உலகச் செய்திகள்


அடக்குமுறைகளை மீறி மத்திய கிழக்கு முழுவதும் பரவும் மக்கள் எழுச்சிகள்

சர்வாதிகார மேற்கத்தேய ஆதரவு பெற்ற ஆட்சியாளர்கள் மிருகத்தனமான படுகொலைகளை நடத்தியும்கூட மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவில் வெகுஜன ஆர்ப்பாட்டங்களும் இராணுவத்தினருடனும் பொலிஸுடனும் கடுமையான மோதல்களும் தொடர்ந்தன. கடுமையான தெரு மோதல்களும் பல இறப்புகளும் நடந்த பஹ்ரைன்,லிபியா மற்றும் யேமன் நாடுகளைத் தவிர அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களும் வேலைநிறுத்தங்களும் மற்ற அமெரிக்க வாடிக்கை நாடுகளான சவூதிஅரேபியா,குவைத் மற்றும் ஜோர்தானிலும் நடைபெற்றன.


டியூனீசிய,எகிப்திய எழுச்சிகள் இப்பிராந்தியம் முழுவதும் எதிர்ப்புகளைத் தூண்டியுள்ளன. இவை அல்ஜீரியாவிலிருந்து ஈராக் வரை நடைபெறுவதுடன், மூலோபாய வகையில் முக்கியமான உலகின் எண்ணெய் செழிப்புப் பகுதியிலிருக்கும் பிராந்திய சர்வாதிகாரங்களை நீண்ட நாட்களாக நம்பியிருக்கும் ஒபாமா நிர்வாகம் மற்றும் ஐரோப்பாவின் முக்கிய சக்திகளுக்கும் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளன.

தொடர்ச்சியாக ஐந்தாவது நாளன்று சிறிய தீவு முடியாட்சி நாடான பஹ்ரைனில் குருதி கொட்டிய மோதல்கள் நடந்தன. இங்கேதான் அமெரிக்கக் கடற்படையின் ஐந்தாவது கடற்படைப்பிரிவுத் தளம் அமைந்துள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் குறைந்தபட்சம் மூன்றுபேர் கொல்லப்பட்டனர். ஒரு மில்லியனுக்கும் குறைவான வயது வந்தவர்கள் இருக்கும் நாட்டில் மிகப் பெரும் கூட்டமாக 25 ஆயிரம் பேர் முந்தைய தினம் கொல்லப்பட்ட ஆர்ப்பாட்ட எதிர்ப்பாளர்களுக்கு நடந்த இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.

வியாழக்கிழமை அதிகாலையில் பொலிஸார் பேர்ள் சந்தியில் தாக்குதல் நடத்தி நான்கு பேரைக் கொன்று கிட்டத்தட்ட 200 பேரைக் காயப்படுத்திய பின் தலைநகர் மனாமாவின் மையப்பகுதியில் இதுதான் முதல் எதிர்ப்பு ஆகும்.

சல்மனியா மருத்துவமனையில் மருத்துவர் ஒருவர் அல்ஜசீராவிடம் மருத்துவமனையில் காயமுற்றவர்கள் நிரம்பியிருந்தனர் என்றார். எங்களுக்கு உதவி தேவை! எங்கள் ஊழியர்கள் பெரும் சேவை புரிகின்றனர். சுடுபவர்களோ ஆர்ப்பாட்டக்காரர்களின் கால்களில் சுடாமல் தலைகளில் சுடுகின்றனர். மக்களுடைய மூளைகள் சிதறியடிக்கப்படுகின்றன.

ஓர் எதிர்ப்பாளர் செய்தி நிறுவனத்திடம் கூறினார். அவர்களிடத்தில் சிறப்பு இயந்திரத் துப்பாக்கிகள் உள்ளன. சாதாரண துப்பாக்கிகளோ அல்லது கைத்துப்பாக்கி ஆயுதங்களோ அல்ல,ஓடுபவர்களையும் அவர்கள் குறிவைத்துச் சுடுகின்றனர். ஹுசைன்அலி என்னும் மற்றொரு ஆர்ப்பாட்டக்காரர் பாலத்திலிருந்து எந்த எச்சரிக்கையும் இல்லாமல் சுடத் தொடங்கினார். பின் அவர்கள் தங்கள் கார்களிலிருந்தும் சுட்டனர். இது பயங்கரமானது. பயங்கரக்கனவு போன்றது. சிறு குழந்தைகளும் பெண்களும் தடுமாறி விழுந்த வண்ணம் இருந்தனர்.

வாஷிங்டனுடன் ஐயத்திற்கு இடமின்றி நெருக்கமாக ஒத்துழைக்கும் பஹ்ரைனின் முடியாட்சி தன்னை உறுதிப்படுத்திக் கொள்ளப் பார்க்கிறது. பட்டத்து இளவரசர் சல்மான் பின் ஹமத் அல் கலீபா ஒழுங்கு மீட்கப்பட்டவுடன் ஒரு தேசிய உரையாடலுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அத்தகைய உரையாடல் ஆட்சியைப் பாதுகாக்கத்தான் உதவுவதும் சற்றே திருத்தப்பட்ட வடிவமைப்பு என்றாலும் அதற்கு உத்தியோகபூர்வமாகப் பொறுத்துக் கொண்டிருக்கும் எதிர்ப்புக் குழுக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. ஏனெனில் ஒரு வாரம் முன் வீழ்ச்சியடைந்த ஹொஸ்னி முபாரக்கைத் தொடர்ந்து அதைத்தான் எகிப்திய இராணுவமும் செய்து வருகிறது.

பேர்சிய வளைகுடாவில் சவூதிஅரேபியாவுக்கும் ஈரானுக்குமிடையேயுள்ள பஹ்ரைன் அமெரிக்கக் கடற்படைப் பிரிவுகளின் மத்திய கட்டுப்பாட்டுக்கான இருப்பிடமாகும். வாஷிங்டனுக்கு இது முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. ஏனெனில் வளைகுடா மூலம் உலகின் எண்ணெயில் 40 சதவிகிதம் எடுத்துச் செல்லப்படுகிறது. செல்வம் கொழிக்கும் அரச குடும்பம் மற்றும் அரசைக் கட்டுப்படுத்தும் உயரடுக்கிற்கு தீவிர உதவியை அமெரிக்கா எப்பொழுதும் அளித்து வருகிறது.

ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் வெளிவிவகாரச் செயலர் ஹிலாரி கிளின்டனும் நேற்று பஹ்ரைன் மற்றும் லிபியா,யேமனில் ஏற்பட்டுள்ள வன்முறை பற்றி ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளனர். அமைதியான எதிர்ப்பாளர்கள் மீது இந்நாடுகளில் அரசாங்கங்கள் பயன்படுத்தும் வன்முறைகளை அமெரிக்கா கண்டிக்கிறது. எங்கு இப்படி நிகழ்ந்தாலும் அமெரிக்கா அதைக் கண்டிக்கும் என்று ஒபாமா கூறினார்.

அதனால், கடந்த டிசம்பர் மாதம் கிளின்டன் பஹ்ரைனுக்குச் சென்றிருந்தபோது அப்பிராந்தியத்தில் ஒரு முன்மாதிரிப் பங்காளி எனப் புகழ்ந்திருந்தார். முக்கிய எதிர்ப்பு அரசியல்வாதிகள் கைது செய்யப்படுதல்,சித்திரவதைப்படுத்தப்படுதல் பற்றி வினவப்பட்டதற்கு அவர் கிளாஸின் அரைவாசிப் பகுதி நிரம்பியிருப்பதை நான் காண்கிறேன் என்றார். அரசாங்கம் ஜனநாயகப் பாதையில் கொண்டுள்ள உறுதிப்பாடு பற்றியும் பஹ்ரைன் அப்பாதையில் செல்வது பற்றியும் நான் உவப்பு அடைகிறேன் என்றார் அவர்.

அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் பஹ்ரைனில் நடத்தப்படும் அடக்குமுறைக்குக் கொண்டுள்ள பொறுப்பானது பாதுகாப்புப் படைகளால் இங்கிலாந்து கொடுத்த ஆயுதங்களை ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராகப் பயன்படுத்தின என்று வந்துள்ள தகவல்களினால் அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது. ஐணஞீஞுணீஞுணஞீஞுணt செய்தித்தாள் மேற்கோளிட்டுள்ளபடி பிரிட்டிஷ் அரசாங்க அறிக்கையொன்று பிரிட்டிஷ் ஆயுத உற்பத்தியாளர்களுக்கு இகு கையெறி குண்டுகள்,தகர்ப்பு வெடிகள்,புகைத் தொகுப்புகள் மற்றும் இடிமுழக்க வெடிகள் ஆகியவை பஹ்ரைனுக்கு விற்க லண்டன் ஒப்புதல் கொடுத்துள்ளது எனத் தெரிவிக்கிறது.

கடந்த மூன்று தசாப்தங்களாக இஸ்ரேல்,எகிப்திய அரசாங்கங்களுக்கு அடுத்து மூன்றாவதாகப் பெரியளவில் அமெரிக்க இராணுவ உதவியைப் பெறும் நாடான அண்டைய முடியரசான சவூதிஅரேபியாவில் இதன் உட்குறிப்புகள் பற்றியும் வாஷிங்டனின் கவலைகள் சற்றும் குறைந்தவை அல்ல. சவூதிஅரேபியாவில் அமெரிக்க தூதராக முன்பிருந்த இடச்ண் ஊணூஞுஞுட்ச்ண அல் ஜசீராவிடம் சவூதிகள் அதிக அமைதியின்மையைப் பஹ்ரைனில் பொறுத்துக்கொள்ளமாட்டார்கள். ஏனெனில் சவூதிஅரேபியாவின் கிழக்கேயுள்ள முக்கிய எண்ணெய் வயல்களுக்கு அருகே அது உள்ளது என்றார்.

இதேபோல் உலக எண்ணெய் நிறுவனங்களும் தங்கள் உள்ளூர் முடியாட்சித் தலைவர்கள் ஒருவேளை வீழ்ச்சியடையக்கூடுமோ என்று உன்னிப்புடன் கவனிக்கின்றனர். தொழிற்துறை பற்றிய வலைத்தளமான கடூச்ttண் கூறுவதாவது;

பெரும் எண்ணெய்வள (கோலியாத் போல்) நாடான சவூதிஅரேபியா உலகத்திற்கான எண்ணெய் வழங்கலுக்குத் தடையேற்படுத்தும் திறன் எதையும் சமாளிக்கும் அளவுக்குக் கணிசமான இருப்பு உற்பத்தியைக் கொண்டுள்ளது. அண்டை நாடான பஹ்ரைனில் குருதிகொட்டும் கலகங்கள் நடைபெறுகின்றன. அதன் தெற்கு எல்லையான யேமனிலோ பெருகிய அரசாங்க எதிர்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

லிபியா

தொடர்ச்சியாக தீவிர மோதல்கள் லிபியா முழுவதும் நடந்தன. ஆர்ப்பாட்டக்காரர்கள் 41 ஆண்டுகால கேணல் மூஅம்மர் கடாபியின் ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்று கோரினார்கள். மேற்கிற்கும் பெரும் எண்ணெய் நிறுவனங்களுக்கும் சமீபத்திய ஆண்டுகளில் மிக நெருங்கிய நண்பராக அவர் உள்ளார். செய்தி ஊடகத்தினர் லிபியாவிலிருந்து தகவல்களைச் சேகரிப்பது மிகவும் கட்டுப்பாட்டிற்குள் உள்ளது. ஆனால், பல ஆதாரங்களும் குறைந்தபட்சம் 25 எதிர்ப்பாளர்களாவது கொல்லப்பட்ட வியாழன் சீற்ற தினத்திற்குப் பின்னர் எழுச்சிக் காட்சிகள் அதிகம் என விபரிக்கின்றன.

அஊக யிடம் அதிகாரிகளுக்கு நெருக்கமான ஆதாரம் அல் பைடா நகரத்தைச் சுற்றிப் பாதுகாப்புப் படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கிறது. இது ஆட்சி எதிர்ப்பாளர்கள் நகரத்தின் கட்டுப்பாட்டை உள்ளூர் பொலிஸ் உதவியுடன் கைப்பற்றிவிட்டனர் என்னும் ராய்ட்டர் தகவலையடுத்து வந்துள்ளது.

ஙுணித கூதஞஞு வீடியோக் காட்சிகள் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான பெங்காசித் தெருக்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் அணிவகுத்து அரசாங்க எதிர்ப்புக் கோஷங்களைக் கூறிக்கொண்டு செல்வதைக் காட்டுகின்றன. எதிர்ப்பாளர்கள் பெங்காசியில் ஒரு உள்ளூர் வானொலி நிலையத்தின் மீது தீ வைத்தனர். கட்டிடத்தில் பாதுகாவலர்கள் அகற்றப்பட்ட பின் இது நடந்தது. கண்ணால் பார்த்தவர்களும் ஒரு பாதுகாப்பு ஆதாரமும் அஊக யிடம் மேற்கூறிய தகவல்களைத் தெரிவித்தது. பெங்காசியில் ஒரு பொறியியல் வல்லுநராக இருக்கும் மஹ்மூத் எல் பெர்க்கவி அல் ஜசீராவிடம் நகரத்தில் ஒரு படுகொலை நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்றார்.

அஊக பல உள்ளூர் ஆதாரங்களிலிருந்து சேகரித்துள்ள எண்ணிக்கைத் தகவலின்படி குறைந்தபட்சம் 41 பேராவது செவ்வாயன்று ஆர்ப்பாட்டங்கள் முதலில் வெடித்ததில் இருந்து உயிரிழந்துள்ளனர். லிபிய அதிகாரிகள் நாட்டின் மேற்குப் பகுதி அமைதியாகவுள்ளது எனக் கூறுகின்றனர். ஆனால், தலைநகர் ட்ரிபோலி உட்பட மற்ற நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் பற்றிய தகவல்கள் வந்துள்ளன.

யேமன்

மற்றொரு அமெரிக்க நட்பு நாடான யேமனும் நேற்று பெருகிய எதிர்ப்புகளை அடக்குவதற்குக் கடுமையான வன்முறையைப் பயன்படுத்தியது. இது ஞாயிறு வெடித்த அமைதியின்மையிலிருந்து இறந்தவர்களின் எண்ணிக்கையை 10 என ஆக்கியுள்ளது. ஆட்சிக்கு எதிர்ப்புக் காட்டும் ஆர்ப்பாட்டத்தினர் கொந்தளிப்பு நிறைந்த டாயேஸ் நகரத்தில் வெள்ளியன்று கையெறி குண்டால் தாக்கப்பட்டனர். இதில் இருவர் இறந்து போனார்கள். தெற்கு நகரமான யேமனில் பல பகுதிகளில் கடுமையான மோதல்கள் ஏற்பட்டன. நான்குபேர் கொல்லப்பட்டனர். குறைந்தபட்சம் 27 பேர் காயமுற்றனர். தலைநகர் சானாவிலும் மோதல்கள் வெடித்தன. ஆட்சி எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் நான்கு பேர் காயமுற்றனர் என்று சாட்சிகளும் செய்தியாளர்களும் கூறுகின்றனர். செய்தியாளர்கள் அடி,உதை தாக்குதலுக்குள்ளானார்கள்.

நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்கள் வாராந்திர முஸ்லிம் பிரார்த்தனைக்குப் பின் மைய டேயஸுக்கு வந்து ஜனாதிபதி அலி அப்துல்லா சலே அகற்றப்பட வேண்டும் என்று கோரிய நிகழ்வில் கையெறி குண்டுத் தாக்குதல் நடந்தது. கையெறி எதிர்ப்பாளர்கள் மீது அரசாங்க எண்கள் பொதித்த ஒரு காரில் இருந்து வீசியெறியப்பட்டது என்று ஒரு உள்ளூர் அதிகாரி அஊகயிடம் கூறினார்.

சானாவில் பல செய்தியாளர்கள் ஆளும் பொதுமக்கள் காங்கிரஸ் (எகஇ) ஆதரவாளர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டனர். தடிகளும்,கோடரிகளும் அவர்களால் பயன்படுத்தப்பட்டன என்று அஊக நிருபர் ஒருவர் தெரிவித்துள்ளார். பெரும்பாலும் மாணவர்களைக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் வாரந்தர முஸ்லிம் பிரார்த்தனைக்குப் பின்னர் குழுமியிருந்தனர். ஆட்சி அகற்றப்பட வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர் என அவர்கள் கோஷமிட்டனர்.



சவூதி அரேபியா,குவைத்,ஜோர்தான்

அமைதியின்மை,சவூதி அரேபியா மற்றும் குவைத்திலும் பரவியது. மீண்டும் மற்றொரு முக்கிய அமெரிக்க ஆதரவுடைய அரசான ஜோர்தானில் வெளிப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். அரசர் அப்துல்லா நிதிய மாவட்டத்திலும் தலைநகர் ரியாத்திலும் அரசர் சௌத் பல்கலைக்கழகத்திலும் சவூதிஅரேபியாவிலுள்ள வெளிநாட்டுக் கட்டிடத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். தொழிலாளர்கள் அவர்களுடைய ஊதியங்கள் அல்லது கூடுதல் பணிநேர ஊதியங்கள் கொடுக்கப்படவில்லை என்பதற்காக வேலைநிறுத்தம் செய்தனர் என்று அரபு நியூஸ் கூறுகிறது.

குவைத்தில் குறைந்தபட்சம் ஆயிரம் நாடற்ற அரேபியர்கள் குவைத் நகரத்துக்கு வடமேற்கே ஜஹ்ரா என்னும் இடத்தில் குடியுரிமை கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதையொட்டி பொலிஸார் டசின்

கணக்கானவர்களை கைது செய்தனர். எண்ணிக்கை குறிப்பிடப்படாத காயமுற்ற எதிர்ப்பாளர்களை ஏற்றிய அம்புலன்ஸ் வாகனங்கள் விரைந்தன. அதன்பின் பாதுகாப்புப் படையினர் அவ்விடத்திலிருந்து அகன்றனர். பாதுகாப்புப் படையினர் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க புகைக்குண்டுகள், தண்ணீர் பாய்ச்சுதல் ஆகியவற்றைப் பயன்படுத்தினர். குவைத்தில் ஏறக்குறைய ஒரு இலட்சம் நாடற்ற அரேபியர்களுக்குக் குடியுரிமைத்தகுதி இல்லை என்று அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

ஜோர்தானில் தடியை வீசிய வண்ணம் வந்த குண்டர்கள் தலைநகர் அம்மானில் அரசாங்கத்தை எதிர்த்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பாய்ந்தனர். அதிகாரத்தில் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் வேண்டும் என்ற அழைப்பு விடுத்தபின் கலைந்து சென்று கொண்டிருந்த அணிவகுப்பின் மீது குண்டர்கள் தாக்கியதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறுகின்றனர்.

ஜனவரி மாத நடுப்பகுதியிலிருந்தே பொருளாதார,அரசியல் சீர்திருத்தங்களுக்காக அழைப்புக்கொடுத்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அரசர் இரண்டாவது அப்துல்லாவுடைய முழு மந்திரிசபையையும் கடந்த மாதம் நீக்கினார்.இது எதிர்ப்புகளைக் குறைக்கும் நோக்கத்தைக் கொண்டது. ஆனால், அவர் அரசரின் எடுபிடிகளில் ஒருவரான மரௌப் பக்கிட்டைப் புதிய பிரதம மந்திரியாக நியமித்து பலருக்கும் பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது. ஒரு ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் ஜெனரலான பக்கிட் 2005 இல் இருந்து அவர் தேர்தல்களில் தில்லுமுல்லுகளை அப்பட்டமாகச் செய்தபோது 2007 இல் இராஜிநாமா செய்யும் கட்டாயத்துக்குட்பட்ட அவரை ஜோர்தானின் பிரதம மந்திரியாக நியமித்துள்ளார்.

ஜோர்தானிலுள்ள நிலைமை எதிர்ப்புகளுக்கு உந்துதல் கொடுக்கும் தீர்க்க முடியாத சமூக நெருக்கடிக்கு உதாரணமாக உள்ளது.இங்கு வேலையின்மை விகிதம் அதன் 6 மில்லியன் மக்களிடையே மிக அதிகமாக உள்ளது. அவர்களும் பெரும்பான்மையினர் 25 வயதுக்கும் குறைவானவர்கள். அனைவரும் உலகம் முழுவதும் உணவுப் பொருட்கள்,எரிபொருள் ஆகியவற்றின் விலை உயர்வினால் பெரும் அவதிக்குட்பட்டிருப்பவர்கள். பிராந்தியங்களின் ஆட்சிகளில் எவையும் உலகில் பிற்பகுதிகளில் காணப்படுவது போலவே அனைத்தும் இன்னும் மோசமான சமத்துவமற்ற சமுதாயத்தை வழிநடத்துபவை, மக்களின் பொருளாதார சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு வழியமைக்கவில்லை

நன்றி தினக்குரல்

No comments: