மாணவர்க்கான சத்தியசாயி நித்திலக் கோவை – பகவான் பாபா

.

56. கடமை
ஒழுக்கம் (நன்னடத்தை) இதுவே முக்கியமானது.

தூய்மையற்ற வழியில் பெறும் இன்பம் நல்லது அன்று!

அன்பு இல்லாக் கடமை – வருந்தத்தக்கது
அன்போடு கூடிய கடமை – விரும்பத்தக்கது
கடமைக்காகக் காட்டாத அன்பு – தெய்வீகமானது

எனவே, அன்பு…அன்பு…அன்பு மயமாயிருங்கள்.



57. பேசா அமைதி
பேசாது ‘அமைதி’ யாக (ஸைலன்ஸ்) இருப்பதைப் பயிலுங்கள்: ‘நா’ அசையாது இருக்கும் போதுதான் ஆண்டவனின் குரலினை நம் இதயத்துள் கேட்க முடியும்! பேசாநிலையே ஆன்மீக விருப்புடையோரின் பேச்சு ஆகும். மென்மையான, இனிமையான பேச்சே உண்மையான அன்பின் வெளிப்பாடாகும். வெறுப்பு கூக்கிரலிடும்: அச்சம் கதறும்: தற்பெருமை எக்காளமிடும்: ஆனால் அன்போ தாலாட்டுப்பாடும்: அது ஆறுதல் வழங்கும்: அது மருந்தாகப் பயன்படும்!

58. எது அறம் - தருமம்!
எதனைப் பிறர் உனக்குச் செய்யக்கூடாது என்று எண்ணுகின்றாயோ, அதனை நீ பிறருக்குச் செய்யாதே! இதுதான் உண்மையான அறம் (தருமம்).

59. தீங்கு செய்யும் தொலைக்காட்சி
ஒரு ‘தொலைக்காட்சி’ப் பெட்டி (T .V) உள்ளது. பணக்காரர்களின் வீட்டில் ஒவ்வோர் அறையிலும் தொலைக்காட்சிப் பெட்டிகள் வைக்கப்படடுள்ளன. அந்தக் கணத்தில் இருந்து மனிதனின் மனமானது மாசடைந்து போனது.

தொலைக்காட்சி வருவதற்கு முன் மனிதனின் மனம் இந்த அளவு மாசுபட்டுப் போகவில்லை. வன்முறைச் செயல்களும் முன்நாளில் இவ்வளவு து}ரம் மட்டுமீறிப் போனதில்லை, இன்றோ T .V யானது ஒவ்வொரு குடிசையிலும் உள்ளது. மக்கள் உணவு உண்ணும்போது கூடத் தொலைக்காட்சி பார்க்கின்றனர். இதன் விளைவு என்னவென்றால், தொலைக்காட்சியில் பார்க்கின்ற அனைத்து அருவருப்புடைய, கீழ்த்தரமானவை எல்லாம் பார்க்கின்ற நபரால் உண்ணப்படுகின்றன. தொலைக்காட்சியை ‘ஒருமுகப் பார்வையோடு’ பார்க்கும் போது, அவனடைய உலகைப்பற்றிய பார்வையானது பாதிப்படைகின்றது. தொலைக்காட்சியில், காட்டப்படும் காட்சிகள், எண்ணங்கள், செயல்கள் பார்ப்பவர்களில் மனங்களில் நிறைந்து இருக்கின்றன. அவர்களுக்கும் தெரியாமலேயே, கிளர்ச்சிகளுக்கும், வெறுப்புணர்வுகளும் மனங்களின் உள்ளே நுழைகின்றன. காலப்போக்கில் அவை தங்கி இருக்கும் மனங்களில் வேர்பிடித்து வளர்கின்றன.

எனவே, உணவு உண்ணும் போது பயங்கரமான நிகழ்வுகளை விவாதிக்கவே விவாதிக்காதீர்கள். மனத்தினைக் கிளர்ந்தெழச் செய்யும் செய்திகள் எவற்றிற்கும் நீங்கள் இடங்கொடுக்கவே கூடாது. உணவு உண்ணும்போது அமைதிதான் ஆட்சி செய்ய வேண்டும். வெறும் ஒசை அலைகள் கூட நம்முள் புகுந்து நம் மனங்களைப் பாதிக்கும். எனவே, டி.வி பார்ப்பதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்!....பாரதநாடு மட்டுமன்று, இந்த உலகம் முழுவதுமே இந்தத் தொலைக்காட்சியின் விளைவால் துன்புறுகின்றது.

இந்த உலகமானது ஒழுங்கின்மை, முரண்பாடு, சீர்குலைவு ஆகியவற்றால் பெருந்துன்பத்திற்கு ஆளாகி உள்ளது….

மாணவர்களே! கல்வி ஒளிபரப்பினைத் தவிர வேறு எதனையும் தொலைக்காட்சியில் பார்க்கவே பார்க்காதீர்கள்: அதுவுஞ்சிறப்பாக உணவு உண்ணும் போது தொலைக்காட்சி வேண்டவே வேண்டாம்!

60. ஒழுக்கம்
ஒழுக்கமே உயிர்:
ஒழுக்கமே ஆற்றல்:
ஒழுக்கமே உண்மையான தெய்வீகம்!
ஒழுக்கம் இல்லாது, மூளையில் வெறும் செய்திகளை மட்டும் அடைத்து வைப்பது இறுதியில் அத்ன் அழிவினையே விளைவிக்கும்.

No comments: