பேராசிரியர் மருது கந்தப்புவின் நூல் வெளியீட்டு விழா

பேராசிரியர் மருது கந்தப்புவின் "மூளை நரம்பியல் சிகிச்சை' நூல் வெளியீட்டு விழாவில் கேட்டவைநோய்த்தடுப்பு வைத்திய முறைமைக்குப் புதியதோர் சிகிச்சை முறையை ஆராய்ச்சிகள் மூலம் கண்டடைந்து உலகுக்களித்திருக்கும்வைத்திய கலாநிதிபேராசிரியர் மருது கந்தப்புவின் "மூளை நரம்பியல் சிகிச்சை' என்ற மருத்துவம் சார் நூலின் வெளியீட்டு விழா 12.02.2011 ஆம் திகதி கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் பெருந்திரளான மக்கள் மத்தியில் நடைபெற்றது.

ரஜனி சந்திரலிங்கம் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடினார். பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த நூலாசிரியரின் பேராசான் வைத்திய கலாநிதி பேராசிரியர் ஸ்ரீகாந்தா அருணாசலம் மங்கள சுடரேற்றி விழாவைத் தொடக்கி வைத்தார்.

தலைமையுரை: மு.கதிர்காமநாதன்
(தலைவர், கொழும்பு தமிழ்ச் சங்கம்)

மனித மூளையின் மகத்துவத்தை நன்கறிந்தவர்கள், இங்கு வந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கின்றது. "மூளை நரம்பியல் சிகிச்சை' என்ற இங்கு வெளியிடப்படவிருக்கும் நூல் தமிழ் இனத்துக்குக் கிடைத்த பெரும் பொக்கிஷம். பிரபலமான நாவலைப் போல், வாசித்தால் வைக்க முடியாத தன்மை இந்நூலுக்குண்டு. எமக்கேற்படும் நோய்களுக்கு நாமே காரணமாவோம். நோய்களை எப்படிக் குணமாக்கலாம் என்பதை இலகு தமிழில் தருகின்றது.

இந்த ஆராய்ச்சி முறையை ஒரு புரட்சியென்றே சொல்லி விடலாம். சொல்லப் போனால் இந் நூலைப் படிக்க யோகம் வேண்டும். நோய்களைப் பற்றி அறிய, அரிய வாய்ப்பை ஏற்படுத்துகின்றது. புதிய தமிழ்ச் சொற்கள் காணப்படுகின்றன. கழிப்பறையில் காணப்படும் கொமட்டை "வேமேந்தும் இருக்கை' எனத் தமிழ்ப்படுத்தப்பட்டுள்ளது. மருது கந்தப்பு இச் சிகிச்சை முறையைக் கண்டு பிடிப்பதற்கு எத்தனித்த கதை மிகவும் ருசிகரமானது. இவருக்கேற்பட்ட நோய்க்கு அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டியேற்பட்டது. அதற்கு அவர் இணங்கிப் போகாது, தான் கண்டடைய வேண்டிய சிகிச்சை முறையைத் தன்னிலே பரிசோதித்தும் பார்த்து வெற்றியும் கண்டார். அதை அனைத்து மக்களும் அறிந்து செயல்படுத்த வேண்டுமென்ற நோக்கோடு ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதி நூலாக்கி வெளியிட்டிருக்கிறார். அதன் விளைச்சலே இந் நூலும். மக்கள் நலன் சார்ந்த இப்பணி தொடர வேண்டும்.

"மூளை நரம்பியல் சிகிச்சை' நூலின் முதலாவது பிரதியை வைத்திய கலாநிதி பேராசிரியர் ஸ்ரீகாந்தா அருணாசலம், ஸ்ரீபதி சிவநடியானுக்கு வழங்கினார்.

சிறப்புப் பிரதிகளை அரசியலாளர், வைத்திய கலாநிதி ஜயலத் ஜயவர்தன உட்பட அரசியல், பொதுப்பணி, சமயம், இலக்கியம், வர்த்தகம் சார் பிரமுகர்களுக்கு நூலாசிரியர் மருது கந்தப்பு வழங்கினார்.

கௌரவிப்பு நிகழ்வில் வைத்திய கலாநிதி, பேராசிரியர் ஸ்ரீகாந்தா அருணாசலத்துக்கு நூலாசிரியர் பேராசிரியர் மருது கந்தப்பு பொன்னாடை போர்த்தி விருது வழங்கினார். நெடுந்தீவு மக்கள் அபிவிருத்திச் சபை சார்பிலும் கொழும்பு றோயல் கல்லூரி தமிழ்ப் பிரிவு மாணவர்களாலும் பேராசிரியர் மருது கந்தப்புவுக்கு பொன்னாடை போர்த்தப்பட்டது.

ஆய்வுரை: எம்.கணபதிப்பிள்ளை
(கொழும்பு றோயல் கல்லூரி பிரதி அதிபர்)

"மூளை நரம்பியல் சிகிச்சை' நூல் வெளிவருவதுக்கு நூலாசிரியருக்குக் கருமமே கட்டளையாக இருந்துள்ளது. 196 பக்கங்களையுடைய இந்நூலின் 50 அத்தியாயங்களில் பொருள் சொல்லப்பட்டுள்ளது. "சித்தம்' என்ற சொல்லுக்கு பல்வேறு அர்த்தங்கள் தமிழிலுண்டு. அலைகளிலொன்றே மூளை சித்த ஆயுர்வேத வைத்திய முறை மனித மூளையை அடிப்படையாகக் கொண்டது. நமக்கான கலாசார வாழ்முறையை மதிக்காததே எமது துன்பங்களுக்குக் காரணம். சித்த ஆயுர் வேதம் மலட்டுத் தன்மை அடைந்து விட்டது. தான், தன் பிள்ளை என்ற ஒடுக்கு முறைக்குள்ளேயே அதை வைத்திருந்தோம் மேற்கத்திய நாட்டு மருத்துவம் கண்டறியாத வைத்திய முறை சித்த வைத்தியத்துக்குள்ளிருந்தது. நாம் அதைத் தேடாது விட்டு விட்டோம். பாக்தாத்தைத் தாக்கியது எதுக்காக? என நோக்கும் போது, இஸ்லாமிய நாகரீகத்தை அழிப்பதற்கே என்பது விளங்கும்.

அறிவியலை அழித்தொழிக்கவே அமெரிக்கர் முதலில் பாக்தாத்தின் நூலகத்தை அழித்தனர். அதுவே இங்கு யாழ்ப்பாணத்திலும் நடந்தது. நூலகத்தைத் தான் அழித்தனர். உன்னதமான மருத்துவ முறைமை தமிழரிடமிருந்தது. சிறந்த வைத்திய சிகிச்சையை வழங்குமிடமாக அக் காலத்தில் நாயன்மார் கட்டு இருந்துள்ளது. அலைகளை மீளவும் ஞாபகத்துக்குக் கொண்டு வரும் நோக்கோடு தான் மருது கந்தப்பு இந்நூலை வெளியிட்டிருக்கிறார். படிப்பதற்கான ஆர்வம் எழுத்து நடையிலுண்டு. புளகாங்கிதம், இறும்பூதெய்தல் போன்ற எம்மால் மறக்கப்பட்ட சொற்களை நூலில் காண முடிகின்றது. நடை சகல மட்டத்துக்கும் செல்லக்கூடியதான பொது நடை. பேட்டியொன்றில் நூலாசிரியர் "பணம் பண்ண வெளியிடவில்லை. மக்களைச் சென்றடைய வேண்டும்' என்ற நோக்கத்தோடேயே வெளியிடப்பட்டதெனச் சொல்லியுள்ளார். தமிழரை நோக்காக வைத்தே இன்றைய பெரும்பாலான வைத்தியசாலைகள் நடத்தப்படுகின்றன. இதற்குத் தொடர்பாடல் மொழியும் கைகொடுக்காதது முக்கிய காரணமாகும். இதனால் தான் அரச மருத்துவமனைகளை நாடாது தமிழர் தனியார் மருத்துவமனைகளை நாடுவது.

இந்நூல் தமிழருக்கு வரப்பிரசாதமாகக் கிடைத்திருக்கின்றது. ஆத்மசக்தியை உற்பத்தி செய்யச் சொல்கிறார். நூலில் காணப்படும் மருத்துவத் துளிகள் சிறப்பானவை. கணினியில் காணப்படும் MOக்குஉ ஆக மனித மனதைக் காண்கிறார். மனம் மூளையின் கண் நாடொன்றின் பொருத்தமானதலைவன் போல் எமது உடலிலுள்ள மூளை இயங்கிக் கொண்டிருக்கின்றது. இச் சிகிச்சை வழியை ஓர் ஆங்கிலேயர் கண்டு பிடித்து வெளிப்படுத்தியிருந்தால் அனைத்து உலகும் புகழ்ந்திருக்கும். இந் நூலாசிரியரின் ஆங்கில நூல் நிச்சயமாக வெளிநாட்டவருக்கு மொடலாக இருக்கப் போகின்றது. தனித்துவமான உத்தியில் விடயம் சொல்லப்பட்டுள்ளது. கூடாத பழக்கங்களும் நோய்களுக்குக் காரணமாகின்றன மதுபானத்தை சிப் பண்ணுவதாகச் சொல்லிச் சொட்டுச் சொட்டாகக் குடிப்பவர்களைத் தான் அதிகமாகக் காண்கிறோம். ஆனால், அது தவறென்கிறார் நூலாசிரியர். தியானம், யோகாசனம் நோயைத் தடுக்கக் கூடியது. திருவள்ளுவரின் பொய்யா மொழிக்கமைவாக, தன்னைத் தான் காதலிக்க வேண்டுமென்பதே இந்நூலாசிரியரின் எதிர்பார்ப்பு. 7 வயதுக்கு மேலான எந்தப் பிள்ளைக்கும் இச்சிகிச்சை முறையைக் கற்பிக்கலாம். மூளையின் எஜமானன் நரம்பு முடிச்சு. எமது உடம்புக்குள் எல்லாமே இருக்கின்றது என்பதே பேராசிரியர் மருது கந்தப்புவின் கருத்தாகும். அறிவு எல்லாருக்குமே பொதுவானது. மறக்கப்பட்ட உண்மைகளை நூலில் திருப்பித் தந்துள்ளார்.

பிரதம விருந்தினர் உரை:
வைத்திய கலாநிதி பேராசிரியர்
ஸ்ரீகாந்தா அருணாசலம்

சகல நோய்களுக்கும் வில்லைகளை விழுங்கும் வழிமுறைகளே தற்போது கையாளப்படுகின்றன. இதனால் ஏற்படும் விளைவுகளை நோக்கும் போது ஏக்கம் ஏற்படுகின்றது. இத்தருணத்தில் தன் நோயை அறிந்து, தானே வைத்தியராக இருந்து தனது நோயைக் குணப்படுத்துவதுக்கு மூளை நரம்பியல் சிகிச்சையைக் கண்டறிந்த பேராசிரியர் மருது கந்தப்புவைப் பாராட்டுகிறேன். உலகில் பல சக்திகள் உண்டு. மின்சக்தி வெளிச்சத்தைத் தருகிறது. சூரிய வெப்பத்தால் பல அரிய சாதனைகள் கிடைக்கின்றன. அணுசக்தியும் பல்வேறு வழிகளில் பயன்படுத்தப்படுகின்றது. இவையாவும் பௌதீக சக்திகள். இவைகளுக்கும் மேலாகப் பரம சக்தியும் உண்டு. உயிருக்கும் உயிரான குக்கஉகீ உNஉகீஎஙு யை மருது கந்தப்பு உணர்ந்தார். மனதைக் கட்டுப்படுத்தி இறுகச் செய்யலாம். இந்த நூலில் காணப்படும் வழிகளைப் பின் பற்றுவதன் மூலமாக தூரத்திலிருக்கும் நோயாளிகளைக் கூட நோயை அறிந்து மாற்றக் கூடிய ஆற்றல் இந்நூலுக்குண்டு. இன்னும் இதைவிட விரிவான நூலொன்றை மருது கந்தப்புத் தர வேண்டும்.


வாழ்த்துரைகள்
வைத்திய கலாநிதி இந்திரபாலா
(கொழும்பு, சேர்.அன்ரன் ஜயஆரியா
ஞாபகார்த்த வைத்தியசாலை ஆலோசகர்)

இந்நூலின் ஆங்கிலப் பதிப்பு வெளியிட்ட போது மருது கந்தப்புவைச் சந்தித்தேன். முதன் முதலில் மூளை நரம்பியல் விடயத்தில் தமிழ் நூலை வெளியிட்ட பெருமைக்குரியவர் மருது கந்தப்பு. எழுபது வைத்திய சிகிச்சை முறைகள் உண்டு. இருந்தும் ஏன் இப்படியொரு மாற்று வைத்திய சிகிச்சை முறை? என்ற கேள்வி எழுகின்றது. சித்த ஆயுர்வேத வைத்திய முறைமை 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இப்போது மறுமலர்ச்சி பெறுகின்றது. பரப்பி வருகின்றோம். மருது கந்தப்பு கண்டுபிடித்த மருத்துவ முறை ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதை மேலும் ஊக்குவிப்போம். வைத்திய முறைகளும் மனிதரால் தான் கண்டறியப்பட்டவை. பிற்கால வைத்தியர்கள் எல்லா வைத்திய முறைகளையும் கண்டறிந்திருக்க வேண்டும். மருத்துவ சமத்துவத்தை ஏற்படுத்த வேண்டும். சித்த மருத்துவம்படித்த மருது கந்தப்புவின் முயற்சிக்குப் பாராட்டு.


வைத்திய கலாநிதி உதுமா லெப்பை

தமிழ் இனிமையானது. அரியதொரு தமிழ் வைத்திய நூலை மருதது கந்தப்பு தந்துள்ளார். நட்பு நெருக்கமானது நூல்களை மாதா, பிதா, குரு, தெய்வத்துக்குச் சமர்ப்பிப்பது தமிழ் மரபு. சமர்ப்பணங்கள் பலவிதமானவை. தற்போது வைத்தியத்துறையில் இல்லாததொன்றை நண்பர் மருது கந்தப்பு தனது ஊக்கத்தால் கண்டுபிடித்துத் தந்துள்ளார். இது அற்புதமானதொரு வைத்தியமுறை. உடலிலுள்ள உறுப்புகளைச் சரியாகத் தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் உரிய உறுப்புக்கு மருந்தை அனுப்பலாம். இது புதுவிதமான வைத்தியமுறை, யோகாசனமல்ல. இதற்கு மனோ பலம் இருக்க வேண்டியது அவசியமாகும்.


இக் கண்டுபிடிப்பு கின்னஸ் புத்தகத்தில் பதிவைப் பெற ஆவன செய்ய வேண்டும். இது பரம்பலானால் வைத்தியர்களுக்கு தொழில் இல்லாது போகும் எனவும் சிலர் ஏக்கமடையக் கூடும்! நரம்புத் தொகுதி மூலமாக நோயைக் குணப்படுத்த ஒரு றிமோட் கொன்ரோலைக் கண்டு பிடிக்க இயலாதா? என்ற கேள்வியும் எழுகின்றது. தன்னைச் சோதனைக் களமாக்கியே இதைக் கண்டு பிடித்திருக்கிறார். நிறைவானதொரு புத்தகத்தை எமக்குத் தந்துள்ளார். உடல் உறுப்புகள், இயக்கம் பற்றிய அறிவு தேவை. மனதை அடக்குவது இலகுவானதல்ல. நீங்களே உங்களுக்கு வைத்தியராகலாம். புற்றுநோய்க்கும் இந்நூலில் வைத்தியம் சொல்லப்படுகிறது. விடயங்கள் மிகத் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. கற்கும் காலத்தில் மருது மிகவும் துடிப்பான மாணவனாக இருந்தார். சமூக சிந்தனையாளன். "ஒரே இரத்தம்' என்ற நாடகத்தை எழுதி அரங்கேற்றியவர். மனிதருக்கு ஏற்படும் நோய்களைச் செலவில்லாது குணப்படுத்த மாற்றுச் சிகிச்சையைக் கண்டு பிடித்து தனது சமூக நேசிப்பைக் காட்டியுள்ளார்.

ஜின்னாஹ் ஷெரிப்புத்தீன்


இங்கு கூடியிருப்போர் எல்லோரும் 40 ஐக் கடந்தவர்கள். மருந்துப் பையைக் கையில் வைத்திருப்போர். உணவுப் பழக்க வழக்கமே நோய்க்குக் காரணமாகிறது. உணவு பாதி மருந்து பாதி என்ற நிலையில் உள்ளோம். மாற்றுச் சிந்தனைகளில் நாட்டம் கொள்ள வேண்டியதாயுள்ளது. முற்றிலும் மாறுபட்ட இதுவரை சொல்லப்படாத முறையை மருது கந்தப்புக் கண்டுபிடித்துள்ளார். உள்ளத்தோடு ஒன்றிய முறை. ஆத்மீகத்தோடு சம்பந்தப்பட்டோருக்கு ஏற்றதாகவுள்ளது. உணர்வுகளை ஒரு நிலைப்படுத்தி இச்சிகிச்சையைச் சொல்ல வேண்டும். தெய்வ ஸ்தலங்களுக்குச் சென்று மனதை ஒருநிலைப்படுத்துகிறோம். இந்த விடயத்தில் பூரணத் தெளிவு இருக்க வேண்டும். நிறையவே படங்களைக் கொண்டிருப்பது நூலின் பெருஞ் சிறப்பாக இருக்கின்றது. பல தகவல்களைத் தருகின்றது. இது நோய்களைத் தீர்ப்பதற்கு உதவும். ஒரு பக்கத்துக்கு மருந்து மாத்திரைகளை ஒதுக்க உதவும். இச்சிகிச்சை முறை,மருதுவின் கட்சி அல்ல. அடிக்கடி சண்டையிடுவோம். நாடகங்களைப் போட்டியாக அரங்கேற்றினோம்.


எமது நாடகம் சரஸ்வதி மண்டபத்தில் மேடையேற்றப்பட்டது. நான் தான் கதாநாயகன். இந்நூல் எம்மை இன்று ஒன்று சேர்த்திருக்கிறது. நான் இலக்கியத்துக்குள் வந்தேன். மருது கந்தப்பு இப்போ தனது எழுத்தாற்றலைக் காட்டுகிறார். நான் மருத்துவநூல் படைக்கவில்லை. எனவே, இது எனக்கொரு சவாலாக இருக்கின்றது. முயற்சிக்கலாமென நினைக்கிறேன். நண்பர் மருது கந்தப்பு இன்னும் பல நூல்களை வெளியிட வேண்டும்.


அறிவிப்பாளர் ராஜ்மோகன் (சக்தி வானொலி)

வாசகரை மருத்துவராக மாற்றக்கூடியது இந்நூல். ஆச்சிகள் தான் தமிழ்நாட்டில் மருத்துவம் பார்ப்பார்கள். ஒன்பது பிள்ளைகளுக்கு எனது பாட்டி மருத்துவம் பார்த்திருக்கிறார். தனக்குத் தானே பிரசவமும் பார்த்திருக்கிறார். இந்நூலில் சொல்லப்பட்டிருக்கும் வைத்தியமுறை வெளிநாட்டில் இல்லை. தமிழர்கள் தொலைத்துவிட்ட மருத்துவமுறை நூலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த நூல் பிரசவத்துக்கான முன்னோட்டத்தையும் இந்நூலில் காண முடிகின்றது.


ஏற்புரை: வைத்திய கலாநிதி பேராசிரியர் :
மருது கந்தப்புநோய்க்கு மருந்து உண்ணும் கலாசாரம் இன்று தேவையற்ற பாதையில் சென்று கொண்டிருக்கின்றது. நோயொன்றுக்கு 6 அல்லது 7 மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. இதில் இரண்டே நோய்க்கு வேலை செய்யும். இதன் ஆபத்துகளையும் பக்க விளைவுகளையும் மருந்துத் தயாரிப்பாளர்கள் அறிவர். நூலில் கூறப்பட்டிருக்கும் சிகிச்சை முறையை 1985 ஆம் ஆண்டு எனக்கு நானே செய்து பார்த்தேன். இதையொரு பாடமாக்கிக் கல்லூரிகளில் படிப்பிக்க வேண்டும். முயற்சி செய்தும் பார்த்தேன். முடியாது போய்விட்டது. எனவே தான் புத்தகமாக்க முயற்சித்தேன். ஆண்,பெண்ணின் ஒரு துளி (ஈOகூ) முறையை உருவாக்கும். அது வளர்ந்து வளர்ந்து முள்ளந்தண்டை உருவாக்கும். உடம்புக்குள் இருப்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். நீரிழிவு (ஈஐஅகஅகூஉஉகு) எப்படி வந்தது? நாம் செய்யும் துஷ்பிரயோகங்களால் தான் ஏற்பட்டது. சாப்பாட்டில் ஒழுக்கம் தேவை. சாப்பாட்டால் உணவுக் குழாய் பாதிக்கப்படும். வீக்கமடையும். இருதயத்தை அழுத்தும். ஏப்பம், கை,கால் உளைவு ஏற்படும்.மக்கள் இதைக் கவனிக்க வேண்டும். சமாந்தரமாகப் படுக்க வேண்டும். கண்களை மூடிக்கொள்ள வேண்டும். உறுப்புகளை குஇஅN பண்ண வேண்டும். அவைகளை நெகிழ்த்த வேண்டும். இருதயத்தை மூளையோடு தொடர்புபடுத்த வேண்டும். படிப்படியாக குளிசையைக் குறைக்க வேண்டும்.


இவைகளை நீரிழிவு நோயாளிகள் செய்ய வேண்டும். மருந்துகள் அதிகரித்துப் போச்சு. மருந்துகளாலும் நோய்கள் ஏற்படுகின்றன. நூலில் கூறப்பட்டிருக்கும் சிகிச்சை முறைகளைக் குழந்தைகளுக்கும் செய்யலாம். தனியொருத்தனாக இருந்தே இதைச்செய்து வருகிறேன். இச்சிகிச்சை முறை சகல மனிதரையும் சென்றடைய வேண்டு. இவைகளைப் பயிற்சி செய்து பார்க்க வேண்டும். நூலில் காணப்படும் படங்கள் மிகவும் முக்கியமானவை. தகவல்கள் உலக மக்களுக்கும் பரப்பப்பட வேண்டும். லண்டனில் இளவரசர் சாள்ஸ் இச்சிகிச்சை முறையைக் கற்பிப்பதற்கான பாடசாலையொன்றைத் தொடக்கியுள்ளார். இந்நூலை அக்கல்லூரிக்கு அனுப்ப வேண்டும். ஒரு விரிவான அறிவைப் பெறுவதற்குப் பாடசாலை தான் சரியான இடம். இந்த அறிவைப் பிள்ளைகளும் பெற வேண்டும்.

நன்றியுரையை ஆர்.எஸ்.நடராஜா நிகழ்த்தினார். றொமேஸ் கோமகன் நிகழ்வுகளை ஒன்றிணைந்து அறிவுப்புகளைச் செய்தார்

Nanri: thinakural

No comments: