இந்திய பணத்திற்கு புதிய குறியீடு

.

இந்திய பணத்திற்கு புதிய குறியீடு ; இனி ஆர்.எஸ்., கிடையாது !

புதுடில்லி : உலக அளவில் உள்ள நாட்டு பணத்தை குறிக்கும் வகையில் பல்வேறு குறியீடுகள் இருப்பது போல் இந்திய கரன்சிக்கும் புதிய குறியீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

 இனிமேல் இந்திய பணத்திற்கு இந்த குறியீடுதான் பயன்படுத்தப்படும். இந்த ரூபாய் அடையாள குறியீட்டுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த விஷயம் குறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் அம்பிகாசோனி டில்லியில் நிருபர்களிடம் தெரிவித்தார்.

சர்வதேச கரன்சிகளான அமெரிக்க டாலருக்கு $ , யூரோவுக்கு €, பவுண்டுக்கு (ப) , ஜப்பான் யென் ஆகிய அடையாள குறியீடு இருப்பது போல இந்திய ரூபாய்க்கும் அடையாள குறியீடு வழங்கப்பட மத்திய அரசு முடிவு எடுத்தது. இதன்படி அடையாள குறியீடு போட்டி ஒன்றும் நாடு முழுவதும் நடந்தது. இதில் போட்டியாளர்கள் தங்களுடைய கற்பனை திறத்தை வெளிக்காட்ட வாய்ப்பு வழங்கப்பட்டன. 5 மாதிரிகள் தேர்வு செய்யப்பட்டு உதயகுமார் என்பவரது படைப்பு ஏற்று கொள்ளப்பட்டன.

இனி இந்திய ரூபாய் மற்றும் காய்ன்களில் இந்த முத்திரை பதிக்கப்பட்டு வெளி வரும். உலக அளவில் இந்த முத்திரையே பயன்படுத்தப்படும். இனி ஆர். எஸ், ஆர். என்று போட வேண்டியிருக்காது. இந்த குறியீட்டை போட்டாலே போதுமானது. ஆங்கிலத்தில் ஆர் என்ற எழுத்தின் பாதியில் அதன் மீது இரண்டு கோடுகள் போட்டது போன்று இருக்கிறது. இந்தியில் “ ர “ என்பது போலவும் இருக்கிறது.

ரூ. 2. 5 லட்சம் பரிசு : தமிழில் ரூ. 100 என்றோ , 100 ரூபாய் என்றோ எழுத வேண்டியிருக்காது. ஆங்கிலத்தில் ஆர்.எஸ்., என்று போட வேண்டாம். இந்த குறியீட்டை போட்டாலே போதும். இந்த குறியீட்டை உருவாக்கிய ஐ.ஐ.டி., படித்த உதயகுமார் என்பவருக்கு அரசு 2. 5 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கும். இந்த குறியீடு இந்திய கலாச்சாரத்தை குறிக்கும் வகையில் இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

என்ன இனிமேல் தயாராகும் கம்ப்யூட்டர்களின் கீ போர்டில் இந்த பட்டன் வைக்க வேண்டியதுதான் அடுத்த வேலையாக இருக்கும்.

No comments: