தமிழர் புலம்பெயர் நாடுகளில் வதியும் எழுத்தாளர்களின் பார்;வைக்கு……..

.


அன்புடையீர் வணக்கம்,

சர்வதேச ரீதியாக புலம்பெயர்ந்து வாழும் தமிழ் எழுத்தாளர்களைத் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் ஒன்றிணைத்து கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கும் வருடாந்த ஒன்று கூடல்களை நடத்துவதற்கும் இலங்கையில் 2011 ஆம் ஆண்டு ஜனவரியில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் விழாவை நடத்துவதற்காக தீர்மானித்தோம்.. இதுதொடர்பாக ஏற்கனவே பல ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. தங்களது ஆக்கபூர்வமான பங்களிப்புகளையும் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் பெறுவதற்காக இம்மடலை எழுதுகின்றோம்.

கடந்த பத்து ஆண்டு காலமாக (2001-2010) அவுஸ்திரேலியாவில் ஆண்டுதோறும் தமிழ் எழுத்தாளர் விழாக்களை நடத்தியிருக்கும் அனுபவத்தின் தொடர்ச்சியாக இலங்கையில் வதியும் பல எழுத்தாளர்களின் வேண்டுகோளின் நிமித்தம் குறிப்பிட்ட சர்வதேச தமிழ் எழுத்தாளர் விழாவை இலங்கையில் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளோம்.

இலங்கையில் யுத்த நெருக்கடி நீடித்தமையால் இந்த நோக்கம் செயல்வடிவம் பெறுவதில் தாமதம் ஏற்பட்டது. வவுனியாவில் இடைத்தங்கல் முகாம்களிலிருக்கும் தமிழ் மக்கள் தமது சொந்த வாழ்விடங்களுக்கு திரும்பும்வரையில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் விழாவை இலங்கையில் நடத்துவதில்லை என முன்னர் தீர்மானித்திருந்தோம்.

இலங்கையிலும் சில சர்வதேசநாடுகளிலும் வதியும் கலை, இலக்கியவாதிகள் பலருடன் தொடர்புகொண்டு உரையாடியதன் பின்னர், எதிர்வரும் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாத முற்பகுதியில் குறிப்பிட்ட விழாவை இலங்கையில் கொழும்பில் நடத்துவது என தீர்மானித்தோம்.

இதுதொடர்பான விரிவான ஆலோசனைக்கூட்டத்தை இலங்கையில் கொழும்பு தமிழ்ச்சங்க மண்டபத்தில் கடந்த ஜனவரி மாதம் 3 ஆம் திகதி ஞாயிற்றுக்pழமை காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரையில் நடத்தினோம்.

இதற்காக இலங்கைசென்று பல எழுத்தாளர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள், வானொலி, தொலைக்காட்சி ஊடகவியலாளர்களையும் பயிற்சிப்பத்திரிகையாளர்களையும் தகைமைசார் பேராசிரியர்களையும் சந்தித்து கலந்துரையாடினோம்.

முதலாவது ஆலோசனைக்கூட்டம் (03-01-2010) சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் அமைந்தது இக்கூட்டத்திற்;கு மேலே குறிப்பிட்ட அனைத்து துறைகளையும் சார்ந்த சுமார் 120 பேர் வருகைதந்தனர். அனைவருக்கும் மதியபோசன விருந்தும் தேநீர் விருந்தும் வழங்கி உபசரித்தோம்.

இக்கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட 12 ஆலோசனைகள் பின்வருமாறு:

சர்வதேச தமிழ் எழுத்தாளர் விழா நடத்தப்படுவதன் நோக்கம்:

1. தமிழ் இலக்கியம் சர்வதேச ரீதியாக கவனிப்புக்குள்ளாகியிருப்பதனால் தமிழ் இலக்கியப்படைப்புகளில் செம்மைப்படுத்தும் (செவ்விதாக்கம் -ஊழில நனவைiபெ) கலையை வளர்த்தெடுப்பது.

2. தமிழ் இலக்கிய படைப்புகளை பிற மொழிகளில் மொழி பெயர்க்கும் பணிகளை ஊக்குவிப்பதற்காக இத்துறைகளில் ஈடுபடுபவர்களுடன் தொடர்புகளை பேணிவளர்த்து மொழிபெயர்க்கப்படும் தமிழ் படைப்புகளை சர்வதேச ரீதியாக அறிமுகப்படுத்தல்.

3. தமிழ் இலக்கிய படைப்புகளை (நூல்கள் - இதழ்கள்) ஆவணப்படுத்துவது தொடர்பாக இதுகுறித்த சிந்தனைகொண்டவர்களுடன் இணைந்து இயங்குவது.

4. இலங்கையில் இயற்கை அனர்த்தம், யுத்தம், விபத்து ஆகியனவற்றால் பாதிப்புற்ற தமிழ் எழுத்தாளர்களின் குடும்பத்தினருக்கு உதவுவதற்காக ஒரு நம்பிக்கை நிதியத்தை (வுசரளவ குரனெ) உருவாக்குவது.

5. தொடர்ச்சியாக இலங்கையில் வெளியாகும் கலை, இலக்கிய சிற்றேடுகளுக்கு அரச மானியம் பெற்றுக்கொடுப்பது தொடர்பாக ஆராய்ந்து மானியம் பெற்றுக்கொடுக்க முயற்சிப்பது.

6. தமிழ் மக்களிடம் வாசிப்புப்பழக்கத்தை ஊக்குவிப்பதற்கான பணிகளை முன்னெடுப்பது தொடர்பான ஆலோசனைகளை பெறுதல்.

7. நடத்தப்படவிருக்கும் சர்வதேச எழுத்தாளர் விழாவில் கலை. இலக்கியத்துறையில் வாழ்நாள் சாதனையாளர்களை பாராட்டி கௌரவித்தல்.

8. தமிழ் எழுத்தாளர்கள், இலக்கிய மொழிபெயர்ப்பாளர்கள், பத்திரிகை, இதழாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள், ஓவியர்கள் மத்தியில் கருத்துப்பரிவர்த்தனைகளை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்காக உறவுப்பாலத்தை ஆரோக்கியமாக உருவாக்குதல்.

9. இலங்கையிலும் சர்வதேச ரீதியாகவும் இலக்கியத்துறைகளில் ஈடுபடும் இளம் தலைமுறை படைப்பாளிகளின் பங்களிப்புகளுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களை ஊக்குவித்தல். அத்துடன் சிறுவர் இலக்கியத்துறையை மேம்படுத்துதல்.

10. குறும்படம் தொடர்பான பிரக்ஞையை தமிழ் மக்கள் மத்தியில் வளர்த்து தேர்ந்த

சினிமா ரஸனையை வளர்த்தல்.
11. ஓவியக்கலை, ஒளிப்படக்கலை, கணினிக்கலை (புசயிhiஉள) முதலான துறைகளில் ஈடுபடும் இளம் தலைமுறையினருக்கும் இலக்கியப்படைப்பாளிகளுக்கும் மத்தியில் உறவுகளை ஏற்படுத்தும்விதமான காட்சிப்படுத்தும் (னுநஅழளெவசயவழைn) கருத்தரங்கு அமர்வுகளை நடத்துதல்.

12. கூத்துக்கலை, நாடகம், சிறுவர் நாடகம் தொடர்பான கருத்தரங்கு, பயிற்சிப்பட்டறை ஆகியனவற்றையும் அரங்காற்றுகைகளையும் நடத்துதல்.
சகோதர சிங்கள படைப்பாளிகள் மற்றும் கலைஞர்களுக்கும் இந்த ஒன்றுகூடலில் கலந்துகொள்ளும் அனைத்து தமிழ் எழுத்தாளர்கள் கலைஞர்களுக்கும் மத்தியில் புரிந்துணர்வு அடிப்படையில் ஒன்றுகூடல் நிகழ்ச்சியும் விழாவின் இறுதிநாளன்று நடைபெறும்.

எமக்கு கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களின் பிரகாரம் மகாகவி பாரதி, புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், டொமினிக்ஜீவா, செங்கை ஆழியான், மலரண்பன், சாந்தன், உட்பட பல படைப்பாளிகளின் படைப்புகளும் நூற்றுக்காணக்கான தமிழ் சிறுகதை எழுத்தாளர்களின் சிறுகதைகளும் பிற ஆக்கங்களும் சகோதர சிங்கள மொழியில் பெயர்க்கப்பட்டுள்ளன. இதேபோன்று மார்டின் விக்கிரமசிங்கா, கருணாசேன ஜயலத், டி.பி.இலங்கரத்னா, குணசேன விதான, ஜி.பி.சேனாநாயக்கா ஆகியோரின் படைப்புகளும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

பல தமிழ்ப்படைப்புகள் ஆங்கிலத்திலும் பல ஐரோப்பிய மொழிகளிலும் பெயர்க்கப்பட்டிருப்பதுடன் பல ஆங்கில மற்றும் ஐரோப்பிய மொழிப்படைப்புகள் தமிழிலும் பெயர்க்கப்பட்டு வெளியாகியிருப்பதை அறிந்திருப்பீர்கள். இதனை கவனத்தில்கொண்டே இந்த சர்வதேச ஒன்று கூடலில் மொழிபெயர்ப்பு முயற்சிகளுக்காக விசேட கருத்தரங்கு அமர்வும் நடத்தப்படவிருக்கிறது. ஆத்துடன் புலம்பெயர் நாடுகளில் வதியும் பல ஈழத்தமிழ் குழந்தைகள் ஆங்கிலத்தில் பல படைப்புகளை எழுதி நூலுருவில் வெளியிட்டுள்ளனர். இவை சிங்கள வாசகர்களின் கவனத்திற்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. எனவே சிங்கள படைப்பாளிகளுடனான தொடர்புகளை அரசியலாக்கிவிடவேண்டாம் எனவும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

இலங்கையில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் விழா நடத்தப்படும் காலகட்டத்தில் (2011) கலந்துகொள்ளும் வெளிநாட்டு பிரதிநிதிகள், இலக்கிய சுற்றுலாவுக்கு அழைத்துச்செல்லப்பட்டு இலங்கையில் பல பாகங்களிலும் கலை இலக்கிய சந்திப்புகளுக்கு ஒழுங்குசெய்யப்படும்;.

செய்திமடல் --02
குறிப்பிட்ட சர்வதேச ஒன்றுகூடலானது கலை,இலக்கிய உணர்வுள்ளவர்களின் ஆதரவு அனுசரணைகளுடன்தான் நடைபெறவிருக்கிறது. இதிலே எந்தவொரு அரசுகளினதோ அரசியல் இயக்கங்களினதோ ஈடுபாடு இல்லை என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

இலங்கையில் பிரதேச ரீதியாக நடைபெற்ற சந்திப்புகள் பற்றிய விபரம்:-

1. கரவெட்டியில் வடமராட்சி பிரதேச படைப்பாளிகளுடன் 11-01-2010 இல் சந்திப்பு நடைபெற்றது.

2. யாழ்ப்பாணத்தில் 13-01-2010 ஆம் திகதி கொக்குவிலில் சர்வதேச ஒன்றுகூடல் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது.

3. யாழ். குடாநாட்டு படைப்பாளிகள் ஓவியர்களுடன் கலந்துரையாடல் சந்திப்பு 14-01-2010 ஆம் திகதி நல்லை ஆதீனம் மண்டபத்தில் நடந்தது.

4. வவுனியாவில் 15-01-2010 சுத்தானந்த இந்து இளைஞர் மண்டபத்தில் வவுனியா மாவட்ட படைப்பாளிகளுடன் சந்திப்பு நடைபெற்றது.

5. கிழக்கு பல்கலைக்கழகத்தில் கலைப்பீட மாணவர்களுடன் 17-01-2010 ஆம் திகதி நடைபெற்ற சந்திப்பில் சர்வதேச ஒன்றுகூடல் பற்றிய விளக்கமளிக்கப்பட்டது.

6. 18-01-2010 மட்டக்களப்பு ஆசிரிய பயிற்சிக்கலாசாலையில் நடந்த கூட்டத்திலும் இப்பிரதேசத்தைச்சேர்ந்த படைப்பாளிகளுடன் சந்திப்பு கலந்துரையாடல் நடந்தது.

7. 20-01-2010 ஆம் திகதி கொழும்பில் பூபாலசிங்கம் புத்தகசாலை பணிமனையில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றுகூடலுக்கான நிருவாகக்குழுவின் கூட்டம் நடைபெற்றது.

இச்சந்திப்புகளில் பலரும் ஆர்வமுடன் கலந்துகொண்டு தத்தமது கருத்துக்களை தெரிவித்தனர்.

ஜனவரி 22 ஆம் திகதி சர்வதேச ஒன்றுகூடலின் அமைப்பாளர் முருகபூபதி, அவுஸ்திரேலியா திரும்பநேர்ந்தமையால் திருகோணமலையிலும் மலையகத்திலும் இச்சந்திப்புகளை நடத்தமுடியாதுபோனது.

எனினும் எமது சர்வதேச ஒன்று கூடலின் இலங்கை இணைப்பாளராக ஊக்கமுடன் செயற்படும் ‘ஞானம்’ ஆசிரியர் டொக்டர் தி.ஞானசேகரன் சமீபத்தில் மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களுக்குச்சென்று சர்வதேச ஒன்றுகூடல் தொடர்பான சந்திப்புகளை நடத்தியுள்ளார். அவர் விரைவில் யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் மலையகப்பிரதேசங்களுக்கும் சென்று படைப்பாளிகளை பத்திரிகையாளர்களை சந்தித்து ஒன்றுகூடலின் செயற்பாடுகளை விளக்கும் நிகழ்ச்சிகளை ஒழுங்குசெய்வார்.

கொழும்பில் தற்போது சர்வதேச ஒன்றுகூடலுக்கான ஆரம்ப கட்டப் பணிகள் துரிதமாக நடந்துகொண்டிருக்கின்றன. ஓன்றுகூடலின் நிகழ்ச்சிகளுக்காக சில இணைப்பாளர்கள் கொழும்பில் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களைப்பற்றிய விபரங்கள் இங்கே தரப்படுகின்றன.
எனவே இம்மடலை அலட்சியம் செய்யாமல் படித்து, இச்சர்வதேச ஒன்றுகூடலில் கலந்துகொள்ள விரும்புபவர்கள், கட்டுரைகள் சமர்ப்பிக்க விரும்புபவர்கள் காலதாமதமின்றி சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்புகொள்ளவும். தாமதங்கள் பல ஆக்கபூர்வமான பணிகளை பெரிதும் பாதிக்கும் என்பது தாங்கள் அறிந்ததே.

மாதிரி விண்ணப்பப்படிவங்களும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

அதனை பிரதியெடுத்து பூரணப்படுத்தி தாமதமின்றி ஒன்றுகூடலுக்காக கொழும்பில் இயங்கும் அலுவலகத்தின் முகவரிக்கு தபால் மூலம் தங்கள் ஓளிப்படத்துடன் அனுப்பிவைக்கவும்.

நடைபெறவிருக்கும் சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றுகூடலில் கலந்துகொள்ள விரும்பும் புலம்பெயர் நாடுகளில் வதியும் தமிழ்ப்படைப்பாளிகள் மற்றும் கலை,இலக்கிய ஆர்வலர்கள் தயவுசெய்து விண்ணப்பப்படிவங்களை பூர்த்தி செய்து கொழும்பு முகவரிக்கு அனுப்பிவைக்கவும். எமது நிருவாகப்பணிகளுக்காகவும் வருகைதருபவர்களின் தங்குமிடம் மற்றும் போக்குவரத்து உணவு உட்பட சகல வசதிகளையும் செய்துகொடுப்பதற்காகவுமே குறிப்பிட்ட விண்ணப்பப்படிவங்கள் கோரப்படுகின்றன.

விழாவின் இலங்கை இணைப்பாளரின் குறிப்பு:

சர்வதேச தமிழ் எழுத்தாளர் விழா 2011 ஜனவரி 6இ7இ8இ9 ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ளது. இத்தினங்களில் தினமும் காலை 9.00 மணிமுதல் மாலை 5.00 மணிவரை கருத்தரங்குகளும் மாலை 6.00 மணிமுதல் கலைநிகழ்ச்சிகள் குறுந்திரைப்படம்இ இசைஇ நாடகம்இ நடனம் போன்றவையும் இடம்பெறும். இவற்றை ஒழுங்கமைப்பதற்கென இணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.. கருத்தரங்குகளிலோ கலைநிகழ்ச்சிகளிலோ பங்குபற்ற விரும்புவோர் அவற்றிற்கென நியமிக்கப்பட்ட இணைப்பாளர்களுடன் தொடர்புகொண்டு தாம் எவ்வகையில் தமது பங்களிப்பினை செய்ய விரும்புகின்றனர் என்பதைத் தெரியப்படுத்தும்படி வேண்டப்படுகின்றனர். கருத்தரங்குக்கான கட்டுரைகள் 15-09-2010க்கு முன்னர் இணைப்பாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படல் வேண்டும். கட்டுரைகள் முழுத்தாளில் ஆறுபக்கங்களுக்கு மேற்படாது இருத்தல் அவசியம்.

தி. ஞானசேகரன்
(இலங்கை இணைப்பாளர்)


(1)சிறுவர் இலக்கியம்

O.K.GUNANATHAN
No. 64, KATHIRKAMAR VEETI,
BATTICOLOA
T.P:065-2226658
0776041503

(2)ஈழத்து இலக்கியம்

VASANTHY THAYAPARAN
40, LILLY AVENUE,
COLOMBO -06
T.P.:011-2508170

(3)உலகத் தமிழ் இலக்கியம்,

(4)செவ்விதாக்கம்(Editing), ஆவணப்படுத்தல்

T.GNANASEKARAN .
3-B, 46TH LANE
COLOMBO -06
T.P.:+94112586013 MOBILE: 0777 306506
FAX :011-2362862
e-mail : editor@gnanam.info


(5)நிகழ்த்து கலைகள், நுண்கலைகள்,

(6)இணையமும் வலைப்பதிவுகளும்

MEMON KAVI
91, CENTRE ROAD,
MATTAKULIA
COLOMBO -15
T.P:0785128804
011-4992550
memonkavi@yahoo.com memonkavi@gmail.com

(7)மொழிபெயர்ப்பு இலக்கியம்

(8)சிங்களதமிழ்எழுத்தாளர்உறவுப் பரிவர்த்தனை

DICKWELLA KAMAL
104, ATULUGAMA
BANDARAGAMA
12530
T.P:0716386955
0382292118

(9)சிற்றிதழ்கள்

ANTONY JEEVA
57, MAHINDA PLACE,
COLOMBO -06
T.P:0776612315 ; 011-2512248



செய்திமடல் ; -03.




சிறுகதைத்தொகுப்பு:

புலம்பெயர் நாடுகளில் வதியும் படைப்பாளிகளின் புத்தம் புதிய (எதிலுமே முன்னர் பிரசுரமாகாத சிறுகதை) சிறுகதைகளின் தொகுப்பு சர்வதேச ஒன்றுகூடலில் வெளியிடுவதற்காக தயாராகின்றது. இதுபற்றிய மேலதிக விபரங்களை இத்தொகுப்பினை தொகுத்துக்கொண்டிருக்கும் டென்மார்க் வி.ஜீவகுமாரனிடம் அறிந்துகொள்ளலாம்.
அவரது தெலைபேசி, மின்னஞ்சல் விபரம்:-
00 45 – 59 46 45 47
00 45 – 22 30 31 34
Jeevakumaran5@gmail.com


கட்டுரைத்தொகுப்பு:

சர்வதேச தரத்தில் அமைந்த கட்டுரைகள் மற்றும் புனைவு சார்ந்த படைப்புகளின் தொகுப்பு நூல் சர்வதேச ஒன்றுகூடலின்போது வெளியிடப்படவிருக்கிறது. இதற்கான ஆக்கங்களை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் மின்னஞ்சலில் அனுப்பவேண்டிய முகவரி:
international.twfes@yahoo.com.au

மேலதிக விபரங்களுக்கு: லெ.முருகபூபதி

தெலைபேசி: 00 61 (03) 9308 1484 , 00 61 41 66 25 766
முகவரி: P-O-BOX 350

CRAIGIEBURN
VICTORIA 3064
AUSTRALIA
முக்கிய குறிப்பு:

லங்கையில் வெளியாகும் மல்லிகை, ஞானம், கலைக்கேசரி, கொழுந்து ஆகிய இதழ்களும் தமிழகத்திலிருந்து வெளியாகும் யுகமாயினி இதழும் சர்வதேச தமிழ் எழுத்தாளர் விழா ஒன்றுகூடல் தொடர்பான சிறப்பிதழ்களை 2011 ஜனவரி மாதம் வெளியிடவுள்ளன. குறிப்பிட்ட இதழ்களுக்கும் படைப்பாளிகள் தமது ஆக்கங்களை அனுப்பிவைக்கலாம்.
இலங்கையில் வெளியாகும் தமிழ்ப்பத்திரிகைகளும் இந்த ஒன்றுகூடலுக்கு அனுசரணையாக ஆதரவு வழங்கவிருக்கின்றன.
நிதிவளம்: இந்தப் பாரிய கடமையை செவ்வனே நிறைவேற்ற நிதிவளமும் தேவைப்படுகிறது. எனவே புலம்பெயர் நாடுகளில் வதியும் படைப்பாளிகள், பத்திரிகையாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் கலை, இலக்கிய ஆர்வலர்களிடமிருந்தும் நிதிப்பங்களிப்பை அன்புடன் கோருகின்றோம். நிதியுதவி அனுப்பும் விபரம் தங்களுக்கு மற்றும் ஒரு மடலில் விரிவாகத்தரப்படும்.
நன்றி
அன்புடன்
லெ.முருகபூபதி
(அமைப்பாளர்)

சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம்


2011 ஜனவரி 6,7,8,9 ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ள சர்வதேச தமிழ் எழுத்தாளர் விழாவில் பங்குபற்றுவதற்கான



விண்ணப்பப் படிவம்

1.முழுப் பெயர்                                                     2. ஆண் / பெண்



3.பிறந்த திகதி                                                      4.பிறந்த இடம்
5. தற்போiதய வதிவிடம;

6.தொலைபேசி                                                     7. தொடர்பு முகவரி



8 மின் அஞ்சல் முகவரி                                   9. கைத் தொலைபேசி


10.ஈடுபாடுகொண்ட துறைகளில் பெற்ற அனுபவங்கள்/வெளியிட்டநூல்கள்/பெற்ற பரிசுகள்/ விருதுகள்


11.ஈடுபாடுகொண்ட துறைகள்
12. பங்காளராயின் எத்தகைய பங்களிப்புச் செய்ய விரும்புகிறீர்?

13.விழாவில் எவ்வகையில் பங்குபற்ற விரும்புகிறீர்? பார்வையாளர்/பங்காளர்
14.விழாவில் பங்குபற்றும் நாட்களில் கொழும்பில் தங்கியிருக்கும் முகவரி


15.வெளிநாட்டவராயின் கொழும்பில் தங்குமிடவசதி விழா ஏற்பாட்டாளரால் ஒழுங்கு செய்துதரப்பட வேண்டுமா?

(16)தேசிய அடையாள அட்டை/   கடவுச்சீட்டு எண்...............................
*விண்ணப் படிவத்துடன் சமீபத்திய பாஸ்போட் அளவிலான புகைப்படம் ஒன்றையும் இணைத்தல் வேண்டும்


• மேலதிக தகவல்கள் ஏதாவது இருப்பின் தனித்தாளில் அவற்றை வேறாக எழுதி விண்ணப்பத்துடன் இணைக்கவும்

கையொப்பம்:.........................................

1 comment:

kirrukan said...

[quote]இவை சிங்கள வாசகர்களின் கவனத்திற்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. எனவே சிங்கள படைப்பாளிகளுடனான தொடர்புகளை அரசியலாக்கிவிடவேண்டாம் எனவும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். [/quote]

காரணம்? எழுத்தாளர்கள் மேடையில் ஏறினாள் பேசுவார்கள் வாள் முனையை விட பேனா முனை கூரியது என்று...ஆனால் இங்கு ஒரு தடையை போடுகிறார்கள் அதுதான் ஏன் என்று விளங்கவில்லை.....மனிதவாழ்க்கை அரசியலுடன் சம்பந்தப்பட்டது....அது இல்லாமல் ஒரு எழுத்தா?
அரசியல் கலக்காத எழுத்தாக இருக்க வேண்டும் என்றால்,அதன் அர்த்தம் சிறிலங்கா இன்னும் சர்வதேச எழுத்தாளர்கள் தாங்கள் நினைத்ததை எழுதக்கூடிய ,பக்குவ நிலைக்கு வர்வில்லை என்றுதான் அர்த்தம்


எழுத்தாளர் விழா வெற்றியடைய வாழ்த்துக்கள்....