.
ஆன்மீக குருவான ஸ்ரீ சத்ய சாயிபாபாவின் உடல் புதன்கிழமை, 27 ஏப்ரல் 2011 ம் திகதி அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.85 வயதான சாய்பாபா கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

3 நாட்களாக அவரது உடல் பக்தர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக புட்டபர்த்தியில் உள்ள பிரசாந்தி நிலையத்தின் சாய் குல்வந்த் ஹாலில் வைக்கப்பட்டிருந்தது.
அவரது உடலுக்கு இலட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினார்கள்.

அரசு மரியாதையுடன் சாய்பாபா உடல் புதன்கிழமை, 27 ஏப்ரல் 2011 ம் திகதி நல்லடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதையடுத்து சாய்பாபாவின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகள் தொடங்கின.

இறுதிச் சடங்கு நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் புட்டபர்த்தியில் குவிந்தனர். இறுதிச் சடங்கில் உறவினர்கள், நிர்வாகிகள் உட்பட 650 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.
வேத மந்திரங்கள் முழுங்க இந்து முறைப்படி பாபாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் பாபா உடலில் தெளிக்கப்பட்டது. பாபாவின் சகோதரர் மகன் ரத்னாகர் இறுதிச் சடங்குகளை செய்தார். சடங்குக்குப்பின்னர் நவரத்தினப் பெட்டியில் பாபா உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இறுதி சடங்கில் அத்வானி, கிரண்குமார் ரெட்டி, சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் பங்கேற்றனர்.
நன்றி தமிழ்வின்
4 comments:
[quote]இறுதிச் சடங்கு நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் புட்டபர்த்தியில் குவிந்தனர். இறுதிச் சடங்கில் உறவினர்கள், நிர்வாகிகள் உட்பட 650 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.[/quote]
பக்தர்களால் உயர்ந்தார பாபா
உறவினர்களால் உயர்ந்தார
கடைசியில் பக்தர்கள் ஒதுக்கப்பட்டு உறவினர்கள் முன்நிறுத்தப்பட்டனர்
கிருக்கன்! விகடனில் பாபா பற்றி ஒரு கட்டுரை வந்துள்ளது. வாசித்துப் பாருங்கள் (பொறுமையாக). நிச்சயமாக உங்களுக்குப் பிடிக்காது. யார் கண்டது சில நாட்களிலோ அல்லது மாதங்களிலோ வாசிப்பு வேலைசெய்யலாம்.
பெரும்பான்மைக்கு எதிராகவே எந்தவேளையும் சிந்திக்க வேண்டும் என ஏன் நினைக்கிறீர்கள்.
ஒப்புரவு என்று ஒன்று உண்டு.
கலை ரசிகன்.....
பெரும்பான்மை கருத்து சரியானதாக இருக்க வேண்டிய அவசியமில்லை...
பாபா ஏழைமக்களுக்கு உதவிசெய்தார் என்பதுதான் எல்லோரும் சொல்லும் ஒர் வாதம் அவர் செய்த மாதிரி நீர் செய்வீரோ என்றுதான் கேட்பார்கள்.
இந்தியாவில் உள்ள எல்லா ஏழைகளுக்கும் உதவினாரா?இல்லையே ஏன் ..அவரும் மனிதர்தான் அவரால் இயன்றளவுக்கு ஏழைகளுக்கு உதவினார்
கடவுள் சக்தியால் உதவினார் என்றால் இன்று இந்தியாவில் ஏழைகளே இருக்ககூடாது.இந்தியாவில் 75% கீழ் வறுமையில்தான் வாழ்கிறார்கள் ஏன் இவர்கள் எல்லோருக்கும் ஒரு நல்ல வாழ்க்கையை கொடுக்கமுடியாமல் போய்விட்டது...சொல்ல வேண்டாம் அவர்கள் தலைவிதி அப்படி என்று.
எம்மவர்களை எடுப்போம் அதிகமானோர் வணக்கம் சொல்வதைவிடுத்து சாய்ராம் சொல்லுகிறார்கள் ,அவர் சொன்னார் நானும் சொல்லுகிறேன் என்ற கொள்கைதான்.
சிட்னி முருகன் கோவில் சைவபாடசாலையில் வரும் மாணவர்களின் எண்ணிக்கை 15 ஆனால் ,ஓவ்வொரு சப்பேர்பிலும் உள்ள சாய் கொமீட்டியினரின் பாலவிகாஸ் க்கு போகும் மாணவர்களின் எண்ணிக்கை 30க்கு மேல் அவனின் மகன் போகிறான் என்ட மகனும் போகட்டும் என்ற கொள்கை.
சாய்பாபா தனக்கு என்று ஒரு மதத்தை உருவாக்குவதில் வெற்றி கண்டுள்ளார் .அதற்கு பெரும்பான்மையின் கருத்து சரியானது என்ற கொள்கை நல்லாவே உதவி செய்துள்ளது.
சில பத்திரிகைகள்,சில ஊடகங்கள்,சில இணையதளங்கள் நடுத்தர வர்க்கத்தினருக்காக வெளிவருபவை அதை வாசிக்கலாம் ஆனால் உள்வாங்க வேண்டிய அவசியமில்லை என்பது என் கருத்து.இப்படியான ஊடகங்கள் ஒரே கருத்தை தொடர்ந்து எழுதி கொண்டேயிருப்பார்கள் .அதனால் பொய்களும் உண்மையாகி பெருன்பான்மை கருத்தாக போய்விடும்
.
In a 1993 incident, four intruders armed with knives entered his bedroom, either as an assassination attempt or as part of a power struggle between his followers. Sai Baba escaped unharmed. During the scuffle and the police response, the four intruders and two of Sai Baba's attendants were killed. The official investigation left unanswered questions.
Please visit this web:
http://www.lankasri.com/ta/link.php?3Oc3Y2SaeEe608SdW3v4
Post a Comment