சி.டி.யை அறிமுகம் செய்தவர் மரணம்

.

சி.டி.யை அறிமுகம் செய்தவரான நோரியோ ஓஹா என்பவர் மரணமடைந்துள்ளார்.

உலகின் முதல் சி.டி.யை தயாரித்து கடந்த 1982ம் ஆண்டு விற்பனை செய்தது சோனி நிறுவனம். அப்போது அந்த நிறுவனத்தின் தலைவராக இருந்தவர் நோரியோ ஓஹா (வயது 81). கடந்த 1982ஆம் ஆண்டு முதல் 1995ஆம் ஆண்டு வரையில் சோனி நிறுவனத்தின் தலைவராக ஓஹா இருந்தார். இவரது காலத்தில் தான் எலக்ட்ரோனிக்ஸ் ஹார்டுவேர் நிறுவனமாக இருந்த சோனி நிறுவனம் சொப்ட்வேர் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனமாக விரிவடைந்தது.12 செ.மீ. விட்டத்தில் சிடியை வடிவமைக்க நோரியா ஓஹாதான் காரணமாக இருந்தார். சிடி விற்பனையை சோனி நிறுவனம் அறிமுகம் செய்ததும் சிடி மிகவும் பிரபலமானது.

தற்போது முதுமை காரணமாக ஓஹாவின் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயல் இழந்தன. இதனால் டோக்கியோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோரியா ஓஹா கடந்த 23ஆம் திகதி மரணம் அடைந்தார்.

நன்றி வீரகேசரி

No comments: