உலகக் கிண்ண கிரிக்கட் போட்டி

.
அவுஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி
தென்னாபிரிக்க அணி 7 விக்கெட்டுகளால் அபார வெற்றி
பொண்டிங் தொலைக்காட்சிப்பெட்டியை உடைத்துள்ளார்
69 ஓட்டங்களில் சுருண்டது கென்யா பத்து விக்கெட்டால் நியூஸிலாந்து வெற்றி

இலங்கை 210 ஓட்டங்களால் வரலாற்று பூர்வமான வெற்றி

கனடாவுக்கு எதிராக ஹம்பாந்தோட்டை சூரியவௌ மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டரங்கில்  நடைபெற்ற ஏ குழுவுக்கான பகல் இரவு உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில் சகல துறைகளிலும் பிரகாசித்த இலங்கை அணி 210 ஓட்டங்களால் வரலாற்று பூர்வமான வெற்றியை பெற்றது.
இலங்கை அணி கனடா அணியை 210 ஓட்டங்களால் வெற்றிக் கொண்டமை உலகக் கிண்ண வரலாற்றில் ஒரு அணிக்கு எதிராக அதிகூடுதல் ஓட்ட எண்ணிக்கையில் வெற்றிபெறும் 7ஆவது வரலாற்று வெற்றியாக இன்று பதிவு செய்யப்பட்டது.

மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்த போட்டியானது இந்த மைதானத்தில் விளையாடப்பட்ட முதலாவது சர்வதேச போட்டியாகும்.

இப் போட்டியில்; முதலில் துடுப்பெடுத்ததாட தீர்மானித்த இலங்கை அணி, 50 ஓவர்களில் 7 விக்கட்களை இழந்து 332 ஓட்டங்களைக் குவித்தது.

81 பந்துவீச்சுக்களை எதிர்கொண்டு ஒரு சிக்சர், 9 பவுண்டறிகள் அடங்கலாக சரியாக 100 ஓட்டங்களைப் பெற்ற மஹேல ஜயவர்தன உலகக் கிண்ண கிரிக்கட் வரலாற்றில் இலங்கை வீரர்களில் அதிவேக சதம் குவித்த வீரரானார்.

333 ஓட்டங்கள் என்ற மிகவும் கடினமான இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கனடா அணியினர் இலங்கையின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 36.5 ஓவர்களில் சகல விக்கட்களையும் இழந்து 122 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது.

69 ஓட்டங்களில் சுருண்டது கென்யா பத்து விக்கெட்டால் நியூஸிலாந்து வெற்றிசென்னையில்  நடைபெற்ற உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் கென்யாவை 69 ஓட்டங்களில் சுருட்டி நியூஸிலாந்து வெறும் 8 ஓவர்களில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


மிர்புரில் முதல் போட்டி நடந்தது. இந்தியா, பங்களாதேஷ் அணிகள் மோதின. இதில் இந்தியா 87 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

2 ஆவது ஆட்டம் சென்னையில் நடந்தது. நியூஸிலாந்து கென்யா அணிகள் மோதின.

கென்ய அணி 23.5 ஓவரில் 69 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது.

பின்னர் 70 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலகுவான இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணி தொடக்க வீரர்களாக குப்திலும் மெக்குலகும் களமிறங்கினர். இருவரும் சிறப்பாக விளையாடி ஓட்டமெடுத்தனர். 8 ஓவர் முடிந்த நிலையில் நியூஸிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 72 ஓட்டம் எடுத்து வெற்றி பெற்றது.


கென்யா எடுத்த இந்த 66 ஓட்டம் தான் உலகக் கிண்ணப் போட்டிகளிலேயே எடுக்கப்பட்ட மிகக் குறைவான ஓட்டங்களாகும்.


பொண்டிங் தொலைக்காட்சிப்பெட்டியை உடைத்துள்ளார்
 


சிம்பாப்வே அணிக்கெதிராக நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ரன் அவுட்டானதால் ஆத்திரமடைந்த அவுஸ்திரேலிய கப்டன் ரிக்கி பொண்டிங் ஓய்வறைக்கு திரும்பியவுடன் அங்கிருந்த எல்.சி.டி. தொலைக்காட்சி பெட்டியை உடைத்துள்ளார்.


இதனை குஜராத் கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.அகமதாபாத்தில்  நடைபெற்ற உலகக்கிண்ணப்போட்டியின் போது மைக்கேல் கிளார்க் டீப் மிட்விக்கெட் திசையில் அடித்து விட்டு இரண்டாவது ஓட்டத்துக்கு ஓடி வர பந்தை மபோபூ அதனை நேராக விக்கெட்டில் எறிந்தார்.

இதனால் ரன் அவுட்டானார் பொண்டிங்.இதனால் கடும் ஆத்திரமடைந்த பொண்டிங் ஓய்வறைக்கு திரும்பியவுடன் அங்கிருந்த எல்.சி.டி. தொலைக்காட்சிப்பெட்டியை உடைத்துள்ளார்.

இது குறித்து குஜராத் கிரிக்கெட் சங்கம் செய்த புகாரை, இந்திய கிரிக்கெட் சபை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ. சி. சி) அனுப்பி வைத்தது. இது பற்றி விசாரித்த ஐ. சி. சி. பொண்டிங்குக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. இருப்பினும் அபராதம் எதுவும் விதிக்கப்படவில்லை.


தென்னாபிரிக்க அணி 7 விக்கெட்டுகளால் அபார வெற்றி


ஏ.பி.டி வில்லியர்ஸ் ஆட்டமிழக்காமல் பெற்ற சதம் பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிரின் சிறப்பான பந்து வீச்சின் மூலம் தென்னாபிரிக்க அணி 7 விக்கெட்டால் அபார வெற்றியீட்டியது.

தென்னாபிரிக்க அணி 223 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி எனப் பதிலெடுத்தாடிய அவ்வணிக்கு தணித்தலைவர் கிரகம் ஸ்மித், அம்லா ஆகியோர் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கினர்.

இரண்டு பேரும் நிதானமாக ஆடிக் கொண்டிருந்போது அம்லா 14 ஓட்டங்களுக்கு ரோச்சின் பந்து வீச்சில் விக்கெட் காப்பாளர் தோமசிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.

பின்னர் அணித் தலைவர் ஸ்மித்துடன் ஜோடி சேர்ந்த கலிஸ் 4 ஓட்டங்கள் பெற்ற போது சுலைமன் பென்னின் பந்தில் அணித்தலைவர் டரன் சமியிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். அப்போது அணியின் ஓட்ட எண்ணிக்கை 20 ஆகும்.

பின்னர் அணித்தலைவர் ஸ்மித்துடன் ஜோடி சேர்ந்த ஏ.பி.டி. வில்லியர்ஸ் நிதாமனாகவும் அதிரடியாகவும் ஆடிக் கொண்டிருந்தபோது ஸ்மித் 45 ஓட்டங்களுக்கு பொலார்ட்டின் பந்தில் போல்ட் ஆனார்.

வில்லியர்சுடன் ஜோடி சேர்ந்த டுமினி ஆகியோர் சிறந்த முறையில் ஆடி வில்லியர்ஸ் 2 சிக்சர் உட்பட 8 பவுண்டரி அடங்கலாக 105 பந்துகளை எதிர்கொண்டு 107 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றார். மறுமுனையில் நின்ற டுமினி ஆட்டமிழக்கமால் 42 ஓட்டங்களையும் பெற்றார். இருவரும் இணைந்து 4வது விக்கெட் இணைப்பாட்டமாக 84 ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்து வீச்சைப் பொறுத்தவரை மே.தீவு அணி சார்பாக பென், ரோச், பொல்லார்ட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை பதம் பார்த்தனர்.

தென்னாபிரிக்க- மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று டில்லியில் ஆரம்பமானது. இதில் நாணயச் சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்க அணித் தலைவர் ஸ்மித் தனது அணி களத் தடுப்பில் ஈடுபடும் என்பதற்கு அமைவாக மேற்கிந்திய தீவு அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக கெய்ல், ஸ்மித் ஆகியோர் களமிறங்கினர்.

மேற்கிந்திய தீவு அணியின் கெய்ல் 2 ஓட்டங்கள் பெற்றபோது போத்தாவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்து சென்றார்.

பின்னர் ஸ்மித்துடன் ஜோடி சேர்ந்த டி.எம். பிரவோ 2வது விக்கெட்டுக்காக 111 ஓட்டங்களைப் பகிர்ந்து கொண்டபோது, 73 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றார். அவர் ஒரு சிக்சர் உட்பட 8 பவுண்டரிகள் அடித்தார்.

பின்னர் ஸ்மித் 36 ஓட்டங்கள் பெற்றபோது தென்னாபிரிக்க அணியில் முதலாவது ஒருநாள் போட்டியில் வரம் பெற்ற இம்ரான் தாஹிர் தனது முதல் விக்கெட்டை வீழ்த்தி விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையிலும் இணைந்து கொண்டார். இதேவேளை மே. தீவு அணியின் ஓட்ட எண்ணிக்கை 117 ஆகும்.

பின்னர் சர்வான் 2 ஓட்டங்கள் பெற்றபோது தாஹிரின் பந்தில் ஆட்டமிழந்து சென்றார்.

பின்னர் டிகே. பிராவோவுடன் ஜோடி சேர்ந்த சந்தர்போல் ஜோடி. 5வது விக்கெட்டுக்காக 158 ஓட்டங்கள் பெற்று நிதானமாக ஆடிக்கொண்டு இருக்கையில் டி.கே. பிராவோ 40 ஓட்டங்களுக்கு ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

சந்தர்போலுடன் ஜோடி சேர்ந்த தோமஸ் சிறப்பான இணைப்பாட்டத்தை வழங்கினாலும் மே. தீவு அணியின் ஓட்ட எண்ணிக்கை 209 ஆக இருந்தபோது சந்தர்போல் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி உட்பட 31 ஓட்டங்கள் பெற்றபோது இம்ரான் தாஹிரின் பந்தில் பட்டர்சனிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.

மே. தீவின் விக்கெட்டுக்கள் குறைந்த ஓட்டங்களுக்கு சரியத் தொடங்கின. அணித் தலைவர் டரன் சமி, பொல்லார்ட் ஆகியோர் ஓட்டம் எதுவும் பெறாமல் ஆட்டமிழந்து சென்றனர்.

மே.தீவு அணியின் விக்கெட்டுக்கள் 213 ஓட்டங்கள் இருந்தபோது 3 விக்கெட்டுக்களை இழந்தனர்.

தோமஸ் 15 ஓட்டங்களுக்கும், லென் 6 ஓட்டங்களுக்கும் ரோஜ் ஆட்டமிழக்காமல் 2 ஓட்டங்களையும் பெற்றிருந்தார்.

பந்து வீச்சைப் பொறுத்தவரை தென்னாபிரிக்க அணி சார்பாக 15 ஓட்டங்கள் உதிரியாக வழங்கப்பட்டது. சர்வதேச முதல் ஒரு நாள் போட்டியில் வரம்பெற்ற இம்ரான் தாஹிர் 10 ஓவர் பந்து வீசி 41 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். போத்தா 2 விக்கெட்டையும், ஸ்டைன் 3 விக்கெட்டையும் பதம் பார்த்தனர்.அவுஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி
நியூசிலாந்து அணியுடனான போட்டியில் அவுஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளால் அபார வெற்றியீட்டியது.

அவுஸ்திரேலிய அணி 207 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி எனப் பதிலெடுத்தாடிய அவ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்டக்காரர்களாக வொட்சன், ஹடின் ஆகியோர் களமிறங்கினர்.

வொட்சன், ஹடின் ஜோடி சிறந்த துடுப்பாட்டத்தை வழங்கி நியூசிலாந்து அணியின் பந்துகளை பவுண்டரிகளாக விளாசித்தள்ளினார்கள்.

வொட்சன் 6 பவுண்டரி, ஒரு சிக்சர் உட்பட 61 பந்துகளை எதிர்கொண்டு 62 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது பெனட்டின் பந்தில் போல்ட் ஆனார்.

ஹடின் 55 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.  பென்டிங் 12 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றார். இவர் செளத்தியின் பந்தில் ஸ்டம் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார்.

அவுஸ்திரேலிய அணியின் உபதலைவர் மைக்கல் கிளார்க், வைட் ஜோடி சிறப்பான முறையில் நியூசிலாந்து அணியினரின் பந்துகளை சரியாக கனித்து ஆடி இருவரும் ஆட்டமிழக்காமல் முறையே 24,22 ஓட்டங்களைப் பெற்றனர்.

இதேவேளை அவுஸ்திரேலிய அணி 34 ஓவர்களில் இவ் வெற்றி இலக்கை அடைந்தமை குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியின் ஆட்ட நாயகனாக மிக்சல் ஜோன்சன் தெரிவானார்.

நாக்பூரில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் ஏ பிரிவு ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட நியூசிலாந்து கடைசியாக 46 வது ஓவரில் 206 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

துவக்கத்திலிருந்தே மோசமாக ஆடி வந்த நியூசிலாந்து அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களான டெய்ட், லீ, ஜோன்சன் என்ற மூவர் கூட்டணியின் துல்லிய வீச்சுக்கு ஈடு கொடுக்க முடியாமல் 73 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தட்டுத்தடுமாறியது.

ஆனால் அதன் பிறகு ஒழுங்காக ஆடுவதற்கென்று களமிறங்கினார். நதன் மெக்கல்லம், ஜேமி கவ்வுடன் இணைந்து ஸ்கோரை இருவரும் 121 ஓட்டங்களுக்கு உயர்த்தினர். அப்போது லெக் ஸ்பின்னர் ஸ்மித் பந்தில் ஹவ் எல்.பி.டபிள்யூ ஆனார். இப்போதும் நியூஸிலாந்து பாதுகாப்பு எல்லையில் இருக்கவில்லை.

அதன் பிறகு கப்டன் டேனியல் வெட்டோரி, நதன் மெக்கல்லத்துடன் இணைந்து புத்தி சாதுரியத்தைப் பயன்படுத்தி விளையாடினர். அப்படியும் ஓட்ட வேகம் கூடவில்லை. ஆனால் பொறுமையாக விக்கெட் விழாமல் இருவரும் 12 ஓவர்களில் 54 ஓட்டங்களைச் சேர்த்தனர்.

நதன் மெக்கல்லம் 76 பந்துகளைச் சந்தித்து 3 பவுண்டரிகளுடன் 52 ஓட்டங்கள் எடுத்து ஜோன்சன் பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.

அதன் பிறகு வெட்டோரி சில அபாரமான ஷொட்களை விளையாடினார். ரிவர்ஸ் ஸ்வீப், ஸ்வீப், ஒதுங்கிக் கொண்டு தூக்கி அடித்தல் என்று ஆடத் துவங்கினார்.

துடுப்பாட்ட பவர் பிளே எடுத்து 2.1 ஓவர்களில் 18 ஓட்டங்கள் எடுக்கப்பட்டது. 43 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 44 ஓட்டங்கள் எடுத்த வெட்டோரி, பிரெட் லீ பந்தில் ஹடினிடம் பிடி கொடுத்து வெளியேற சவுத்தீ 6 ஓட்டங்கள் எடுத்து மோசமான ஷொட் ஒன்றை ஆட முயல பந்து வானில் எழும்பியது பொண்டிங் அதனை பிடித்தார்.

ஜோன்சன் 9.1 ஓவர்களில் 33 ஓட்டங்கள் கொடுத்து 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார். ஷோன் டெய்ட் 3 விக்கெட்டுகளையும், ப்ரெட் லீ, வாட்சன், ஸ்மித் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

ஓவர்களை மிக மெதுவாக வீசி வந்த பொண்டிங் அபராதத்திலிருந்து தப்பினார். காரணம் நியூஸிலாந்து 1.05 மணிக்கு ஆல் அவுட்டானது முழுவதும் விளையாடியிருந்தால் ஆட்டம் 1.30 மணி வரை நீடித்திருக்கும் இதனால் பொண்டிங் தப்பினார்.

No comments: