பட விமர்சனம்


.
அழகர்சாமியின் குதிரை
kuthiriசாமி குதிரை காணாமல் போனதால் நடக்கும் நிகழ்வுகளே கதை... அழகர்சாமி கோவிலில் திருவிழா எடுக்க கிராமத்தினர் முயற்சிக்கின்றனர். அப்போது கோவிலில் இருந்த மரக்குதிரை மாயமாகிறது. ஊர் தலைவர் போலீசில் புகார் அளிக்கிறார். குதிரையை சல்லடை போட்டு தேடுகின்றனர். பக்கத்து மலை கிராமத்தில் வசிக்கும் இளைஞன் அழகர் சாமியின் குதிரையும் காணாமல் போகிறது.


அதை மரக்குதிரையை தேடும் கிராமத்து மக்கள் பிடித்து வைத்துக் கொள்கின்றனர். காணாமல் போன மரக் குதிரை உயிரோடு வந்திருப்பதாக அவர்கள் நம்புகின்றனர். அழகர்சாமி அவ்வூருக்கு வந்து தன் குதிரை அங்கிருப்பதை கண்டுபிடிக்கிறான்.

போலீசை அழைத்து வந்து அதை மீட்க முயற்சிக்கிறான். கிராமத்தினர் குதிரை இல்லாவிட்டால் கோவில் விழா தடைபடும் என்று சொல்லி திருப்பித் தர மறுக்கின்றனர். குதிரை கிடைத்தால்தான் அழகர் சாமிக்கு திருமணம் நடக்கும் என்ற நிலை. தீர்வு என்ன? என்பது கிளைமாக்ஸ்...

பச்சைபசேல் கிராமம் அரிதாரம்பூசாத மனிதர்கள். அழுத்தமான கதையில் சில நேரம் வாழ்வது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறார் இயக்குனர் சுசீந்திரன்.

பரட்டைத் தலை, தொந்தி வயிறுடன் குதிரைக்கார இளைஞனாக வரும் அப்புக்குட்டி கச்சிதமான தேர்வு. அழகான பெண் மனைவியாவது கண்டு சந்தோஷத்தில் குதிப்பது... காணமல் போன குதிரையை பார்த்ததும் கட்டிப் பிடித்து மகிழ்வது... ஊர்க்காரர்களிடம் அடி வாங்கி ரத்த சகதியாகி கிடப்பது... குதிரையோடு போனால்தான் திருமணம் நடக்கும் என்று சொல்லி கலங்குவது என கேரக்டரில் வாழ்ந்து நெஞ்சை இழுக்கிறார்.

பகுத்தறிவு பேசுபவராக வரும் ஊர்த் தலைவர் மகன் பிரபாகரன் நேர்த்தி... தாழ்ந்த சாதி பெண்ணுடனான காதல் கவித்துவம். சரண்யா மோகன், பூசாரி மகள் அத்வைதா கிராமத்து தேவதைகளாய் பளிச்சிடுகின்றனர்.

ஊர் தலைவராக வரும் அழகன் தமிழ்மணி, சரண்யா அப்பாவாக வரும் தேவராஜ் கேரக்டர்களும் வலுவானவை. ஆரம்பத்தில் படம் மெதுவாக நகர்கிறது. போக போக விறுவிறுப்பு... இளைய ராஜாவின் இசையில் பழைய மண்வாசனை. தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில் மலையோர பசுமை.


நன்றி தினக்குரல்

No comments: