.
இவ்வருடத்தின் மிகவும் சிறப்பான நிகழ்வான இங்கிலாந்து இளவரசர் வில்லியம், கேட் மிடில்டனின திருமணம் ஏப்ரல் மாதம் 29 ம் திகதி லண்டனில் நடைபெறறது.
இத்திருமணத்தில் 50 நாட்டு தலைவர்கள் உள்ளிட்ட 1,900 பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.இவ்வருடத்தின் மிகவும் சிறப்பான நிகழ்வான இங்கிலாந்து இளவரசர் வில்லியம், கேட் மிடில்டனின திருமணம் ஏப்ரல் மாதம் 29 ம் திகதி லண்டனில் நடைபெறறது.
இங்கிலாந்து இளவரசர் சார்ள்ஸின் மூத்த மகனான இளவரசர் வில்லியம் கல்லூரியில் படித்தபோது அதே கல்லூரியில் படித்த கேட் மிடில்டனை காதலித்தார். இவர்கள் ஒருவரை ஒருவர் நீண்டகாலமாக காதலித்து வந்தனர். இவர்களின் திருமணத்துக்கு இரு வீட்டு பெரியவர்களும் சம்மதம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து இவர்கள் திருமணம் நடைபெற ஏற்பாடாகியது.
லண்டனில் உள்ள வெஸ்ட் மினிஸ்டரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் அந்நாட்டு நேரப்படி பகல் 11 மணிக்கு திருமணம் ஆரம்பமாகியது. திருமண நிகழ்ச்சி இங்கிலாந்து நேரப்படி காலை 8.15 மணிக்கு தொடங்கியது இதேவேளை திருமண நிகழ்வில் அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறாமல் தடுக்க அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.





1 comment:
தமிழ்முரசு புகைப்படபிடிப்பாளர் லண்டனிலிருந்து அனுப்பிய படங்கள் நல்லாக உள்ளன ...நன்றிகள்
Post a Comment