.
கட்டுரை – 5 மஷூக் ரஹ்மான்
இதமாக பேசுவது, பிறர் பேச்சை கவனிப்பது இரண்டும் எவ்வளவு முக்கியமோ அதேபோல் கண்ணியத்துடன் பேசுவதும் மிக மிக அவசியம்.
பேச்சைப் பற்றி இத்தனை பார்வைகளா?! என்று நினைக்கிறீர்களா?! ஆம்! அப்படி சிந்திக்க வேண்டியது அவசியமே!
நாம் பேசும் வார்த்தை எத்தனை முக்கியமானது! எத்தனை சக்தி வாய்ந்தது! நாம் அறிவோம்தான் ஆனால் அதை எப்படி ஆள்கிறோம் என்பது அதைவிட முக்கியமானது. பொதுவாக இரண்டு முகமோ அல்லது அதற்கு மேற்பட்ட முகங்களோ நம் அனைவருக்கும் உண்டு. அதுஇ நாம் கொள்ளும் உறவுக்கு தகுந்தாற்போல் வெளிப்படும். அந்த மற்றுமொரு முகத்தை வெளிச்சமிட்டுக் காட்டுவது நம் வார்த்தைகள்தான்.
வாங்க! என்னங்க! என்று துவங்கும் உறவுகள்…நாளடைவில் வாடா…என்னடா… என்று மாறுகிறது…இது உறவின் நெருக்கத்தையோ தூரத்தையோ குறிக்கிறது. சில வேளைகளில் கண்ணியத்தின் அளவையும் காட்டுகிறது.
ஏன் இந்த மாற்றம்?!
மேற்சொன்னபடி இந்த மாற்றம் உறவின் நெருக்கத்தைக் குறிக்கின்ற பட்சத்தில் இரு தரப்பினருக்கும் பெறும் கருத்துவேறுபாடுகள் ஏற்படுவதில்லை. ஆனால் வார்த்தையில் நாம் காட்டும் நெருக்கம் மறுதரப்பில் இருப்பவர்களால் ஒப்புக் கொள்ளப் படுகிறதா என்பதை கவனிப்பது மிக முக்கியம். ஏனென்றால்இ பிறர் அந்த நெருக்கத்தை விரும்பாத பட்சத்தில் அதுவரை உள்ள நெருக்கமும் நம் மேல் உள்ள மதிப்பும் குறைந்துவிடும்.
உதாரணம்:
நம் நண்பர் தன்னுடன் பணிபுரியும் ஒருவரை நமக்கு அறிமுகப் படுத்தும்போது மரியாதையுடன் நாம் அவர்களை அணுகுவது நல்லது. அந்த புதிய நபர் திடீரென நாம் காட்டும் நெருக்த்தை, அணுகுமுறையை விரும்பாதவராக இருக்கலாம். பிறரின் சுயமரியாதையைச் சீண்டும் விதமாக நம் வார்த்தைகள் அமையாமல் இருப்பது நல்லது.
அதேபோல நம்முடன் நெடுநாளாக பழகியவர்களிடமும் நாம் நாளடைவில் கண்ணியக் குறைவாக பேசுகிறோம் என்பதை உணராமலேயே பேசுகிறோம்.
என்னம்மா செல்லம்! என்று அழைக்கப் படும் மனைவி… சம்பாதிக்கும்வரை மரியாதைக்குரிய தாய், தந்தை, கணவன், வளர வளர மரியாதையும் அன்பும் குறையும் பிள்ளைகள் இப்படி ஏதோ ஒருவகையில் காயப்படுத்துபவராகவோ காயப் படுபவராகவோ நாம் ஆகிறோம். இந்த வட்டத்தில் சிக்காமல் இருக்க பார்ப்போம்.
முடிவாக… இங்கு தரப்பட்டிருப்பது ஒரு பொறியே! சிந்திக்க தெரிந்த நாம் நன்கு சிந்தித்துச் செயல்படுவதும் பேசுவதும் மிக மிக மிக முக்கியம்
No comments:
Post a Comment