சிட்னியில் திறம்பட நடந்தேறிய “ஜெயராஜ்ஜியம்” நூல் வெளியீடும் இலக்கியப் பட்டி மன்றமும் .................... எனது பார்வையில்....................வைத்திய கலாநிதி இளமுருகனார் பாரதி.

.
அவுஸ்திரேலியக் கம்பன் கழகம் சென்ற சனிக்கிழமை மாலை 6 மணி முதல் ஹோம்புஷ் ஆண்கள் உயர்தரப் பாடசாலை அரங்கில் கம்பவாரிதி இ. ஜெயராஜ் அவர்களின் சிறப்புக் கட்டுரைகள் அடங்கிய “ஜெயராஜ்ஜியம்” என்ற நூல் வெளியீட்டையும் “கம்பராமாயண- பாலகாண்டம்” சொற்பொழிவுகள் அடங்கிய இறுவெட்டுக்களின் தொகுப்பின் வெளியீட்டையும் வெற்றிகரமாக நடாத்தியதுடன் இலக்கியப் பட்டிமன்றம் ஒன்றையும் வெகு சிறப்பாக அரங்கேற்றித் தனது மங்காப் பெருமையை உயர்த்திக்கொண்டது. பாடசாலை வாயிலிலே கட்டப்பட்ட வாழைகளும் தொங்க விடப்பட்ட மாவிலைகளும் அரங்கு அலங்கரிக்கப்பட்ட வண்ணமும் கம்பன் கழகவிழாவென்றால் சீராகவும் செம்மையாகவும் திருப்தியாகவும் அமையும் என்பதைக் கூறாமற் கூறுவதாயிருந்தது. ஆம்! உண்மையாக விழாக்கோலம் எல்லோரையும் கவர்ந்திருந்தது. நிகழ்ச்சி ஆரம்பத்தில் செல்வி சுகன்யா பாலசுப்பிரமணியம் தனது இனிமையான குரலில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தார். அவுஸ்திரேலியக் கம்பன் கழக ஆரம்பித்த நாள்முதல் அதற்குப் பலவகையாலும் தோள்கொடுத்து வந்த திரு திருமதி வேலாயுதப்பிள்ளை தம்பதியினர் தமிழரின் பாரம்பரியத்தை நிலைநாட்டும் வண்ணம் மங்கள விளக்கேற்றி விழாவை ஆரம்பித்து வைத்தார்கள். தொடர்ந்து இராமபிரானின் திருவுருவத்திற்கு சிவத்திரு இந்திரக்  குருக்கள் கர்ப்பூரதீபம் காட்டிப் பூசை செய்ததைத் தொடர்ந்து கம்பன் கழக வாழ்த்துப்பாடப்பட்டது. திரு குமரதாஸ் அவர்கள் தலைமையில் ஆரம்பித்த புத்தக வெளியீட்டு விழாவில் அவர் யாழ்ப்பாணத்தில் கம்பன் கழகம் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் தாங்கள் எதிர் கொண்ட சவால்கள், அனுபவித்த இன்ப துன்பங்கள், எதிர்நீச்சல் போட்டுக் கழகத்தை வளர்த்து உயர்ந்த சுவையான சம்பவங்கள் இப்படிப் பலதரப்பட்ட தகவல்களை மிகவும் உருக்கமாகவும் தௌளத் தெளிவாகவும் விளக்கி உரையாற்றினார். பின்பு இலங்கையின் தலைநகரான கொழும்பில் தொடரப்பட்ட கம்பன் கழகம் எவ்வாறு வீறுநடைபோட்டு வெற்றிவாகை சூடியதென்பதை அழகாக விபரித்தமை எம் இதயத்தை ஈர்த்ததென்றே கூறலாம்.

திரு குமாரதாஸ் அவர்களின் ஆணித்தரமான வரவேற்புரையைத் தொடர்ந்து “ஜெயராஜ்ஜியம்” என்னும் நூலின் ஆய்வுரை – வெளியீட்டுரையை யாழ்ப்பாணத்திலே பணிபுரிந்த காலத்திலே தனது பேச்சுவன்மையினால் தமிழ் நெஞ்சங்களில் தனி இடம் வகித்த பேராசிரியை ஞானா  குலேந்திரன் அவர்கள் வழங்கினார்கள். தமிழ் ஈழத்திலிருந்து தஞ்சாவூர்ப் பல்கலைக் கழகத்தில் பல வருடங்கள் பணியாற்றிய முதல் தமிழ் பேராசிரியை திருமதி ஞானா குலேந்திரன் என்பது பெருமைப்பட வேண்டிய ஒன்றேயாகும். கம்பன் கழகம் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் அதன் வளர்ச்சியில் பங்கேற்றி அதன் வளர்ச்சியில் தனது பங்களிப்பைச் செவ்வனே ஆற்றியவர் திருமதி ஞானா குலேந்திரன் ஆவர். ஆதலாலே கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்களின் சிறப்புக் கட்டுரைகள் அடங்கிய “ஜெயராஜ்ஜியம்’ நூல் வெளியீட்டிற்கும் “கம்பராமாயண – பாலகாண்டம்” சொற்பொழிவுகள் அடங்கிய இறுவெட்டுக்களின் தொகுப்பு வெளியீட்டிற்கும் ஆய்வுரை – வெளியீட்டுரை வழங்க மிகவும் பொருத்தமானவர் இவரே என்று சிட்னிக் கம்பன் கழக அமைப்பாளர் அன்பர் ஜெயராம் தெரிவுசெய்தமை சாலச் சிறந்ததே. தனக்குத் தரப்பட்ட பொறுப்பை திருமதி ஞானா குலேந்திரன் அவர்கள் மிகவும் சிறப்பாகத் தனக்கே உரித்தான பாணியில் கற்றோரும் மற்றோரும் மெச்சும் வகையில் திறம்படச் செய்துள்ளமை போற்றுதற்குரியது.

“ஜெயராஜ்ஜியம்” நூலில் வகுக்கப்பட்ட ஐந்து வண்ணங்களையும் அதாவது கைவண்ணம், கருத்து வண்ணம், கதை வணணம், கவி வண்ணம், காட்சி வண்ணம் ஆகிய ஐந்தையும் அலசி ஆராய்ந்து இரத்தினச் சுருக்கமாகக் அவற்றில் ஊருடுவியிருக்கும் கம்பவாரிதி ஜெயராஜ் அவர்களின் பன்முக ஆளுமையைச் சித்திரித்த பாங்கு பாராட்டுதற்குரியது. எனது இந்த உறுதியான தீர்ப்பிற்குக் கற்றோர் சான்று பகர்வர். இதனைத் தொடர்ந்து இலங்கைக் கம்பன் கழகச் சட்ட ஆலோசகர் திரு நீலகண்டன் (இலங்கை இந்து மாகாண சபை செயலாளர்) அவர்களின் மதிப்புரை இடம்பெற்றது. கம்ப வாரிதியின் சிறந்த குணாதிசயங்களை மெச்சிப் பேசிய அவர் கழக வளர்ச்சி பற்றியும் தனது பங்களிப்பைப் பற்றியும் அழகுறப் பேசினார்.

“ஜெயராஜ்ஜியம்” நூலின் முதற் பிரதியை வைத்திய கலாநிதி மனமோகனும் “கம்பராமாயண – பாலகாண்டம்” சொற்பொழிவுகள் அடங்கிய இறுவெட்டுகள் அடங்கிய தொகுப்பின் முதற்பிரதியைத் தமிழ் - சைவசமய ஆர்வலர் சிவானந்தா அவர்களும் பெற்றுச் சிறப்பித்தனர்.

2007 ஆம் ஆண்டு கோலாகலமாக நடைபெற்ற கம்பவாரிதி அவர்களின் பொன்விழாவில் அவ்விழாக் குழுவினால் கம்பவாரிதி அவர்கள் எழுதிய “ஜெயராஜ்ஜியம்” நூல் வெயியிடப்பட்டது அல்லவா? அன்று கம்பவாரிதி அவர்கள் வழங்கிய ஏற்புரையை இங்கே ஒலிபரப்பியமை மூலம் இந்த வைபவத்தில் கம்பவாரிதியின் அன்புக் குரலைக் கேட்கும் வாய்ப்பைப்  பெற்றோம்.

“தனது இன்றைய உலகளாவிய உயர்விற்குத் தன்னை உயர்த்திய எத்தனையோ மனித தெய்வங்கள் தனக்குப் பின்னால் மறைந்திருக்கிறார்கள். அவர்களை என்றும் மறக்காது வணங்கி வாழ்த்துவேன்” என்ற கருத்துப்பட அவர் ஆற்றிய ஏற்புரையைக் கேட்க என் விழிகள் பனித்தன.

புத்தக - இறுவெட்டு வெளியீட்டு விழாவைத் தொடர்ந்து அனைவரும் ஆவலுடன் காத்திருந்த இலக்கியப் பட்டி மன்றம் திரு திருநந்தகுமார் அவர்களை நடுவராகக் கொண்டு ஆரம்பித்தது.

“கற்போருக்குப் பெரிதும் வியப்பேற்படுத்தும் மனமாற்றம்

 “இராமனைக் காட்டிற்கு அனுப்பிய கைகேயின் மன மாற்றமே!”

(அணித்தலைவர் திரு தனபாலசிங்கம் அவர்கள், துணையாக வாதிட்டவர் திரு அனகன் பாபு அவர்கள்)

 “இராமனைப் பரம்பொருளாய்ப் பேசும் இராவணனின் மனமாற்றமே!”

(அணித்தலைவர் திரு ஜெயராம் அவர்கள். துணையாகச் சிவத்திரு இரவிக் குருக்கள் அவர்கள்)

 “சீதையைத் தீக்குளிக்கச் செய்த இராமனின் மனமாற்றமே!”

(அணித் தலைவர் திரு குமாரதாஸ் அவர்கள் துணையாகச் திரு ஞானாகரன் அவர்கள்)

என்ற கருப்பொருள்கள் பற்றிப் பட்டிமன்றம் ஆரம்பமானது.

அணித்தலைவர்களும் அவர்களுக்குத் துணையாக வாதிட்டவர்களும் தங்கள் பாத்திரங்களை உணர்ந்து திறம்பட வாதிட்டமை எல்லோரையும் மிகவும் கவர்ந்தது. ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்லர் என்று எல்லோரும் பிரமிக்கும் வண்ணம் மன்றத்தில் முதன்முறையாகக் கலந்து திறம்படத் தங்கள் வாதங்களை முன்வைத்துப் பேசி ஜனகன் பாபு அவர்களும், ஞானாகரன் அவர்களும் சிவத்திரு இரவிக் குருக்கள் அவர்களும் எல்லோரின் பெருமதிப்பைப் பெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். திரு திருநந்தகுமார் அவர்களின் பேச்சுத்திறன் கம்பன் கழகத்தினால் புடமிடப்பட்டதோ என்று வியக்கவைத்தது. வழமைபோலக் கணீரென்ற அவரின் மிடுக்கான பேச்சுவன்மை செவிப்புலன் வழியேறிச் சிந்தையில் இனித்தது.

கம்பன் கழக அமைப்பாளரான செயல் வீரர் திரு ஜெயராம் அவர்கள் இம்முறை தமிழ் அறிஞர்கள் இருபத்தொரு பேர்களை நோக்குநர்களாகத் தெரிந்து அழைத்திருந்தார். வாதிழும் மூன்று அணிகளிலிருந்தும் ஒரு அணியினை வாக்களிப்பின் மூலம் நீக்குதற்குப் பட்டிமன்றம் முடிவில் வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த முறை முதன்முதலாக அமுல் படுத்தப்பட்டது. இதன்படி கூடுதலான நோக்கர்களின் கணிப்புப்படி இரண்டாவது அணி நீக்கப்பட்டது. வாக்கெடுப்பைக் கண்காணித்துத் தீர்ப்பைச் சொல்வதற்கு திரு பாலேந்திரா அவர்கள் நியமிக்கப்பட்டிருந்தார். இந்தநேரத்தில் திரு கிருஷ்ணா அவர்கள் மிகவும் அருமையான வகையில் நன்றியுரை வழங்கினார்.

இதனையடுத்துப் பட்டிமன்ற நடுவர் திரு திருநந்தகுமார் அவர்கள் மிகவும் நுணுக்கமாக அலசி ஆராய்ந்தபின் மூன்றாவது அணியினரின் திறமைமிக்க வாதங்களை முன்வைத்து அவர்களுக்குச் சாதகமாகத் தனது இறுதித் தீர்ப்பை அளித்தார். பல மாதங்களுக்குப் பின்னர் ஒரு வெற்றிகரமான புத்தக வெளியீட்டையும் இலக்கிய இன்பத்தில் திக்குமுக்காடவைத்த விறுவிறுப்பான பட்டிமன்றத்தையும் கண்டு களித்த மனநிறைவு அவைநிறைந்த தமிழ் அன்பர்களுக்கு ஏற்பட்டது.

இலங்கை – தமிழ்நாடு போன்ற நாடுகளில் பலருக்கு நல்லதோர் வழிகாட்டியாக – வணக்கத்துடன் போற்றப்படும் ஆசானாக – மிகச் சிறந்த சொற்பொழிவாளராக – நவீன தமிழ்த் துறைகளிலும் ஈடுபாடு கொண்ட மரபை ஓம்பிக் காத்துவரும் தமிழ் அறிஞராக – திறமைமிக்க செயற்பாட்டாளராக – புதிய சிந்தனை கோலமிடும் பிரசித்திபெற்ற எழுத்தாளராக – விழாக்களைக் கேளிக்கைகொண்ட கலைவிழாக்களாக அல்லாது சமுதாயத்திற்குப் பயன்தரு இலக்கிய விழாக்களாக அமைக்கும் ஆற்றல் மிக்கவராக – தனிமனித நிறுவனமாக – பரிணமித்துப் பிரகாசிப்பவர் என்று அன்னாரைத் தெரிந்த எனது கணிப்பை யாவரும் மறுக்கமுடியாது. அவர் இன்னும் பல்லாண்டு காலம் திருத்தக வாழ பரம்பொருளை மனமார வேண்டுவோமாக!





19 comments:

kirrukan said...

தமிழால் கம்பன் நாயகனான்
கம்பனால் இராமர் நாயகனான்
இராமனால் ஜெயராஜ் நாயகன் ஆனார் கொழும்பில்
ஜெயராஜ்யால் ஜெயராம் நாயகன் ஆனார் சிட்னியில்
இவர்களால் நந்தனும் நாயகன் ஆனார் அவுஸ்ரேலியாவில்
கன்னித்தமிழால் கம்பன் கணவான்கள் நாயகன் ஆனார்கள் தமிழனுக்கு


[quote]வணக்கத்துடன் போற்றப்படும் ஆசானாக – [/quote]
போர போக்கைபார்த்தால் வணக்கத்துக்குறிய ஜெயராஜ்க்கு கோவில் கட்டினாலும் கட்டிவினம் போலகிடக்குது சிட்னியில.....

[quote]விழாக்களைக் கேளிக்கைகொண்ட கலைவிழாக்களாக அல்லாது சமுதாயத்திற்குப் பயன்தரு இலக்கிய விழாக்களாக அமைக்கும் [/quote]
கேளிக்கை நிகழ்ச்சி என்று எதை சொல்லுறீயள்? போலிவூட் நிகழ்ச்சி,!மற்றும் தமிழ் சினிமா பாடல் நிகழ்ச்சியையோ!

கலைரசிகன் said...

கம்பன் விழா பற்றிய சிறந்ததொரு வருணனை. நல்ல சொற்தேர்வு. பட்டிமன்ற விவாதங்களையும் இளமுருகனார் பாரதி தொகுத்துத் தந்தால் நன்று. நோக்குநர் தீர்ப்பின் அடிப்படை என்ன? இறுதித்தீர்ப்பின் அடிப்படை என்ன என்றும் அறிய ஆவல்.
நன்றி.

Anonymous said...

இந்த செய்தியை அழகாகவும் எளிமையாகவும் தந்துள்ள வைத்திய கலாநிதி பாரதி அவர்கட்கு எனது பாராட்டுக்கள். விழாவை கண்முன்னே பார்த்ததுபோல் இருந்தது. யாழ்ப்பாணத்தில் கம்பன் விழாவை ரசித்தவன் நான். போர்க்காலச் சூழலில் தமிழ் மக்களிடையே குறிப்பாக இளந்தலைமுறையினரிடம் மொழிப்பற்றை குறைவுபடாமல் காத்ததில் கம்பன் கழகத்தின் பங்கு போற்றற்குரியது. கம்ப ராமாயணம் மூலம் ஒழுக்கத்தையும், பண்பாட்டையும் இளைஞர்களிடம் எடுத்துச்சென்றவர்கள். அவர்கள் பணி அவுஸ்திரேலியாவிலும் தொடர்வதை அறிந்து மிக்க மகிழ்ச்சி. இங்கு இது அத்தியவசியமானதும்கூட. Melbourne மக்களுக்கு கிடைக்காத வாய்ப்பு சிட்னி வாழ் தமிழ் மக்களுக்கு கிடைத்திருக்கிறது. தறிகெட்டுச் செல்லும் இன்றைய புலம் பெயர் தலைமுறைக்கு இது போன்ற தமிழ் அமைப்புக்கள் எமது மொழியின் செழுமையை, எம் இனத்தின் பண்பாட்டுச் சிறப்பை அறிமுகப்படுத்தவேண்டும். மொழி தான் எம் இனத்தை வாழ்விக்கும். இது காலத்தின் கட்டாயம். இந்த முயற்சிக்கு உறுதுணையாகவிருந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
எந்தக் காலத்திலும் கிறுக்கர்கள் கிறுக்கிக்கொண்டேயிருப்பார்கள். இது ஒரு வித மனநோய். மாற்ற இயலாத மனநோய்.
சுவாமி விவேகானந்தர் ஒரு தடவை கூறியது போல், "முட்டாள்களை காண்பது இது முதல் தடவையல்ல" என்ற வாக்கை மனம்கொண்டு கம்பன் கழகத்தின் பணி அவுஸ்திரேலியா எங்கும் தொடரவேண்டும் என்பதே என் போன்ற தமிழ் அபிமானிகளின் விருப்பும் வேண்டுதலும். வாழ்க உங்கள் பணி. செய்தியை தந்த தமிழ் முரசிற்கும் நன்றிகள்.

kirrukan said...

[quote]சுவாமி விவேகானந்தர் ஒரு தடவை கூறியது போல், "முட்டாள்களை காண்பது இது முதல் தடவையல்ல"

.[/quote]

[quote]எந்தக் காலத்திலும் கிறுக்கர்கள் கிறுக்கிக்கொண்டேயிருப்பார்கள். இது ஒரு வித மனநோய். மாற்ற இயலாத மனநோய்[/quote]

...மாற்றுகருத்து என்றால் ராமரில் இருந்து,விவேகானந்தர், டமிழ்முரசு வாசகர் வரை எல்லோருக்கும் கசப்பாய்தான் இருக்கு...ராமர் இராவணனை அழிச்சார்.விவேகானந்தர் முட்டாள் என்றார்,டமிழ்முரசு அன்பர் மனநோய் என்கின்றார்...

[quote]கம்ப ராமாயணம் மூலம் ஒழுக்கத்தையும், பண்பாட்டையும் இளைஞர்களிடம் எடுத்துச்சென்றவர்கள்[/quote].
கம்பன் கழகத்தின் ஒழுக்கம்,பண்பாடு பற்றி நான் இங்கு ஒரு வரியில் எழுதலாம் ஆனால் அழகல்ல,எழுதாமலே சிட்னி வாசகருக்கு புரிந்திருக்கும்...முக்கியமாக பண்பாடு பற்றி

கலைரசிகன் said...

கிருக்கனின் இடுகை பார்த்து ஆச்சரியப் பட்டேன்.
நீங்கள் மாற்றுக் கருத்து என்று சொன்னது வெறுமனே தூற்றுதல் மட்டும் தான். அதற்கு மறுப்புச் சொன்னார் ஒரு அன்பர். மாற்றுக் கருத்து என்றால் கசக்கும் என்கிறீர்கள்.
கம்பன் கழகத்தின் பண்பாடு பற்றி ஒரு வரியில் தானும் ஏதாவது கூறுங்கள். நாங்களும் அறிந்துகொள்கிறோம். கிறுக்கல்கள் என்றாலும் தமிழ்முரசு வாசகர் புரிந்துகொள்வர். சிட்னி வாசகர் மட்டுமன்றி ஏனையோரும் கூட புரிந்துகொள்வர்.

valavan said...

மிக அருமையான ஒரு நிகழ்ச்சி, பேச்சாளர்கள் சபையை கட்டி போட்டுவிட்டார்கள். முத்தாப்பாய் அமைந்தது திருநந்தகுமாரின் பட்டிமன்ற தீர்ப்பு, வாழ்க கம்பன் கழகம்.இரண்டு குறைகளையும் சொல்ல விரும்புகிறேன்.
பேச்சாளர்களை கௌரவிக்கும் பொழுது பெரியவர்கள் மாலை அணிவிப்பதுதான் முறை, சிறுவர்கள் மாலை அணிவித்தது சங்கடமாக இருந்தது. இரண்டாவது கம்பன் கழகம் பொதுவானது, ஏன் ATBC ஊடகம் புறக்கணிக்கப்பட்டது என்பது புரியவில்லை. அந்த ஊடகத்தை கேட்ட போது தமக்கு இது தொடர்பான அறிவித்தல்கள் தரப்படுவதில்லை எனவும், இதற்கு காரணம் இன்னுமொரு ஊடகம் என்றும் குறிப்பிட்டார்கள். இனி வரும் காலங்களில் கம்பன் கழகம் இது போன்ற தவறை விடாதென நம்புகின்றோம்.

kirrukan said...

எது பொதுப்புத்தியோ, எது பெரும்பான்மை கருத்தோ, எதற்கு சந்தையில் மவுசு இருக்கிறதோ, எது விலைபோகிற பண்டமோ… அதன் பக்கம் நின்றுகொள்வது்… இதுதான் மக்களிடம் வந்திருக்கும் மனநிலை. . இதில இருந்து கொஞ்சம் வெளியால வந்து மாத்தி யோசிப்போம் என்றால் விட மாட்டியள் போல இருக்கு.

[quote]கம்பன் கழகத்தின் பண்பாடு பற்றி ஒரு வரியில் தானும் ஏதாவது கூறுங்கள். நாங்களும் அறிந்துகொள்கிறோம். கிறுக்கல்கள் என்றாலும் தமிழ்முரசு வாசகர் புரிந்துகொள்வர். சிட்னி வாசகர் மட்டுமன்றி ஏனையோரும் கூட புரிந்துகொள்வர்[/quote]

அதை வேற நான் எழுதி திட்டு வாங்க வேணுமோ?

கலைரசிகன் said...

பரவாயில்லையே கிருக்கன் மாத்தி யோசிக்க முயற்சிக்கிறாரே! ஆனால் அவர் முதல் எழுதிய பதிவில் மாற்றி யோசித்தது போல் எதுவும் தெரியவில்லை. தூற்றுதலைச் செய்துவிட்டு மாற்றுக்கருத்து, மாற்றி யோசித்தல் என்று நழுவும் முயற்சி ஏன? கம்பன் கழகம் ஜெயராமின் கருத்துத் தான் ஏன்ன?
கிருக்கன்! இப்போதாவது கம்பன் கழகத்தின் பண்பாடு பற்றி சொல்லுங்கள். வெறுமனே கிறுக்குவதால் பயனில்லை.

kirrukan said...

[quote]அவர் முதல் எழுதிய பதிவில் மாற்றி யோசித்தது போல் எதுவும் தெரியவில்லை. தூற்றுதலைச் செய்துவிட்டு மாற்றுக்கருத்து, மாற்றி யோசித்தல் என்று நழுவும் முயற்சி ஏன? [/quote]

