தார் என அழைக்கப்படுவது வழமை.

இவ்வாறான ஒரு செட்டியார் வீட்டில் நடந்த திருமணம் பற்றி ஒரு கதை. நிஜமா கட்டுக்கதையா எனத் தெரியாது. செட்டியார் தனது மகள் திருமணத்திற்கு அன்று பிரபலமாக இருந்த வீணை வித்துவானை ஏற்பாடு செய்து அச்சவாரமும் தட்டிலே வெத்திலை பாக்குடன் வைத்து பவ்வியமாகக் கொடுத்து விட்டார். சில சமயங்களிலே முக்கிய கலைஞருக்கு சில பக்க வாத்தியங்களைப் பிடிக்காது அல்லது பகை இதை அறியாத செட்டியார் வீணை வாத்தியத்திற்கு பகைவரான கட வாத்தியத்தை ஒழுங்கு பண்ணிவிட்டார். வீணை வித்துவானுக்கும் கட வித்துவானுக்கும் இடையில் பஞ்சை வைத்தாலே பத்திக்கொள்ளும் அத்தனை சூடு. வீணை வடக்கே பார்த்தால் கடம் தெற்கே பார்ப்பவர். ஒருவரை ஒருவர் கவிழ்க்க சலிக்காமல் முயற்சி செய்வார்கள். சங்கீத உலக விவகாரங்களைச் செட்டியார் அறிவாரா.

கச்சேரியன்று காலைதான் தனது ஜென்ம விரோதி தனக்குக் கடம் வாசிக்க இருப்பதை அறிந்தார் வீணை வித்துவான். இதை எவ்வாறாவது நிறுத்திவிட வேண்டும் என்று கங்கணம் கட்டினார். நேராக செட்டியாரைப் போய்ச் சந்தித்தார் “செட்டியார்வாழ் நடக்க இருப்பது நல்ல காரியம் இனிதே நடைபெற வேண்டும் விக்கினங்கள் ஏற்ப்படக் கூடாது நீங்கள் வீணைக்கச்சேரிக்கு பக்கவாத்தியமாக கடத்தை ஏற்பாடு செய்துள்ளீர்கள். அந்தக் கட வித்துவான் நல்ல பிரபலமான வித்துவான்தான் ஆனால் அந்த வித்துவான் வாசிக்கும் போது நடுவில் கடத்தைத் தூக்கி உயரப்போட்டு தாளம் போடுவார் கீழே விழுந்து தொலைந்தால்  கடம் உடைந்து விடும். கல்யாணத்தன்று அது பெரிய அப சகுனம் ஆகிவிடும் பாருங்கோ ரொம்ப யாக்கிரதையாக இருக்க வேணும். செட்டியார் நீங்க நல்லாக இருக்க வேணும் என எண்ணியே அதை சொல்ல வந்தேன் என்றார் வீணை வித்துவான்”
இதைக் கேட்ட செட்டியார்பதைபதைத்தார் உடனடியாக கட வாத்தியக் காரரை நிறுத்த அவர் வீட்டிற்கே போனார். ஒரு வழியாக மென்று விழுங்கி கட வாத்தியத்தை நிறுத்தவந்த செய்தியைச் சொன்னார். கட வாத்தியக்காரர் இது தனது ஜென்ம எதிரியின் செயல் எனப் புரிந்து கொண்டார்.சும்மா விடுவாரா செட்டியார்வாள் நீங்கள் யோசிக்க வேண்டாம் மண்கடத்திற்குப் பதில் நான் உலோகத்தால் ஆன பானையில் வாசிக்கிறேன். ஆனால் ஒரு விசயம் நம் வீணை வத்துவான் இருக்கிறாரே அவர் மாபெரும் வித்துவான் தனது வித்துவத் தன்மையைக் காட்ட 6 அடி நீளத்தில் ஒரு வீணை செய்து வைத்துள்ளார்  அதைப் பிரமாதமாகவும் வாசிப்பார் வீணை பரிசுத்தமானது என்பதற்காக அதற்கு வெள்ளைக் கூறை தைத்துப் போட்டிருக்கிறார். 6 அடி வீணையை ஒருவர் தூக்கமுடியாது அதனாலே முன்னும் பின்னுமாக இருவர் தூக்கி வந்து மேடையில் வைப்பார்கள். ஆள் உயர வீணையை வெள்ளைத் துணியால் போர்த்தி எடுத்து வந்து மேடை நடுவில் வைத்தால் பிரேதத்தைக் கொண்டு வந்து வைத்தது மாரி ஆகிவிடும் பாருங்கோ.அதை நினைக்கத்தான் எனக்குப் பயமாக இருக்கிறது. கல்யாணத்தில் இப்படி ஒரு காட்சியா என்றாரே கடவித்துவான். புதைபதைத்துப் போனார் செட்டியார். 
மேலே என்ன நடந்திருக்கும் என்பதை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள். No comments: