மாணவர்க்கான சத்தியசாயி நித்திலக் கோவை – பகவான் பாபா

.
11. வெப்பமாணி

ஒரு ‘தெர்மாமீட்டர்’ (உடல் வெப்பத்தை அளவிடும் கருவியாகிய ‘வெப்பமானி’) எவ்வாறு உடம்பின் வெப்பத்தை சரியாக அளந்து காட்டுகின்றதோ, அதேபோல்தான் உங்களின் பேச்சு (சொற்றகள்), ஒழுக்கம், நடத்தை ஆகியவை உங்களுடைய மனத்தின் தன்மை, மனத்தின் போக்குகள் ஆகியவற்றைக் காட்டும்! மேலும், அது உங்களை பீடித்துள்ள ‘உலகியல்’ என்ற காய்ச்சல் எந்த அளவுக்கு உயர்ந்துள்ளது என்பதையும் காட்டும்.

12. புதுத்துணி – பழைய துணிகுழந்தைகள் என்பவர்கள் ‘புதுத்துணி’ போன்றவர்கள். நீங்கள் விரும்புகின்ற எந்த வண்ணத்தினை (கலர்) வேண்டுமானாலும் கொடுக்கலாம். நாம் செய்ய வேண்டியது விருப்பப்பட்ட வண்ணத்தில் அந்தத் துணியை நனைக்க வேண்டியதுதான். அது போதும்! ஆனால், பெரியவர்களோ பழைய துணி போன்றவர்கள். பழைய துணியானது நாம் கொடுக்க விரும்பும் வண்ணத்தினை (கலரை) மிக எளிதில் ஏற்றுக்கொள்ளாது. அதனை நன்றாகவும் உள்ளே ஈர்த்துக் கொள்ளாது!13. எதற்காக?
கல்வி என்பது வாழ்க்கைக்காக!
வாழ்க்கை என்பது அன்புக்காக!
அன்பு என்பது மனிதனுக்காக!
மனிதன் என்பவன் சேவைக்காக!
சேவை என்பது சமூகத்திற்காக!
சமூகம் என்பது நாட்டுக்காக!
நாடு என்பது உலகிற்காக!
உலகம் என்பது அமைதிக்காக!


14. அறிவா? ஒழுக்கமா?
சிலர் ‘அறிவு’ தான் விலைமதிப்பற்றது என்று கூறுவர். ஆனால் ‘ஒழுக்கம்’ என்பதே அறிவைக் காட்டிலும் மிகுந்த மதிப்புடையது என்று அறிக!


15.  முழுமை ஸ்ரீ பூர்ணம்!


‘அது’ முழுமையானது. ‘இது’வும் முழுமையானது! ‘அந்த’ முழுமையிலிருந்து ‘இந்த’ முழுமை வெளிப்பட்டது! ‘இந்த’ முழுமை, ‘அந்த’ முழுமையிலிருந்து வந்தாலும், ‘அந்த’ முழுமை முழுமையாகவே உள்ளது! (அது ஸ்ரீ பிரமன், கடவுள் ; இது ஸ்ரீ படைப்பு)

(பூர்ண மத: பூர்ணமிதம்
பூர்ணாத் பூர்ணமுதச்சயதே
பூர்ணஸ்ய பூர்ணமாதாய
பூர்ணமேவ அவஸிஷ்யதே!)


தொடரும்

 


No comments: