2014 உலகக்கிண்ண சின்னம் அறிமுகம்

.
2014 உலகக்கிண்ண சின்னம் அறிமுகம்
பிரட்மன் வழியில் முரளி


2014ஆம் ஆண்டு கால்பந்தாட்ட உலகக்கிண்ண சின்னம் அறிமுகம் 2014ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் பிரேஸிலில் நடைபெறவுள்ளன. இந்நிலையில் அப்போட்டிக்கான உத்தியோக பூர்வ சின்னத்தினை சர்வதேச கால்பந்தாட்ட சங்கங்களில் சம்மேளனத்தின் தலைவர் ஜோஸப் எஸ்.பிளட்டர் வெளியிட்டு வைத்திருக்கிறார்.

தென்னாபிரிக்காவின் ஜொஹன்னஸ்பேர்க் நகரில் நடைபெற்ற இவ்வைபவத்தில் பிரேஸிலின் ஜனாதிபதி லுயிஸ் இக்னாஸியோ லூலா த சில்வா மற்றும் 2014ஆம் ஆண்டு கால்பந்தாட்ட ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் றிசார்டோ டெக்டீரா ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
 xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx


பிரட்மன் வழியில் முரளி

டெஸ் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறும் முடிவில் எந்தவித மாற்றத்தினையும் முத்தையா முரளிதரன் செய்யமாட்டார் என அவரது முகாமையாளர் குஷில் குணசேகர தெரிவித்துள்ளார்.


சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் 792 விக்கெட்டுக்கள் வீழ்த்தி உலகில் அதிகூடிய விக்கெட் வீழ்த்தியவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரான முத்தையான முரளிதரன் இந்தியாவுடனான முதலாவது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வுபெறப்போவதாக அறிவித்திருந்தார். எதிர்வரும் 18ஆம் திகதி காலியில் நடைபெறும் இந்தியா - இலங்கை போட்டியே முரளியின் இறுதிப் போட்டியாக இருக்கும்.
இந்நிலையிலேயே முரளியின் முகாமையாளர் மேற்படி விடயத்தினை குறிப்பிட்டிருக்கிறார். அவர் மேலும் கூறுகையில்… தற்போது முரளி 792 விக்கெட்டுகளை டெஸ்ட்டில் வீழ்த்தியிருக்கிறார். 800 விக்கெட்டுகளுக்கு இன்னமும் 8 விக்கெட்டுகளே தேவைப்படுகிறது. ஒருவேளை முரளி 799 விக்கெட் எடுத்தாலும் கூட தனது முடிவில் மாற்றம் கொண்டுவந்து அடுத்த போட்டியில் விளையாட மாட்டார். சேர்.டொன் பிரட்மன் தனது இறுதிப் போட்டியில் ஓட்டமெதுவும் எடுக்காமலே ஆட்டமிழந்தார். அவர் தனது முடிவினை மாற்றி அடுத்த போட்டியில் விளையாடியிருந்தால் நிச்சயமாக அவரது சராசரி 100 ஆக இருந்திருக்கும். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. இது அவரது நல்ல குணத்தினை எடுத்துக் காட்டுகிறது. இதேபோல் முரளியும் தனது முடிவில் மாற்றம் கொண்டுவரமாட்டார் என்றார்.

முரளி தனது ஓய்வு பற்றி அறிவிக்கும்போது 800 விக்கெட்டுகள் என்ற சாதனையோடு ஓய்வுபெறுவதை தான் விரும்புவதாக கூறியமை இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments: