.
இரகசியமாக இப்படி நள்ளிரவில் சந்தித்துக்கொள்ளும் வரை அவ்வளவு நெருக்கமா என கேள்வி எழுப்பியுள்ள கிரிக்கெட் விமர்சகர்கள், ஒன்றுமில்லையெனில் இப்படி புகைப்படம் எடுப்பதை தவிர்த்து பின்வாசல் வழியே ஓடி மறைய வேண்டியது ஏன் எனவும் கிசுகிசுக்கின்றனராம்!
ஐபிஎல் போட்டிகளில் விளையாடிவரும் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பிரெட் லீயும், பாலிவூட் நடிகை பிரீத்தி ஷிண்டாவும், மும்பையில் ஒலிவ் ஹோட்டலில் இரகசிய சந்திப்பு ஒன்றை மேற்கொண்டதாக வெளிவந்த தகவல் சென்ஷேஷனல் ஹிட்ஸை ஏற்படுத்தியிருக்கிறது.
சுமார் இரு மணிநேரத்திற்கு மேலாக குறித்த ஹோட்டலில் அவர்கள் பேசிக்கொண்டிருந்த விஷயம் ஊடகங்களின் காதுக்கு எட்டியதும் ஹோட்டல் நுழைவாயிலில் (Paparazi) புகைப்படங்கள் எடுக்க ஊடகவியலாளர்கள் குவிந்துவிட்டனராம்.
ஆனால் புகைப்படம் எடுப்பதை முற்றாக தவிர்க்க வேண்டுமென்பதால், பிரெட் லீ முன் வாசல் வழியாகவும், பிரீத்தி சிண்டா பின்வாசல் வழியகவும் திடீரென எஸ்கேப் ஆகிவிட்டனராம்.
இரகசியமாக இப்படி நள்ளிரவில் சந்தித்துக்கொள்ளும் வரை அவ்வளவு நெருக்கமா என கேள்வி எழுப்பியுள்ள கிரிக்கெட் விமர்சகர்கள், ஒன்றுமில்லையெனில் இப்படி புகைப்படம் எடுப்பதை தவிர்த்து பின்வாசல் வழியே ஓடி மறைய வேண்டியது ஏன் எனவும் கிசுகிசுக்கின்றனராம்!
ஐ.பி.எல் அணி ஒன்றின் உரிமையாளராக இருக்கும் ஒரே ஒரு பெண்ணாக திகழும் பிரீட்டி ஷிண்டா, 76 மில்லியன் அமெரிக்க டாலர் ஒப்பந்தத்தில் அதன் விளம்பர பிரச்சாளராகவும் இருக்கிறார்.
ஐபிஎல் அணிகளின் இளம் உரிமையாளரும் இவரே. வேகப்பந்துவீச்சாளர் பிரெட் லீ, முன்னர் பஞ்சாப் அணிக்காக விளையாடி வந்த போதும் இப்போது கொல்கத்தாவுக்காக விளையாடுகிறார். பிரெட் லீ ஏற்கனவே திருமணமானவர்.
எலிசபெத் கெம்ப் எனும் அவரது மனைவியை 2009ம் ஆண்டு டைவோர்ஸ் செய்துவிட்டார். அப்போது வழங்கிய தொலைக்காட்சி செவ்வி ஒன்றில் தனக்கு பிடித்த நடிகை பிரீத்தி சிண்டா தான் என கூறியிருந்தார்.
முன்னதாக தீபிகாவுடன் சேர்த்து அவருடைய பெயர் அடிபட்டுவந்தது. ஆனால் அண்மைய நாட்களாக பிரீத்தி சிண்டாவுடன் அவர் டேட்டிங்கில் இருப்பதாக புகைப்படங்களும் சாட்சியமளிக்கின்றன.
நன்றி tamilenn
No comments:
Post a Comment