தூற்றலுக்கு காரணம் இதுவாக இருக்கும்...பல ஆயிரம் வருடங்களுக்கு முதல் நடந்த காவியத்திற்கு நாம் மேடை போட்டு அலசி ஆராய்கிறோம் ,காரணம் சொல்லுகிறோம் கம்பன் புகழ் பாடி கன்னித்தமிழ் வளர்ப்போம் என்று,2 வருடங்களுகு முதல் நடந்த ஒரு இனழிப்பில் கன்னிதமிழ் பேசிய தமிழன் பல் ஆயிரம் பேர் இறந்தார்கள் அதற்கு ஜ.நாடுகள் சபையும் அன்மையில் போர்குற்ற விசாரனை தேவை என அறிவித்திருந்தது .இதைப்பற்றி அலசி ஆராந்திருந்தால் உண்மையிலயே கம்பன்கழகம் கன்னித்தமிழ் வளர்க்க பாடுபடுகிறார்கள் என நினைத்திருக்கலாம்.அரசியல் வேறு கம்பன் காவியம் வேறு என்று சொல்ல ஏலாது ,


,உனக்கு ஏன் வீண்வம்பு ,பொது கருத்தோட சேர்ந்து வாழ கற்று கொள் என்று கனவில் இராமரின் இன்னொரு அவதாரமான பாபா வந்து சொன்னவர் அதுதான் மாற்று கருத்து,மாத்தி யோசனை என்று சொல்லி நழுவ பார்க்கிறேன்..கி..கி..கி..
நானும் சிட்னிடமிழன் தானே.....

கலைரசிகன் said...

அப்பாடா! ஒரு வழியாக மாத்தி யோசித்து சொல்லியிருக்கிறார் கிறுக்கன். போர்குற்ற விசாரணையை ஏன் செய்யவில்லை என்று முதன்முதலிலேயே கேட்டிருந்தால் யாராவது பதில் சொல்லியிருக்கக் கூடும். தூற்றுதலில் முன்நின்ற கிறுக்கனுக்கு வேறு என்ன வேலை வேண்டியிருக்கு. மற்றவர்களிடம் தான் எதிர்பார்ப்பதையே தன்னிடமும் எதிர்பார்ப்பது தான் சரி. தமிழ்முரசில் மற்றவரைக் தூற்றிக் கிறுக்குவதை விட்டு வேறு பயனுள்ள வேலையை (ஐநா விசாரணை தேவை என்ற கோரிக்கைக்கு வலுசேர்க்கும் வேலையை) செய்யலாமே!
கிறுக்கனால் கிறுக்க மட்டும் தான் முடியும்.
கம்பன் விழா தமிழுணர்வையும் தமிழ் அறிவையும் ஏற்படுத்தியது என்பதுவே உண்மை.
தமிழ்ச்சுவை மாந்தியோர் அறிந்தது. அப்பக்கம் வராது போனோரால் அறிய முடியாதது.

kirrukan said...

[quote]தமிழ்முரசில் மற்றவரைக் தூற்றிக் கிறுக்குவதை விட்டு வேறு பயனுள்ள வேலையை (ஐநா விசாரணை தேவை என்ற கோரிக்கைக்கு வலுசேர்க்கும் வேலையை) செய்யலாமே![/quote]



தமிழ்முரசு ஆசிரியர் குழு கிறுக்கனின் கிறுக்கலை தூற்றல் என்று சொல்லி தடை செய்யும் வரைக்கும் கிறுக்கல் தொடரும்.....தனிநபருக்காகவோ அல்லது கழகங்களுக்காவோ கிறுக்கல் நிக்காது

.தமிழ்முரசு ஆசிரியர் குழுவுக்கு..... இதில் நான் கிறுக்கியது தூற்றலாக இருந்தால் அந்த பதிவை நீக்கிவிடும்படி கேட்டுகொள்கிறேன்

கலைரசிகன் said...

மாத்தி யோசியுங்கள் என்று சொல்லிவிட்டு இப்போது கதையையே மாத்திச் சொன்னால் எப்படி?
விழா இரசனை பற்றி ஒருவர் எழுதினால் ஐநா போர்குற்றம் பற்றி ஏன் ஆராயவில்லை என்பதா? மற்றவரை ஆராயச் சொல்லும் நீங்கள் அதனை ஏன் செய்யவில்லை என்று தான் கேட்டேன். ஊருக்கு உபதேசமா???மற்றப்படி நீங்கள் கிறுக்குவதைப் பற்றிக் கவலையில்லை. நீங்களாச்சு, ஆசிரியர் குழுவாச்சு.

kirrukan said...

[quote]கம்பன் விழா தமிழுணர்வையும் தமிழ் அறிவையும் ஏற்படுத்தியது என்பதுவே உண்மை.
தமிழ்ச்சுவை மாந்தியோர் அறிந்தது. அப்பக்கம் வராது போனோரால் அறிய முடியாதது[/quote]

அன்றைய கம்பன் கழக விழாவில் எனக்கு தமிழுணர்வு வரவில்லை இந்துமத உணர்வுதான் ஏற்பட்டது.ராமர் ,சீதை ,அனுமான் ஆகியோர் பூஜைக்கு ஏற்ற வகையில் அலங்கரிக்கப்படிருந்தனர்.மேலும் பிராமணர்களின் தரிசனம் ,அத்துடன் சிட்னிமுருகன் ஆலய பிரமுகர்களின் என்று அதிகமானோர் பிரசன்னமாகியிருந்தனர்.ஜெயராஜ் அவர்களின் பேச்சில் கூட ஆத்மீக வாசம்தான் வீசியது.தமிழுணர்வு வீசவில்லை.கம்பன் கழகம் தமிழை வளர்ப்பதைவிட இந்துமதத்தையும்,இந்திய மேலாண்மைகருத்துகளையும் வளர்கிறது என்பதுதான் உண்மை.

கலைரசிகன் தொடருவோம்
[quote]விழா இரசனை பற்றி ஒருவர் எழுதினால் ஐநா போர்குற்றம் பற்றி ஏன் ஆராயவில்லை என்பதா? மற்றவரை ஆராயச் சொல்லும் நீங்கள் அதனை ஏன் செய்யவில்லை என்று தான் கேட்டேன். ஊருக்கு உபதேசமா???[/quote]

விமர்சனம் எழுதினால் அதை வரவேற்கவேண்டிய அவசியமில்லைத்தானே..மற்றும் அவர்கள் தமிழ் வளர்க்கிறோம் என்று சொல்வதனால்தான் நான் ஜ.நா பற்றிய கதை சொல்ல வேண்டிய காரணம் ஏற்பட்டது.தமிழ் அது தன்னுடைய பாட்டில வளரும்.கம்பனை வளருங்கோ வேண்டாம் என்று சொல்லவில்லை ஆனால் கம்பனும் அவர்களினதும் வாரிசுகள்தான் தமிழ் வளர்க்கினம் என்று சொல்ல வேண்டாம்.

ஜ.நா விடயங்களை எழுதகூடிய தகுதியிருந்தால் இதில் இருந்து நான் கிறுக்க வேண்டிய அவசியமில்லை.

கழகத்தினரும்,கட்டுரையாளரும் ஊருக்கு உபதேசம் பண்ணும்பொழுது நாங்கள் பண்ணினால் தப்போ?ம்ம்ம்ம்

கலைரசிகன் said...

கிறுக்கன் சொல்வதை சற்று பார்ப்போம். தமிழ் வளர்வது என்றால் என்ன? அது தமிழின் தொடர்ச்சியில் இருக்கிறது. தமிழின் தொன்மையை மறுத்து தொடர்ச்சியை சிந்திக்கமுடியாது. தமிழ்ப் புலவர்களை புறம்தள்ளி தமிழ் வளரவோ தமிழை வளர்க்கவோ முடியாது. பேசியவர்கள் தமக்குத் தெரிந்ததை செய்தார்கள். விழா பார்த்தவர்கள் தாம் சுவைத்தவற்றைச் சொன்னார்கள். இதில் ஊருக்கு உபதேசம் எதுவும் இருக்கவில்லை. தமிழ் விழா பற்றி கருத்துச் சொல்கையில் ஏன் ஐநா பற்றிப் பேசவில்லை என்று கேட்பது தான் ஊருக்கு உபதேசம். எனக்குத் தெரியாது. நீ ஏன் செய்யவில்லை என்று கேட்கும் தகுதி கிருக்கனுக்கு எப்படி வந்தது. எனக்குத் தெரிய கிருக்கனை விட தமிழ் உணர்வு மிக்கவர்கள் மேடையில் இருந்தார்கள் என்பதே உண்மை. எதனையும் முழுமையாகப் பார்க்காமல்,படிக்காமல் கிறுக்குவதையே வாடிக்கையாகக் கொண்டவர் கிறுக்கன் என்பதை அவர் இடுகைகள் காட்டுகின்றன.
தானும் விழாவைப் பார்த்தேன் என்கிறார். தமிழ் உணர்வு வரவில்லை என்கிறார். எதனையும் எடுத்துச் செல்வதற்கு ஒழுங்கான பாத்திரம் இருக்கவேணும். அவரவர் வாங்கும் சக்தியைப் பொறுத்தது என்ன கொண்டுபோகிறோம் என்பது.
பாரதியும், வளவனும், இன்னொருவரும் என்னைப் போலவே தமது அனுபவத்தை எழுதினர். குறைகளை ஒருவர் சுட்டிக்காட்டினார். அதுவே விமர்சனம். அது கிறுக்கனிடம் இல்லை. இவரின் இடுக்கைகளுக்கு காழ்ப்புணர்வு காரணமாக இருக்கவேண்டும். அல்லது முன்னொருவர் சொன்ன வேறு ஒன்று காரணமாக இருக்கவேண்டும். அதுவும் இல்லையெனில் ஆணவம் மட்டுமே காரணமாக இருக்கவேண்டும்.

Varuni said...

இவ் விழாவையும், அதில் அடங்கிய எல்லா நிகழ்சிகளையும் அழகாக வர்ணித்து அருளிய ஆயிந்துரை அருமையாக இருக்கிறது. ஆசிரியர் எழுதிய விதத்தில் இருந்து நாம் நிகழ்ச்சி எவ்வாறு நடந்தது என்பதை மனதில் இலகுவாக படம் போட்டு பார்ககுடியதாக இருக்கிறது. நூல்களின் கருத்துகளை அழகாக எழுதியமையால் அதனை நானும் வாசிக்க வேண்டும் என தோன்றுகிறது, இது ஆசிரியரின் பத்திரிக்கையாக்கத்தின் திறமையை வெளிபடுத்துகின்றது

kirrukan said...

நன்றிகள் கலைரசிகன் தொடர்ந்து எழுதியமைக்கும் மற்றும் எனக்கு சில பட்டங்கள் தந்தமைக்கும்.
இங்கு கருத்து எழுதிய அனைவரும் கட்டுரையை நல்லது என்றுதான் சொல்லியிருந்தார்கள்.குறைகளை ஒருத்தரும் கூறவில்லையே நான் எழுதியது செல்லுபடியாகாது பெரியவர் நீங்கள் தீர்ப்பு கூறிவிட்டீர்கள்.
ஜ.நா. பற்றி சொல்வதற்கு என்ன தகுதி இருக்கு என வினாவியுள்ளீர்கள் தகுதியில்ல ஆகவே அதை வாபஸ் வாங்குகிறேன்.

சிலருக்கு பொதுகருத்து எதுவோ அதனுடன் ஒத்துபோகவேணும் என்ற கருத்து இருக்ககூடும் அதுவும் ஒருவித .....நோயாக இருக்கலாம்.
சில கருத்தாளர்கள் சக கிறுக்கர்களை முட்டாள்,மனநோயாளன்,காழ்ப்புணர்ச்சிகாரன்,ஆணவக்காரன் என பட்டம் சுட்டி தொடர்ந்து கிறுக்குவதை தடை செய்ய முயற்சி செய்யலாம். இவர்களுக்கு என்ன தகுதியிருக்கு நான் எழுதிய ஆக்கத்திற்கோ,கருத்துக்கோ கருத்து எழுத என்ற ஆணவமாக இருக்கலாம் ,அதிகாரமாக கூட இருக்கலாம்.

உங்களுக்கு நான் கிறுக்குவது பிழையாக பட்டால் அதற்குறிய சரியான காரணத்தை மட்டும் வையுங்கோ,அதைவிட்டு பட்டம் கொடுக்கும் வேலை செய்யாதீர்கள்.காரணம் நீங்கள் பட்டம் கொடுக்க திருப்பி நான் உங்களுக்கு தர அது அழகல்ல ,எனக்கல்ல நான் கிறுக்கும் தமிமுரசுக்குத்தான் .


மீண்டும் அடுத்தவாரம் முழுமையாக வாசிக்காமல் கிறுக்குவதற்கு நான் தயார் ,வாசிக்காமல் கிறுக்குவதே எனது தகுதி.

Unknown said...

அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தை இம்முறை நான் பின்மேடையில் இருந்து பார்த்தேன். சிறப்பாக ஜெயராஜ்ஜியம் என்ற நூல் வெளியீட்டு நடந்து, பின்னர் ஆவலுடன் எதிர்பார்த்த பட்டிமன்றம் என்னை வியக்கவைத்தது. 11 மணி வரைக்கும் கணமான சபை இருந்தது.
அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்திற்கு எனது பாராட்டுக்கள்.

Unknown said...

இவ்வருடம் சிட்னியில் நடைபெற்ற கம்பன் விழாவை நான் சென்று பார்த்தேன். அங்கு பல திறமை மிக்க பேச்சாளர்களின் உரையை கேட்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நடந்த பட்டிமண்டபம் மிகவும் விறு விறுப்பாக நடைபெற்றது. நான் நேரடியாக சென்று பார்த்த முதல் பட்டிமண்டபம் இது தான்.
கம்பன் கழகத்தின் புகழ் ஓங்கட்டும்!

கலைரசிகன் said...

கிருக்கன்! நீங்கள் சொல்வது வியப்பாக இருக்கிறது. ஆரம்பம் முதலே மற்றவர்க்குப் பட்டம் கொடுத்தது நீங்கள் தான். உங்கள் வாதத்தை நான் விமர்ச்சித்தேன். அவ்வளவே! அப்படி எதிர்வாதம் புரியும் போது உங்கள் இடுக்கைக்கான காரணம் என்னவாக இருக்க முடியும் என நான் அனுமானித்தேன். அது காழ்ப்புணர்வா? ஆணவமா? என நான் அடுக்க நேர்ந்தது அப்போதுதான். அது உங்களை இவ்வளவு தூரம் வருத்துகிறது என்று அறியும் போது எனக்குக் கவலையாக இருக்கிறது.
அதற்காக நீங்கள் பதிலுக்கு பட்டம் தருவீர்களோ என்று நான் பயப்படவில்லை. கம்பவாரிதி முதல் பாபா வரை யாரையும் விட்டுவைக்கவில்லை. அது உங்கள் இயல்பானால் யார் என்ன செய்ய முடியும்.
வேறு ஒரு பதிவுக்கான இடுகையில் மீண்டும் தேவைப்படின் சந்திப்போம்.