பொரிவிளாங்காய் - யோகேஸ் கணேசலிங்கம் - கன்பரா

.
பொரிவிளாங்காய் என்ற பெயரைப் பார்த்தவுடன் இது என்ன 
பொரித்த விளாங்காயாஅப்படியும் ஒன்று இருக்கிறதாஎன்று 
எம்மிற் பலர் வியப்படைவார்கள்இன்று ஐம்பது வயதைக்  இலங்கையருக்கு மட்டுமே அது ஒரு தின் பண்டம் என்பது   விளங்கும்அண்மையில் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஒரு 
இளம் பெண்மணி எங்கள் வீட்டிற்கு வருகை தந்த பொழுது
சில பொரிவிளாங்காய் உருண்டைகளை கொண்டு வந்தார்
அவற்றைக் கண்டதும் எனக்கு எனது இளமைக் காலத்து பசுமையான நாட்கள் 
மனத் திரையில் ஓடத் தொடங்கியது. இன்று கேக்பேஸ்ட்ரி எனப் பட்ட பண்டங்களை செய்வதையே நோக்கமாகக் 
கொண்டு வாழும் பெண்கள் மத்தியில் எமது 
பாரம்பரிய பொரிவிளாங்காயை முயற்சி செய்து உருட்டிய இப் 
பெண்ணிற்கு ஒரு சபாஷ்.

உழுத்தம்மாஅரிசிமாசீனிமிளகுசீரகம் இவையே பொரிவிலாகாங்காயுக்கு தேவையான பொருட்கள். இங்கு சீனிப்பானியைப் பதமாகக் காய்ச்சுவதிலேயே கை வண்ணம் தங்கியிருக்கிறது பாகு பதம் பிழைத்தால் பொரி உருண்டைகள் கல்லாகி எமது பல்லைப் பதம் பார்த்துவிடும்.

மைசூர்ப் பாகு பதம் பிழைத்ததும் அதை உடைக்க சுட்டியல் 
வேண்டும் என்று இந்தியாவில் வேடிக்கையாகப் பேசுவார்கள்.
அப்படியே பொறி விளாங்காய் பதம் பிழைத்தால் எங்கே சுட்டியல் என்று கேட்க்கும் வழக்கமும் இருந்தது. முற் காலங்களில்
பயணம் போகும் பொழுதும் கதிர்காமம் போன்ற தூர வழிபாட்டு இடங்களுக்கும் யாத்திரை போகும் போதும் பொறி விளாங்காய்
செய்து கொண்டு போவோம். அபோதெல்லாம் திடீர் உணவு வகைகள் இருக்கவில்லை முழத்துக்கு முழம் உணவகங்கள் இருக்கவில்லை. பக்கற் பக்கற்றாக மிக்சர், பிஸ்கட் வகைகள் என
கடைகளில் வாங்கி பெட்டிகளில் அடைத்துக் கொண்டு போவதில்லை. பயணம் போவதற்கு திட்டம் போட்டதுமே
பல நாட்களுக்கு கெட்டுப் போகாத தின் பண்டங்களை செய்யத்தொடங்கி விடுவோம். தாய், மகள், பேத்தி என மூன்று தலை முறையினரும் சேர்ந்து கூட்டாக வேலை
செய்வார்கள்இதைவிட அயலவர்சுற்றத்தார்
தாமாகவே வந்து உதவுவார்கள்தானும் தனது குடும்பமும் என்று வாழாத காலம்எல்லோரும் ஒற்றுமையாக வாழ்ந்த 
சந்தோஷமான காலம் அது.  

முன்னர் கொழும்பில் கிளறிக்கல் சேவையில் ஈடுபட்டிருந்த ஆண்களிற் பலர் தமது குடும்பங்களை யாழ்ப்பாணத்தில் தங்க வைத்துவிட்டு தாம் மட்டுமே கொழும்பில் இருந்தனர். ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் பலர் தங்கி இருப்பர். மாதத்திற்கு ஒரு தடவையாவது யாழ்ப்பாணம் வந்து போவார்கள். யாழ்ப்பாணம் வந்து போகும் போarது அவர்கள் கொண்டு போகும் பொருட்களில் பொரிவிளாங்காய் ஒன்றாக இருக்கும். சாப்பாட்டுக் கடைக்கு சென்று மூன்று வேலையும் சாப்பிட்டு பணத்தை செலவு செய்ய மாட்டார்கள். காலை உணவு பெரும்பாலும் பொரிவிலாங்காயும் தேநீருமாக இருக்கும். பொரிவிளாங்காயில் அரிசி மாவோடு உழுத்தம்மா சேர்க்கப்பட்டிருப்பதால் அது சத்துள்ள உணவாகின்றது. அத்தோடு பசியை பிடிப்பதாகவும் இருக்கின்றது.

எனது நெருங்கிய உறவினர் ஒருவர் யாழ்ப்பாணத்திற்கு விடுமுறையில் வந்து திரும்பும்போது வீடு முழுவதும் உழுத்தம்மா மணக்க மாமி பொரிவிளாங்காய் பிடிப்பா. நானும் மாமிக்கு ஒத்தாசையாக பொரிவிளாங்காய்களை பாத்திரங்களில் அடுக்கி வைப்பேன். அவர்களை இன்று நினைக்கும் போதும் உழுத்தம்மா வாசனையும், பொரிவிளாங்காயுமே எனக்கு ஞாபகம் வருகிறது.

கதிர்காம யாத்திரை முற்காலங்களில் புனிதமான ஒரு யாத்திரை. முருக வழிபாடு ஒன்றையே நோக்கமாகக் கொண்டு பாத யாதிரையாகவும், பஸ், ரயில் நடை என மாறி மாறிப் பிரயாணம் செய்தும் தென்னிலங்கைக்கு பக்தர்கள் செல்லுவார்கள். இப்பயணம் பல நாட்கள் செல்லும். அப்போது வழியில் சாப்பிடுவதற்கு எடுத்துச் செல்லும் பண்டங்களில் பொரிவிளாங்காய் ஒன்றாக இருக்கும். இது பல மாதங்களுக்கு கெட்டுப் போகாமல் இருக்கும். இதில் சேர்க்கப்பட்டுள்ள மிளகு, சீரகம், வயிற்றுக் குழப்படி வராமல் எளிதில் ஜீரணமாவதற்கு உதவும். பொரிவிளாங்காய் இன்று நாம் செய்து உண்ணாத உணவுப் பட்டியலில் சேர்ந்து கொண்டு இருக்கின்றது. இறந்து போன மொழி, மறந்து போன சொற்கள் என்பது போல பொரிவிளாங்காயும் மெல்ல மெல்ல இல்லாமல் போகின்றது.
நீங்கள் ஒருமுறை இதனை முயற்சி செய்து ருசித்து பார்த்தீர்கள் என்றால் அதன் சுவை  உங்களை மீண்டும் மீண்டும் செய்யத் தூண்டும். எமது பாரம்பரிய உணவும் பேணப்படும்.

யோகேஸ் கணேசலிங்கம்
கன்பரா




1 comment:

திருநந்தகுமார் said...

எமது தாயகத்து நினைவுகளை மீண்டும் ஒருமுறை மீட்ட வாய்ப்பாக அமைந்தது இவ்வாக்கம். அம்மையார் தமக்கேயுரிய பாணியில் சுவைபடக் கூறியுள்ளார். எனது வீட்டில் பொரி விளாங்காய் கிடைக்கவில்லை. ஆயினும் எனது உறவினர் வீடுகளில் அது கிடைக்கும்போது ரசித்து உண்பேன். அது சரி. இங்கு எங்காவது கிடைக்கிறதா?